60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் நான்காவது அளவினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி ,அறிக்கை ஒன்றை வெளியிட்டு சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்தார். மேலும் ,*எதிர்வரும் திங்கட்கிழமை 9 ஆம் திகதி முதல் நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் 4 ஆவது அளவினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்* என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Author: admin
கொழும்பில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிடுமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது. 15/3, வஜிர வீதி, கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர மற்றும் சுற்றாடல் ஆர்வலர் ரஞ்சித் சிசிர குமார ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். அதேவேளை, கொழும்பு, கொள்ளுப்பிட்டி கோட்டைப் பகுதி மற்றும் அலரிமாளிகையை அண்மித்த பகுதிகளில் பொலிஸாரால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளினால் பொதுமக்களின் நடமாடும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த 23ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே இந்த வீதித் தடுப்புகள் அமைக்கப்படுவதற்கான காரணம் என நம்புவதாகவும், அந்த உத்தரவுக்கு அமைய 16 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில்…
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள வெளிநாடு செல்வதற்கான தடை எதிர்வரும் 23ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ஹர்ஷன கெக்குனவல நேற்று(05) இந்த உத்தரவை பிறப்பித்தார். ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார். இவரை கடந்த இரண்டாம் திகதி நீதிமன்றத்தில் ஆஜாராகுமாறு நீதவான் அழைப்பாணை விடுத்திருந்தார். இருப்பினும் அன்றைய தினம் பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதால் நீதிமன்ற அலுவல்கள் இடம்பெறவில்லை. அஜித் நிவார்ட் கப்ரால் மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த 2005 முதல் 2015 வரையான காலப்பகுதியில் பொது நிதியை மோசடி செய்ததாக ஆறு குற்றச்சாட்டுகள் இருவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. *(அரசாங்க தகவல் திணைக்களம்)*
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து கலந்துரையாடுவதற்காக விசேட அமைச்சரவை கூட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு இடம்பெறும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நாலக கொடஹேவா அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர ஹர்த்தால் காரணமாக இலங்கையின் பல துறைகள் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளன. ஹர்த்தாலில் முக்கிய வர்த்தகப் பகுதிகள் மற்றும் பல முக்கிய நகரங்களில் கடைகள் மூடப்பட்டதுடன், ரயில்கள் மற்றும் பேருந்துகள் மற்றும் பொது சேவைகள் உட்பட பல பொது போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டன.
இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்பு தடுப்புகளில் பல ஆண் மற்றும் பெண் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. தேசிய நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளாடைகள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘கோட்டகோகம மற்றும் ஹொரா கோ காம’ எதிர்ப்பு பகுதிகளில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘நந்தேட ஜங்கியக்’ என்ற தொனிப்பொருளின் கீழ் உள்ளாடைகளை பொலிஸ் தடுப்புகளில் தொங்கவிட்டு சர்வதேச உள்ளாடைகள் இல்லாத தினம் 2022 ஐ கொண்டாடினர். ‘நந்தேட ஜங்கியக்’ எனும் தொனிப்பொருள் ஜனாதிபதி நந்தசேன கோட்டாபய ராஜபக்ஷவைக் குறிப்பிடுவதாகும். அதேவேளை “இதுதான் எமக்கு மிச்சம்” எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பாராளுமன்ற நுழைவாயில் ‘ஹொரா கோ காம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு மற்றும் சிலர் உள்ளாடைகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியதைக் காண முடிந்தது. உள்ளாடைகளைக் கூட…
இலங்கைக்கு 2.3 மில்லியன் அமெரிக்க டொலர் (830 மில்லியன் ரூபா) பெறுமதியான அத்தியாவசிய மருந்துகளை நன்கொடையாக வழங்குவதாக பங்களாதேஷ் உறுதியளித்துள்ளது. சுமார் 56 வகையான அத்தியாவசிய மருந்துகள் இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள ஹர்த்தாலை முன்னிட்டு அமைதியான போராட்டங்களில் ஈடுபடுமாறு பொதுமக்களிடம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண வேண்டுகோள் விடுத்துள்ளார். வன்முறையில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார், அத்தோடு, வணிக நிறுவனங்களை மூடுமாறு மிரட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக ஆட்பதிவு திணைக்களத்தின் பொதுமக்களுக்கான சேவைகள் நாளை இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கான ஒரு நாள் சேவை மற்றும் ஏனைய அனைத்து சேவைகளும் இடம்பெறாது என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொலன்னாவை எண்ணெய் முனையத்தை தமது பௌசர்கள் சென்றடைந்த போதிலும் போதியளவு எரிபொருள் வெளியிடப்படவில்லை என பௌசர் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இதனால் இன்றும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர். இதேவேளை இந்தியாவிலிருந்து 40,000 மெட்ரிக் தொன் பெற்றோல் தாங்கி கப்பல் இலங்கைக்கு வந்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஏற்கனவே நாடு முழுவதும் கடுமையான டீசல் மற்றும் பெற்றோல் வரிசைகள் எழுந்துள்ளன மற்றும் சில பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. எனினும் பெற்றோல் களஞ்சியசாலைகளில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் மின் உற்பத்தி நிலையங்களின் பராமரிப்புக்காக வழங்கப்படுவதால் டீசல் இருப்புகளில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை பிரயோகித்த போதிலும் பாராளுமன்றத்திற்கு அருகில் போராட்டம் தொடர்கிறது.