பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் பொது மக்களுக்கு முழுமையான கொரோனா தடுப்பூசியினை கட்டாயமாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் முதல் அமுலாகும் வகையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 திகதி முதல் பொது இடங்களுக்குள் பிரவேசிக்கும் அனைத்து தரப்பினரும் முழுமையாக கொரோனா தடுப்பூசியினை பெற்றிருப்பது அவசியமென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இருப்பினும், குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
Author: admin
எரிபொருள் போக்குவரத்துக்கான புதிய வழிகாட்டுதல்களை எரிசக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. எரிபொருள் போக்குவரத்துக்கான புதிய வழிகாட்டுதல்கள் (1) கிராமப்புற டெப்போக்களுக்கு ரயில் எரிபொருள் போக்குவரத்தின் திறனை 40% முதல் 100% வரை அதிகரிக்கவும். (2) புதிய உரிமம் வழங்கும் செயல்முறையை 1 மாதத்திலிருந்து 1 வாரத்திற்கு விரைவுபடுத்துங்கள். (3) எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் சேகரிப்பு பவுசர்களுக்கு தனி வரி. (4) அடுத்த 2 நாட்களில் பணியில் சேரத் தவறிய டிரான்ஸ்போர்ட்டர்களின் இயக்க உரிமத்தை ரத்து செய்யவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும், மற்றவர்களை வேலைக்குச் செல்வதைத் தடுக்கும் நபர்களின் உரிமத்தை ரத்து செய்யவும். (5) அரசுக்குச் சொந்தமான பவுசர்களின் திறனையும் தினசரி இயக்கும் எண்ணிக்கையையும் அதிகரிக்கவும். (6) தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக டெர்மினல்களில் இருந்து எரிபொருளை விநியோகிக்க 24 மணிநேர செயல்பாடுகள் நடத்தப்பட வேண்டும்
நாடு பாரிய அவலத்தை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் அரசியல்வாதிகள் மக்களின் பக்கம் நிற்க வேண்டும் அதனால் தான் வீதியில் இறங்கியமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நாட்டில் ஆயிரமாயிரம் பிரச்சினைகளால் மக்கள் அவலநிலையில் இருக்கும் போது தன்னால் வீட்டில் இருக்க முடியாது எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் புதிய அரசாங்கத்தை அமைக்காமல் தொடர்ந்தும் ஆட்சியில் இருக்க முற்பட்டால், நாட்டின் பிரச்சினைகள் மேலும் தீவிரமடையும் எனவும் அவர் தெரிவித்தார். நாடு எதிர்நோக்கும் சவால்களை வெற்றிகொள்வதற்கு மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளும் அரசாங்கம் வரவேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை பார்க்கிறதா அல்லது மக்களை தெரிவு செய்ய விடுகிறதா என்பதை மக்கள் உற்று நோக்குவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.…
பிரதமர் பதவி தொடர்பில் தாம் எடுக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். பிரதமர் தனது நிலைப்பாட்டை இன்று காலை ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சர்வகட்சி இடைக்கால அரசாங்கத்தை நியமிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இராஜினாமா செய்யுமாறு கோரிய மகாநாயக்க தேரர்களின் பிரேரணையை உடனடியாக அமுல்படுத்துமாறு பௌத்த பிக்குகள் குழு நேற்று ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் அனைத்துக் கட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதாக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தயாராக அறிவித்துள்ளன.
வவுனியாவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட மூவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று (30.05) மாலை வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக வவுனியாவை சேர்ந்த இரு ஊடகவியலாளர்கள் சென்றுள்ளனர். இதன்போது அதிகமான பொதுமக்கள் வரிசையில் நின்றமையால் அந்த நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஊடகவியலாளர்களால் சில ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடமையில் இருந்த ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. கருத்து முரண்பாடு முற்றிய நிலையில் தாம் ஊடகவியலாளர்கள் என அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தனர். அதனை பொருட்படுத்தாத ஊழியர்கள் கடந்த முறையும் எமது நிரப்பு நிலையம் தொடர்பான செய்தியினை நீதானே பிரசுரித்தாய் என கூறி கடுமையாக தாக்கியுள்ளனர். குறித்த சம்பவத்தில் ஊழியர்களுடன் இணைந்து நிரப்பு நிலையத்தின் முகாமையாளரும் தாக்கியிருந்தார். அத்துடன் அவர்களது மோட்டார் சைக்கிளும்…
மனம்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முச்சக்கரவண்டி ஒன்று பேருந்து ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன் மற்றும் மனைவி உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிஜாப் ஆடை ஒழுங்குக்கு எதிராக பேயாட்டம் போட்டவர்தான் திவ்யா ஹகார்கி. இன்று திருட்டு வழக்கு ஒன்றில் பதினெட்டு நாள்களாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்தவர், போலீசாரின் பிடியில் சிக்கிய போது அதே ஹிஜாப் அணிந்து கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு வந்தார்…. இதே போன்று கர்நாடகத்தில் வெறுப்பு அரசியலை முடுக்கிவிட்டு நெருப்பு மூட்டிய கர்நாடக மூத்த பாஜக தலைவர் வேறொரு திருட்டு வழக்கில் தன்னுடைய அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்… -Jaffna Muslim
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் பொதுஜன பெரமுன கட்சி மட்டத்தில் இதுவரை எவ்வித தீர்மானங்களையும் முன்னெடுக்கவில்லை என கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பிலான ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து எதிர்வரும் வாரம் கட்சி ரீதியில் உறுதியான தீர்மானத்தை அறிவிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவிற்கே பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் உள்ள நிலையில் இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க முயற்சிப்பது எந்தளவிற்கு நியாயமானது என்ற தர்க்கம் காணப்படுவதாகவும் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் போக்குவரத்துக்காக புதிய விநியோகஸ்தர்களை உடனடியாக பதிவு செய்யுமாறு இலங்கை பெட்ரோலிய சேமிப்பு நிலையத்தின் லிமிடெட் நிறுவனத்திற்கு எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளார். தனியார் எரிபொருள் தாங்கிகள் சங்கம் முன்னெடுத்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பதிலளித்து எரிசக்தி அமைச்சர் டுவிட்டர் தளத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடமைக்கு சமூகமளிக்கத் தவறும் விநியோகஸ்தர்களின் பதிவை ரத்து செய்யுமாறும் அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். புகையிரத சேவைகள், அரசாங்கத்திற்கு சொந்தமான பௌசர்கள், பெற்றோல் நிலைய பௌசர்கள் மற்றும் எரிபொருள் போக்குவரத்திற்காக வேலைநிறுத்தம் செய்யாத தனியார் வாடகை பௌசர்களின் சேவைகள் தொடர்ந்தும் இயங்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் இன்றையதினம் (ஏப்ரல் 30) மாலை 4.00 மணியளவில் விநியோகத்திற்காக பயன்படுத்தப்பட்ட மொத்த பவுசர்களின் எண்ணிக்கை 381 எனவும் அவர் கூறினார். சூப்பர் டீசல், ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் என்பன மொத்தமாக எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தனது டுவிட்டர் செய்தியில்…
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யக் கூடாது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி மாளிகையில் நேற்று (29) இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். எனினும், ஜனாதிபதியைப் போலவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் படத்தையும் பெயரையும் பயன்படுத்தி தெரிவு செய்யப்பட்டனர். எனவே, பிரதமர் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரியவருகிறது.