பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட கொடுமைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. பல்கலைக்கழக மாணவர்களினதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் வேந்தர்களின் உரிமையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார். சபாநாயகர் தலைமையில் நேற்று (05) புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை பதவி விலக்கிய எமக்கு வேந்தரை பதவி விலகச் செய்வது பெரியதொரு விடயமல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தில் ஒரு பிரிவினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக வேந்தர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். பல்கலைக்கழகங்களில் பகிடிவதைக்கு அப்பாற்பட்ட பல கொடுமைகள் இடம்பெறுகின்றன.பல்கலைக்கழகத்துக்குள் அடிப்படைவாதம் பாசிசவாதம் உள்ளிட்ட பல முறையற்ற செயற்பாடுகளும் இடம்பெறுகின்றன. பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவன் கைக்கடிகாரம் அணிந்து கொண்டு பல்கலைக்கழகத்துக்கு வரக் கூடாது. முதலாம் ஆண்டு மாணவி சீத்தை துணியிலான ஆடை அணிய வேண்டும். காதணி,…
Author: admin
இவ்வாறு உயிரிழந்தவர் இராவணகொட விஜயபாகுகந்த, மெதகம்மெத்த பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான அட்டன் டிப்போவில் நடத்துனராக கடமையாற்றும் 48 வயதான பி. ஜகத் ஜெயானந்த பண்டார இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். அட்டனிலிருந்து மெதகம்மெத்த பிரதேசத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக மணல் மற்றும் கூரைத் தகடுகளை ஏற்றிச் சென்ற லொறியை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் பின்நோக்கிச் சென்ற நிலையில், வீதியின் குறுக்கே குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. உயிரிழந்த குறித்த நடத்துனர் பணி முடிந்து வீடு திரும்புவதற்காக லொறியின் பின்பகுதியில் பயணித்த போது, லொறியில் பின்நோக்கி சென்று குடைசாய்யும் வேளையில் இவரின் மீது அதிலிருந்த கூரைகள் உடல் மீது விழுந்ததில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர. விபத்தில் லொறியின் சாரதி மற்றும் சாரதி உதவியாளரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் சிகிச்சைக்காக மல்தெனிய பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் பல அரச நிறுவனங்களுக்கு ஏற்பட்ட மொத்த நட்டம் சுமார் 4,000 பில்லியன் ரூபாவாக இருக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று (06) நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த ஜனாதிபதி, நாடு வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பல தீவிரமான பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டுமென குறிப்பிட்டார். ஜனாதிபதி தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, நாம் பல தீவிரமான பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அதன் கீழ், நாட்டுக்கு சுமையாக மாறியுள்ள அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பணியை நாம் தற்போது ஆரம்பித்துள்ளோம். பல தசாப்தங்களாக இந்த நிறுவனங்களின் இழப்பு அரச வளங்கள் என்ற போர்வையில் பொதுமக்களால் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமக்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் இழப்பு மக்கள் மீது சுமத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் பல அரச நிறுவனங்களின் மொத்த இழப்பை நான் குறிப்பிடுகிறேன். இலங்கை…
பல்கலைக்கழகங்களினுள் அரசியல் தீயை மூட்ட வேண்டாம் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழகத்திலோ – வெளியிலோ வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது, ஒருவரது மனித உரிமையை விட 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பிலேயே கவனம் செலுத்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை சம்பவங்கள், அது தொடர்பிலான பெற்றோரின் முறைப்பாடுகள் மற்றும் அங்கு இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று (05.10.2022) நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளனர். அதில் ஒரு சிலரது மனித உரிமை பற்றி கவனம் மேற்கொள்வதா அல்லது 99 வீதமானோரின் மனித உரிமை தொடர்பில் கவனம் செலுத்துவதா என்பது தொடர்பில் கற்றவர்கள் நன்கு அறிவர். அரசியல் நோக்கத்திலும் பல்வேறு நோக்கங்களிலும் ஒருசிலர் பல்கலைக்கழகங்களினுள் செயற்பட்டு…
பாராளுமன்றத்தில் உள்ள மலசலக்கூடங்களில், அதிகளவான சமைத்த கோழி இறைச்சி துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பாராளுமன்ற படைகல சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ, முறையான உரிய தரப்பினருக்கு பணித்துள்ளார். அங்குள்ள மலசலக்கூடங்கள் பலவற்றின் போச்சிக்களுக்குள்ளே இவ்வாறு சமைத்த கோழி இறைச்சி துண்டுகள் வீசப்பட்டிருந்த நிலையில், ஒக்டோபர் 4ஆம் திகதியன்று மீ்ட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பொதுவான சோதனைக்கு அப்பால், பாராளுமன்றத்துக்குள் நுழையும் போதும் வெளியேறும் போதும் பணியாளர்களின் பொதிகளை விசேடமாக சோதனைக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது. பாராளுமன்றத்தில் சமைத்த மற்றும் சமையலுக்கான உணவுகளை, வெளியே கொண்டுச் செல்வது அதிகரித்துள்ளமையால் அவை தொடர்பில் விசேட சோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் தரமற்ற எரிபொருளை இறக்குமதி செய்ததன் மூலம் அது தொடர்பான நிறுவனங்களின் முகவர்களும் அவர்களுடன் இணைந்து செயற்படும் அரசியல்வாதிகளும் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு (3,600 கோடி ரூபாய்) அதிக பணத்தை சம்பாதித்துள்ளனர் என, தகவல் கிடைத்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகமும் எம்.பியுமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய எரிசக்தி அமைச்சர் நியமிக்கப்பட்டதன் பின்னர் எரிபொருள் இறக்குமதிக்காக புதிய நிறுவனமொன்று பதிவு செய்யப்பட்டு, அதன் ஊடாக விலைமனு நடைமுறைகளை மீறி எரிபொருள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் கடமையாற்றும் பணியாளர்களில் ஒருவர் 100 மில்லிகிராம் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். தலங்கம பொலிஸாரினால் பத்தரமுல்ல பிரதேசத்தில் வைதே இந்த பணியாளர்கள் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
பொன்னியின் செல்வன் படத்தை நாம் அனைவரும் விமர்சனம் செய்வதை தாண்டி கொண்டாட வேண்டிய ஒரு படம். அமரர் கல்கி அவர்கள் எழுதிய இந்த நாவலை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்னம். 150 நாட்களில் இரண்டு பாகத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ள மணிரத்னம் 2ம் பாகத்தின் வேலையை தொடங்கியுள்ளாராம். முதல் நாளிலேயே உலகம் முழுவதும் இந்திய ரூ. 80 கோடி வரை வசூலித்த இப்படம் நாளுக்கு நாள் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. படம் வெளியாகி 6 நாட்கள் முடிவில் உலகம் முழுவதும் இந்திய ரூ. 300 கோடி வசூலை எட்டியுள்ளது. இலங்கை நாணயப்படி சுமார் 13 பில்லியன்கள் ஆகும். படக்குழுவினர் செம கொண்டாட்டத்தில் உள்ளனர்.
சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டதை தொடர்ந்து தேநீர், பால் கலந்த தேநீர் மற்றும் கோப்பி பானம் ஆகியனவற்றின் விலையை குறைப்பதற்கு அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார் . லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த விடயத்தினை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்தமைக்கு நிகராக லாஃப் நிறுவனமும் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார். லாஃப் நிறுவனம் விலைகுறைப்பிற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லையாயின் லாஃப் நிறுவனத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களின் உரிமைகளை வென்றெடுத்த பிரதிநிதிகளின் மாநாட்டில் கலந்துகொண்டபோதே ஜோசப் ஸ்டாலின் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இந்தப் பொருளாதாரக் கொள்கையில் அரசாங்கம் நாட்டை முழுவதுமாக திவாலாக்கிவிட்டது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது, ஆசிரியர்கள் பாடசாலைக்கு வர வழியில்லை. கடுமையான பயணச் செலவுகளைச் சுமக்க வேண்டியுள்ளதாகவும் இதுகுறித்து அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.