பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) உத்தரவிட்டது. “விசாரணைகள் நிறைவடையவில்லை. எனவே என்ன நடந்தது என்று விசாரணைகளின் போக்கில் அறியவரும். அதற்கு பின்னர் சந்தேக நபரை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயலாம்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா கட்டளை வழங்கினார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலையில் பதின்ம வயதுச் சிறுமி ஒருவர் வயோதிபரினால் வன்புணர்வுக்கு உள்படுத்தி கர்ப்பமாகி உள்ளார் என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்திருந்த சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள், கோப்பாய் பொலிஸாருக்கும் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் விசாரணைகளை முன்னெடுத்த கோப்பாய் பொலிஸார் வயோதிபரை கைது செய்தனர். அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற்ற பொலிஸார் அவரை கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினர். சிறுமியை தாயாரின் பாதுகாப்பில் வைத்திருக்க அனுமதியளித்து…
Author: admin
இலங்கையில் அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு அவுஸ்திரேலியர்கள் இன்று (11) சிட்னி பிராந்திய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் கடந்த செப்டெம்பர் மாதம் சிட்னியில் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவுஸ்திரேலியாவின் துணை நிறுவனமாக இருந்த SMEC இன்டர்நேஷனல் நிறுவனம், இலங்கையில் இரண்டு திட்டங்களுக்கான ஒப்பந்தத்தை பெறுவதற்கு இலங்கையிலுள்ள அரச அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டு குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கடந்த 2009ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் குறித்த இருவரும் 3 இலட்சத்து நான்காயிரத்துக்கும் அதிகமான அவுஸ்திரேலிய டொலரை இலஞ்சமாக வழங்க முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மில்லிமீட்டர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறுவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திரசிங் தோனி, திரைப்பட தயாரிப்புத் தொழிலில் கால்பதிக்கிறார். தனது நிறுவனத்திற்கு, Dhoni Entertainment என, அவர் பெயர் வைத்துள்ளார். முதற்கட்டமாக தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் அவரது நிறுவனம் திரைப்படங்களை தயாரிக்கும் என கூறப்படுகிறது. 2011ஆம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றதை கருவாக கொண்டு Blaze to Glory என்ற படத்தையும், The Hidden Hindu என்ற பெயரில், புராணத்தை அடிப்படையாக கொண்ட திரில்லர் படம் ஒன்றையும் தோனியின் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ருஹூணு பல்கலைக்கழகத்தின் இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. ருஹூணு பகல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு புதிய மாணவர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவர்களுக்கு பகிடி வதை மேற்கொண்டமையினால் இரண்டாம் வருட மருத்துவ பீட மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பீடத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கும் சுமார் 200 இற்கும் அதிகமான மாணவர்களுக்கு இவ்வாறு வகுப்பு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பல்கலையின் பதில் பீடாதிபதி பேராசிரியர் சன்ன யஹத்துகொட தெரிவித்துள்ளார்.
ஈரானில் நடைபெறும் போராட்டங்களில் இளம் பெண்களும் இணைந்துள்ளதால், போராட்டங்கள் புத்துயிர் பெற்றுள்ளன. ஈரானில் மாசா அமினி என்ற பெண் காவலில் இருந்தபோது மரணமடைந்தது, அந்நாட்டில் ஹிஜாப் உள்ளிட்ட கட்டாய இஸ்லாமியவாத கொள்கைகளுக்கு எதிராக போராட்டங்களை தூண்டியுள்ளது.
சாரதி அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதி பத்திரத்தை புதுப்பிப்பதற்கான கட்டணங்கள் உடனடியாக அமுலுக்கு வரும்விகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன, அதிவிசேட வர்த்தமானி மூலம் சாதாரண மற்றும் ஒரே நாள் சேவையின் கீழ் வரும் சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியமைத்துள்ளார். இதன் கீழ், 2009 மார்ச் 26 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 2009 ஆம் ஆண்டின் இலக்கம் 01 ஆம் இலக்க சாரதி அனுமதிப்பத்திர ஒழுங்குமுறைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. புதிய அதிவிசேட வர்த்தமானியின் அடிப்படையில், ஒரு வகுப்பிற்கான கற்றல் அனுமதி மற்றும் புதிய சாரதி உரிமத்திற்கான விண்ணப்ப கட்டணம், சாதாரண சேவையின் கீழ் 2,500 ரூபா, ஒரு நாள் சேவையின் கீழ் 3,500. ரூபாவாக திருத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு வகுப்புகளுக்கு சாதாரண சேவையின் கீழ் கட்டணம் 3,000 ரூபா மற்றும் ஒரே நாள் சேவைக்கு 4,000 ரூபாவாக அறவிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க நிலத்தை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்குவதில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் தலையிட வேண்டாம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பல்வேறு சுற்றறிக்கைகளின்படி அரசாங்க நிலங்களை விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்காக வழங்க அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் வலியுறுத்தினார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார். ஹோமாகம கந்தனவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பாண்டிருப்பு பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக இன்று (10) மாலை கல்முனை நோக்கிச் சென்ற காருடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயங்களுடன் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்
ஒட்டுமொத்த நாட்டையும் அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் போதைவஸ்தை இல்லாமல் செய்ய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். போதைவஸ்துக் கடத்தலைக் கண்டித்து இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவ் அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது, “ஒரு பக்கத்தில் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியில் இருக்கின்ற அதேசமயம், போதைவஸ்தின் பாவனை என்பது நாட்டிற்குள் மிக அதிகளவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் யுவதிகளும் போதைவஸ்துக்கு அடிமையாவதாக வைத்தியர்களாலும், சமூகநலன் விரும்பிகளாலும் இன்னும் பல தரப்புகளாலும் சுட்டிக்காட்டப்படுகின்றது. கடல் மற்றும் விமான மார்க்கமாக இந்தப் பொருட்கள் நாட்டிற்குள் வந்துசேர்கின்றன. உலக நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட விதமான போதைவஸ்துகளின் விற்பனை நிலையமாகவும் விநியோக மையமாகவும் இலங்கை மாறிவருகின்றது. கஞ்சா, ஹெரோயின், ஐஸ் போன்ற பல்வேறு வகையான போதைப் பொருட்கள் இலங்கையில் பாவனையில் இருக்கின்றது. இதன் காரணமாக இலங்கையின் மேல்மாகாணத்தின்…