நாட்டுக்கு வருகைத் தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அந்த நாடுகளின் நாணயங்களில் இணையத்தில் நுழைவுச்சீட்டுகளை வழங்குவதற்கான வாய்ப்பை வழங்க வனவிலங்கு அமைச்சு தயாராகி வருகிறது. தேசிய உயிரியல் பூங்காக்கள் மற்றும் காடுகளுக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கே இந்த வாய்ப்பை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுச்சீட்டுகiளயும் இணையத்தில் வழங்குவதற்கு முறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அற்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Author: admin
தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசின் கையொப்பத்துடன் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, புதிய தேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்காக இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபா என்ற கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், திருத்தம் செய்து மீண்டும் பெற்றுக் கொள்ளப்படும் தேசிய அடையாள அட்டைக்காக இதுவரை அறவிடப்பட்ட 250 ரூபா என்ற கட்டணம் 500 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலர் மற்றும் ஸ்ரேலிங் பவுண்டுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அந்த வகையில், நேற்று 370.42 ரூபாவாக இருந்த அமெரிக்க டாலரின் விற்பனை விலை இன்று 370. 39.ரூபாவாக குறைவடைந்துள்ளது. அத்தோடு ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை விலை 412.32 ரூபாவிலிருந்து. 407. 18 ரூபாவாக குறைவடைந்துள்ளது.
மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். புதுகுடியிருப்பு, சிறுவர் இல்லம் முன்பாகவுள்ள வளைவு பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மூன்று இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாகச்சென்று வாகனமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிளை மோதிய வாகனம் தப்பிச் சென்றுள்ள அதேவேளை மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் தலைக்கவசம் அணிந்திருக்கவில்லையென்பதுடன் அதிகவேகத்துடன் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 16 மற்றும் 18வயதுடைய சிறுவர்கள் எனவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
பனை அபிவிருத்தி சபையின் யாழ்ப்பாண தலைமை காரியால கட்டடத்தொகுதி திறப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு நேற்று (13) வருகை தந்த பெருந்தோட்டத்துறை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த யாழில் பனங்கள்ளு குடிப்பதற்கு அலைந்ததாக தெரிவித்தார். அந்நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது, சுமார் 45 வருடங்களாக வாடகை வீட்டில் செயல்பட்டு வந்த பனை அபிவிருத்தி சபைக்கு இன்றைய தினம் (நேற்று) ஒரு புதிய கட்டடம் திறந்து வைக்கப்பட்டவை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பனை அபிவிருத்து சபையின் தலைவரின் முயற்சியின் பயனாக இன்றைய தினம் சொந்த கட்டடத்தில் நீங்கள் குடியேறுவதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இங்கே பனை சார் உற்பத்தி பொருட்களின் செயற்பாடு அதிகம் காணப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ள இடமாக வடபகுதி காணப்படுகின்றது. இன்று காலை நாங்கள் வந்து பனங்கள்ளு தேடிய போது யாழ்ப்பாணத்தில் பனங்கள்ளு இல்லை. இங்கே உற்பத்தி செய்யப்படும் பனை உற்பத்தி பொருட்களுக்கு மேற்குலக நாடுகள்…
நுகர்வோர் விவகார அதிகார சபையின் பதுளை மாவட்ட நிலைய பொறுப்பதிகாரியுடன் தாக்குதல் மேற்கொண்டு தப்பி ஓடிய கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பண்டாரவளை எரிவாயு விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கடையில் அதிக விலைக்கு எரிவாயு விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் சம்பவத்தின் போது காயமடைந்த கடையின் உரிமையாளரும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பதுளை மாவட்ட நிலைய அதிகாரியும் பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கர்நாடக தலைநகரம் பெங்களூருவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள கடற்கரை நகரமான உடுப்பியில் ஹிஜாப் சர்ச்சை காரணமாக கடந்த 10 மாதங்களாக இந்த மாணவிகளின் வாழ்க்கை தலைகீழாகிவிட்டது. தங்களின் பேச்சால் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தால் அம்மாணவிகளில் பலர் பேசத் தயங்குகின்றனர். உடுப்பி மற்றும் அதற்கருகில் அமைந்துள்ள மணிப்பால் ஆகிய இரு நகரங்களும் அரபிக்கடல் திசையில் அமைந்துள்ள முக்கியமான கல்வி நகரங்களாகும். இந்த இரு நகரங்களும் இன்னும் பல காரணங்களுக்கு துடிப்புடனேயே உள்ளது. கடந்தாண்டு அரசு ஜூனியர் கல்லூரி ஒன்றில், ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி நிர்வாகம் தடுத்ததற்கு எதிராக ஆறு மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து மாணவிகள் போராட்டத்திற்கு எதிராக சில மாணவர்கள் காவித்துண்டு அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டதன் சுவடுகள் இன்றும் தெளிவாகவே தென்படுகின்றன. இதையடுத்து, இவ்விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியது, இதனைத் தொடர்ந்து இவ்விவகாரம் உச்ச நீதிமன்ற…
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிநவருவதாவது, வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம் மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது. இதன்போது, மாடுகள் மோய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளன. இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7 ஆம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண்ணொருவர் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் வேகத்தினை குறைத்து பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவு கரும பீடம் இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில், மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகரிக்காமலும், 60 கிலோமீற்றர் வேகத்திற்கு குறையாத வகையிலும் பயணிக்குமாறு சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும் 60 கிலோமீற்றர் வேகத்தில் பயணிக்க வேண்டும் என்பது உத்தரவாக பிறப்பிக்கப்படவில்லை என்பதோடு, அவதானத்துடன் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீ்ற்றருக்கும் அதிகரிக்காத வேகனத்தில் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முகில் கூட்டங்கள் காணப்படுவதனால் சாரதிகள் மின் விளக்கினை ஒளிரச்செய்தப்படி பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.
காணாமல் போனதாகக் கூறப்படும் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் 10 நாட்களுக்குப் பின்னர் பல்கலைக்கழகம் திரும்பியுள்ளார். குறித்த மாணவர் நேற்று (12) ஆய்வுகளில் பங்கேற்றதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். பொறியியல் பீடத்தின் மூன்றாம் வருட சிரேஷ்ட குழுவின் மாணவரான இவர் கடந்த 03ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் கடவத்த-கனேமுல்லை பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.