மழலை சிரிப்பில் மனிதம் காத்த Hotel ஊழியர்!
Author: admin
யு.எல்.அலி. ஜமாயில் அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் கல்முனை அல் பஹ்றியா மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) மாணவர்கள் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வன். MM றிஹான் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கதையும், பெண்களுக்கான 80 M தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் செல்வி MNF ஸஜா முதலாமிடம் பெற்று தங்கப்பதக்கதையும் சுவீகரித்துக்கொண்டனர். மேலும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான அஞ்சலோட்டப்போட்டியில் செல்வி. MSF. ஸும்றா, MNF. ஸஜா, JF. லுபாப், NF. மின்ஹா உள்ளிட்ட குழுவினர் மூன்றாமிடத்தைப் பெற்று வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் தேசிய மட்ட போட்டிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இது பாடசாலை வரலாற்றில் சாதனைக்குரிய மைல்கல்லாகும். இந்த வெற்றியாளர்களுக்கு உறுதுணையாக பயிற்சிகளை வழங்கிய, உடற்கல்வி ஆசிரியர்களான MH. பழீல், UL ஸிபான் ஆகியோரும், விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களான, MAM. றியால், AWM. அஸாட்கான், JA. அல் அஸ்ரார்…
அளுத்கம பிரதேசத்தில் 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகைள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் நடைபெறவிருந்த மகளின் திருமணத்திற்காக தயார் செய்யப்பட்ட தங்க மோதிரம் மற்றும் 8 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸில் பாதிக்கப்பட்ட பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளனர். சாலியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளுத்கம பகுதியிலுள்ள வீடொன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தங்க ஆபரணங்களே திருடப்பட்டுள்ளன. திருமணத்தின் போது மாப்பிள்ளைக்காக தயார் செய்யப்பட்ட தங்க மோதிரம், தங்க வளையல் மற்றும் சில தங்க ஆபரணங்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குடும்பத்தினர் வீட்டில் இல்லாத போது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் 10ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சாலியவெவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரியதர்ஷன உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை அரச நிறுவனங்கள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களில் கூரை சூரிய சக்தி மின்சார பிறப்பாக்கிகளை பொருத்துவதற்காக , இந்தியக் கடன் திட்டத்தின் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தவுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன் விஜேசேகர தெரிவித்துள்ளார் . அரசால் நடத்தப்படும் இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட பாரிய இழப்பைக் குறைப்பதற்காக அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியது . இதனையடுத்து , சில பௌத்த பிக்குகள் மின்சாரப் பாவனைக்கான கொடுப்பனவுகளை செலுத்தப்போவதில்லை என்று அச்சுறுத்தினர் . இந்தநிலையில் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகம் , தேர்ந்தெடுக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் மேற்கூரை சூரிய சக்தி மின்சாரப் பிறப்பாக்கிகளை இந்தியக் கடன் வரியுடன் நிறுவ இணங்கியுள்ளது
பல பில்லியன் டொலர்களை மோசடி செய்த குற்றச்சாட்டில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலிக்கு எதிராக விஷேட வைத்தியர் ஒருவர் இரகசிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். 75 கோடி ரூபா பணத்தை ஏமாற்றி விட்டதாக அவர் அளித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எழுத்துபூர்வமாக தனது முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கவும் அவர் ஏற்பாடு செய்துள்ளார். திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 10 முறைப்பாடுகள் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்துள்ளதாகத் தெரிய வருகிறது.
ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுகளை உட்கொள்வதாக ஒரு புதிய கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது. 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் உணவுப் பொருட்களின் விலைகள் 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக பாடசாலை உணவு வழங்குநர்களின் வர்த்தக அமைப்பான எல்.எ.சி.ஏ. தெரிவித்துள்ளது. இதன் விளைவாக 28 சதவீத பாடசாலை உணவு வழங்குபவர்கள் இப்போது அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளைப் பயன்படுத்துகின்றனர். அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் பிரித்தானியரிடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சிக்கு மாறுவது குறித்தும் பரிசீலித்து வருகின்றனர். லண்டனின் மிகவும் பின்தங்கிய பெருநகரங்களில் ஒன்றான நியூஹாமில் உள்ள டெர்சிங்ஹாம் பாடசாலை, இலையுதிர்கால அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு புதிய மெனுவைத் தொடங்க உள்ளது. ‘இந்த ஆண்டு உணவின் விலை உயர்ந்துள்ளது. சில பொருட்கள் 50 சதவீதம் உயர்ந்துள்ளன. ஒவ்வொரு நாளும் பாடசாலை உணவு வழிகாட்டுதல்களை பூர்த்தி செய்யும் உணவை வழங்குவதில் இது மிகப்பெரிய சவாலாக உள்ளது’ என வழங்குனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தகப்பனாருடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியாத நாமல் ராஜபக்ஷ தற்போது தேசிய பேரவையின் திட்டங்களை வகுத்து நாட்டையே கேலிக்கூத்தாக்குகிறார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அரசாங்கம் பொதுவான உடன்படிக்கையை முன்வைத்தால், பதவிகளைப் பெறாமலேயே இவ்வாறான வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்க முடியும் என்றும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். தேசிய பேரவையில் நீண்டகால மற்றும் குறுகிய கால தீர்வுகளை முன்வைப்பதற்காக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார். அரசாங்கம் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதை சர்வதேச சமூகத்திற்கு காட்ட விரும்புவதாகவும், தேசிய பேரவை அத்தகைய குழு எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்தியாவின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் மணல் சிற்பம் காரை நகரிலுள்ள கசூரினா கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ளது. அப்துல் கலாமின் 91ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று யாழில் நடைபெற்ற நிலையில் வேலணையை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரால் கலாமின் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், காரைநகர் பிரதேச சபை தவிசாளர் க.பாலச்சந்திரன், இந்திய துணை தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை மணல் சிற்பக் கலைஞர் சுப்பிரமணியம் சுகுமாரை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய துணைத் தூதரால் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.
கிளிநொச்சி – முகமாலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 46 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்றைய தினம் (15) பஸ் ஒன்றுடன் டிப்பர் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
நாளை முதல் கொத்து ரொட்டியின் விலையை 50 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.