வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் உயர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி, அடுத்த சில மணி நேரங்களில் சூறாவளியாக உருவாகலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று (08) பிற்பகல் வேளையில், கிழக்கு, மத்திய வங்காள விரிகுடாவில் இது சூறாவளியாக உருவாகும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி, மறு அறிவித்தல் வரும் வரை அந்த பகுதிகளில் பல நாள் மீன்பிடி படகுகளை இயக்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணித்தியாலத்துக்கு 90 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுவதோடு, கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுமென கூறப்பட்டுள்ளது. அதன் காரணமாக, குறித்த பிரதேசங்களில் தற்போது மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பலநாள் மீன்பிடி படகுகள் உடனடியாக கரைக்கு அல்லது பாதுகாப்பான இடத்திற்கு சென்றடையுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளையில் பல இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Author: admin
ஊடக வெளியீடு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணனி அமைப்பில் அவசர திருத்தம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட சாதாரண சேவையின் (ஒருநாள் சேவை தவிர்ந்த) கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மே மாதம் 09 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மீள ஆரம்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மே மாதம் 05, 06 மற்றும் 09 ஆம் திகதிகளில் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு நேரமெடுத்து, வருகை தரும் திணைக்களத்திலிருந்து இலக்கம் அல்லது முத்திரையைப் பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் மாத்திரம் மே 09 ஆம் திகதி திங்கட்கிழமை ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 05 ஆம் திகதி ஒப்படைக்கவும். மேலும், கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை மே 10ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒப்படைப்பதற்கான சந்திப்பை மேற்கொள்வது அவசியமாகும். http://www.immigration.gov.lk/ என்ற இணையத்தளத்திற்குச்…
எதிர்காலத்தில் 15 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி நேற்று அமைச்சரவையில் தெரிவித்துள்ளார். அந்நியச் செலாவணி இல்லாத பொருளாதார நெருக்கடி மோசமாகி விட்டதாகவும், அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலருக்கும் குறைவாக உள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்காலத்தில் எரிபொருள் இருப்புகளை இறக்குமதி செய்வது பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாகவும், அதற்கமைய மின்சார விநியோகம் பாரிய நெருக்கடியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதற்கு முதலில் நாட்டில் நிலையான அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் அமைச்சரவையில் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் 9% வீதம் குறைவடைந்துள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடம் முதல் காலாண்டில் 69.8 மில்லியன் கிலோகிராம் தேயிலை நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வருடம் குறித்த காலப்பகுதியில் 63 மில்லியன் கிலோகிராம் தேயிலையே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது. உரப்பிரச்சினை, ரஷ்ய – உக்ரைன் மோதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பன தேயிலை ஏற்றுமதியில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சபை கூறியுள்ளது. எவ்வாறாயினும், தற்போது வழமையான ஏற்றுமதிக்கு திரும்பியுள்ளதாகவும் சபை குறிப்பிட்டுள்ளது. கடந்த வருடத்தில் தேயிலை ஏற்றுமதியூடாக1.3 பில்லியன் ரூபா வருமானம் இலங்கைக்கு கிடைத்துள்ளது.
நாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஜனாதிபதியின் செயலாளர் , பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகியோரை நாளைமறுதினம் திங்கட்கிழமை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்க வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் அவசரகால நிலைமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமைக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவலையைத் தெரிவித்துக் கொள்கிறது. பொலிஸாரால் இலகுவாகக் கட்டுப்படுத்தப்படக் கூடியவாறு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் எதற்காக அவசரகால நிலைமை சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட வேண்டும். ‘பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்று கூடும் சுதந்திரம், கைது மற்றும் தடுப்புக் காவலுடன் தொடர்புடைய உரிமைகள் மற்றும் பிற அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் அவசரகால நிலைமை சட்டத்தின் போது பாதிக்கப்படாது என…
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார். பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பிரபல பாடசாலைகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் ஜனவரி 22ஆம் திகதி நடத்தப்பட்டு மார்ச் 13ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடப்பட்டன. புலமைப்பரிசில் *பரீட்சைக்கு மொத்தம் 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்ததுடன்* இம்முறை *பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களிலும் 108 விசேட நிலையங்களிலும் இடம்பெற்றது.*
முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன நேற்று -06- பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் ரணில் விக்ரமசிங்க கோரியதாக அவர் நேற்று -06- பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எனவே, சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரையும் மிரட்டுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தின் பக்கம் நின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் பாராளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார். ரணிலும், தினேஷ் குணவர்த்தனவும் ஒன்றாக பாடசாலையில் கல்வி கற்றவர்கள் என்பதும், நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கை கடற்பரப்பில் கிடைத்த கனிய வளத்தை கொண்டு நாட்டுக்கு தேவையான எரிபொருளை 60 வருடங்களுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. மன்னார் கடல்படுகையில் காணப்படும் எரிபொருள், இயற்கை வாயு என்பனவற்றைப் பெற்றுக் கொள்ளக் கூடிய கனிய வளம் கிடைத்துள்ளது. நாட்டின் 60 வருட எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்ய இவை உதவும் என ஆய்வொன்றின் மூலம் தெரியவந்திருக்கிறது. எனினும் இது குறித்து முறையான வேலைத்திட்டம் தயாரிக்கப்படாமை பற்றி நாடாளுமன்றத்தில் கோப்பா குழு கவனம் செலுத்தியுள்ளது. மன்னார் கடல்படுகையில் ஐந்து பில்லியன் பீப்பா அளவிலான எரிபொருள் காணப்படுவதாக 2016ம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அரசாங்க கணக்கு குழு அறிவித்திருந்தது. இதில் 5 ட்ரில்லியன் கன அடி இயற்கை வாயு காணப்படுகின்றமையும் தெரியவந்துள்ளது. செயற்கை வாயுவின் மூலம் மாத்திரம் 25 வருடங்களில் 200 பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பும் காணப்படுகிறது.
அவசரகால சட்டத்தினை பிரகடனப்படுத்தியமை தொடர்பில் அரசாங்கம் பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் அமைதியாகவும் பொலிஸாரினால் சாதாரண வகையில் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்படுவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தனியார் பேருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், எரிபொருள் பிரச்சினை காரணமாக, சேவைகளை மட்டுப்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை, இந்த நிலை நீடிக்கக்கூடும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். மேலும் , பொது நிர்வாக முடக்கல் போராட்டத்தின் பின்னர், தொடருந்து சேவைகள் இன்று முதல் வழமைபோன்று இடம்பெறுவதாக தொடருந்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உரிய கடமை நேரத்திற்கு சேவைக்கு அறிக்கையிடுமாறு, அனைத்து உறுப்பினர்களுக்கும் அறியப்படுத்தி உள்ளதாக அந்த சங்கத்தின் இணைப்பாளர் எஸ்.பி. வித்தானகே தெரிவித்துள்ளார்.