இந்த ஆண்டு நவம்பரில் ஆப்கானிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஒருநாள் உலகக்கிண்ணத் தொடரின் சுப்பர் லீக்கின் ஒரு பகுதியான இத்தொடரின் போட்டிகள், நவம்பர் 25, 27 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். போட்டிகள் முதலில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இரு அணிகளின் கிரிக்கெட் அணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க இத்தொடர் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் இலங்கைக்கான முதலாவது இருதரப்பு கிரிக்கெட் சுற்றுப்பயணம் இதுவாகும். இந்த இரு அணிகளும் இதற்கு முன்னர் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. இரண்டு முறை ஆசிய கிண்ணத் தொடர் மற்றும் இரண்டு முறை உலகக் கிண்ணத் தொடர். இதில் இலங்கை 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. உலகக் கிண்ண சுப்பர் லீக்கில் ஆப்கானிஸ்தான் தற்போது 12 போட்டிகளில் 10…
Author: admin
ஆரோன் ஃபின்ச் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் புதிய ஒருநாள் தலைவராக பெட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் ஒரு வருடம் உள்ள நிலையில், கிரிக்கெட் அவுஸ்ரேலியாவால் அறிவிக்கப்பட்ட இந்த முடிவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கம்மின்ஸுக்கு ஏற்கனவே டெஸ்ட் அணியின் பொறுப்பு இருப்பதால், ஒருநாள் அணியையும் அவர் பொறுப்புடன் திறம்பட வழிநடத்துவார் என கிரிக்கெட் அவுஸ்ரேலியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, ரி-20 உலகக்கிண்ணத் தொடருக்குப் பிறகு நவம்பர் 17ஆம் முதல் இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இதன் பின்னர் ஜனவரி மாதம் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சினையானது தேசிய மட்ட வேலையில்லா பிரச்சினைகளை விட அதிகமாக காணப்படுகின்றது. 21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில் வேலையற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் தெரிவிக்கின்றன. யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் தேசிய மட்டத்தில் 4.5 வீதமாக காணப்பட்டது. எனினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முருத்தெட்டுவே ஆனந்த தேரருக்கு சொந்தமான சொகுசு வாகனத்தை தான் திருடவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தெரிவித்துள்ளார். குறித்த சொகுசு வாகனத்தை விற்பனை செய்து அதில் கிடைக்கும் பணத்தை, செலுத்த வேண்டியப் பணத்துக்காக எடுத்துக்கொள்ளும்படி தன்னிடம் முருத்தெட்டுவே தேரர் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். வாகனத்தைத் ஒப்படைத்தமைக்கான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வளர்முக நாடுகளின் பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் இலங்கைக் கிளையும், ஸ்ரீ ஜெவர்த்தனபுரப் பல்கலைக்கழகத்தின் பிறப்புரிமையியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல்த்துறையும் இணைந்து தேசிய ரீதியில் மாணவருக்கான புத்தாக்கப் போட்டி ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 2022 ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் பாடலை மாணவ இளம் புத்தாக்குனராக வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவி மதுரா அருந்தவம் தெரிவு செய்யப்பட்டார். சிறந்த பெண் புத்தாக்குனருக்கான பதக்கத்தை ஸ்ரீ ஜெயவர்த்தனப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பேராசிரியர் சித்தானந்த லியநஹே அணிவித்ததுடன், இவருக்கான சான்றிதழை வளர்முக நாடுகளுக்கான பெண்களுக்கான விஞ்ஞான அமைப்பின் தலைவி பேராசிரியர் சுகந்திக்கா சுரேஷ் அவர்களும் வழங்கினர். குறித்த நிகழ்வு அன்மையில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூதவை மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கையில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவ பிரசன்னம் அதிகரித்துள்ளமை குறித்து தமிழகம் தீவிர பாதுகாப்புக் கவலைகளை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அரச புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடக்கு இலங்கையில் மக்கள் விடுதலை இராணுவ பணியாளர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் வடக்கில் கடலட்டை பண்ணையை ஆரம்பிப்பதற்கு அதிநவீன கருவிகளை சீனா பயன்படுத்தியதாகவும் புலனாய்வு அமைப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி எச்சரித்துள்ளது.
பெற்றோலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் முச்சக்கரவண்டி கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாது என்று அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சுதில் ஜயருக், இன்று (17) தெரிவித்தார். கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் எனின், முச்சக்கர வண்டிகளுக்கு வழங்கும் எரிபொருளின் அளவை அதிகரிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். தற்போது, வாராந்தம் வழங்கும் 5 லீற்றர் பெற்றோலை நாளாந்தம் வழங்க வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்தார். எரிபொருளின் விலையை அரசாங்கம் குறைத்தாலும் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு பெற்றோலை கொள்வனவு செய்ய நேரிடும் என்பதால், விலையை குறைப்பதால் தமக்கு எந்த நன்மையும் இல்லை என்றார். பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி திலான் மிராண்டா, இன்று (17) தெரிவித்தார். பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டும் எனின்,…
சுமார் 70 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமை காரணமாக ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்கான மின்சார விநியோகத்தை இன்று (17) பிற்பகல் இடைநிறுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் அலைவரிசைகளின் தொடர்ச்சியான செயற்பாடுகளில் சிக்கல் ஏற்பட்டதாகவும் மின்பிறப்பாக்கிகள் மூலம் ஒளிபரப்புகளை மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல மாதங்களாக மின் கட்டணத்தை செலுத்த ரூபவாஹினி தவறி இருந்ததாகவும், சுமார் 90 லட்சம் ரூபாய் நிலுவைத் தொகையில் சுமார் 20 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாகவும் தெரியவருகிறது.
அலங்காரங்களை தடை செய்தல் உள்ளிட்ட ஆடம்பரமான கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை விரிவுபடுத்துவதை நிறுத்துமாறு கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். நீர்கொழும்பு – படபத்தல புனித தெரேசா தேவாலயத்தில் நடைபெற்ற சமய ஆராதனையில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராயர், இந்த வருட கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை பசியைப் போக்குவதற்காக மட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த கிறிஸ்மஸில் தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களை அலங்கரிப்பதற்காக ஒருவர் பணத்தை வீணாக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். பசியில் வாடுபவர்கள் ஏராளமானோர் உள்ளனர் என்றும் எனவே, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் சமயத்தில் ஏழைகளுக்கு உணவு வழங்குவது மட்டுமே செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேநேரம், ஈஸ்டரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போதைய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய ஜனாதிபதி, பின் வாசலில் இருந்து வந்தவர் என்பதால், அவர் இப்போது வகிக்கும் பதவியை வகிக்க மக்களின் சம்மதம் இல்லை…
இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசியின் மொத்த விலை 160 ரூபாவாகவும், சில்லறை விலை 178 முதல் 185 ரூபாவாகவும், இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை பச்சை அரிசி பல்பொருள் அங்காடிகளில் 200 முதல் 210 ரூபா வரையிலும், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 முதல் 210 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.