இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேரூம், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் 4 நபர்கள், தனி நபர் ஒருவரும் உள்ளடங்குகின்றனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இலங்கையில் வசிக்கும் மக்கள் உணவு பொருட்கள் வாங்க முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக கடந்த புதன்கிழமை வரை 42 இலங்கை தமிழர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்து முகாம்களில் தங்கியுள்ள நிலையில் தற்போது நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட 4 குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி…
Author: admin
றம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளை இன்று முற்பகல் 11.00 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, பொலிஸ் மா அதிபர், மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் றம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் ஆகியோர் ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர். கடந்த 19ஆம் திகதி றம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின் போது பிரதேசவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு சம்பவ இடத்தில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், குறித்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை வழங்கவுள்ளது. றம்புக்கனையில் இடம்பெற்ற…
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை,எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக மேலும் 50 கோடி அமெரிக்க டொலரை இந்தியா, இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியா இதற்கு முன்னர் 100 கோடி அமெரிக்க டொலரை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.. .
பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும் போது மின்சார நெருக்கடியை இயலுமான அளவு தீர்க்க முடியும் என்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன நம்பிக்கை தெரிவித்தார். நேற்றைய பாராளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.; அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் மின்சார நெருக்கடியினால் பாதிப்படைவார்கள் என்று எதிர்க்கட்சி நேற்று பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் அடுத்த மாதத்தை அண்மிக்கும் போது நாள் ஒன்றில் இரண்டு மணி நேரம் மாத்திரம் மின் துண்டிக்கப்படலாம் என்றும் கூறினார். பாராளுமன்றம் இன்று காலை பத்து மணிக்கு மீண்டும் கூடவுள்ளது.
தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்த பணவீக்க விகித அறிக்கையின்படி, இலங்கையின் பணவீக்க விகிதம் முதல் தடவையாக 20 சதவீதத்தை கடந்துள்ளது. சர்வதேச பணவீக்கத்தில் இலங்கை 20% ஐத் தாண்டிய போதிலும் இலங்கையின் பணவீக்கச் சுட்டெண் 20% ஐத் தாண்டியுள்ளதாக தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) தெரிவித்திருப்பது இதுவே முதல் தடவையாகும்.
இராஜாங்க அமைச்சர் பொறுப்பெடுத்து, அரசுக்கு ஆதரவாக செயற்படும் முஷாரப் முதுநபீன் அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊர் மக்களால் அவரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். பால் மாவின் கையிருப்பு குறைவடைந்துள்ளதாகவும், இறக்குமதி செய்யப்பட்ட பால் மா கையிருப்பு அடுத்த வாரம் மீள ஒப்படைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்படி, உரிய விலை திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டு, பால் மாவின் கையிருப்பு கிடைத்தவுடன் விலைகள் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அதிகரிக்கப்பட்டதுடன், அதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை ரூபா. 250 மற்றும் 1 கிலோ பாக்கெட்டின் விலை ரூ. 600 ஆக அதிகரிக்க தொழிற்சங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. விலை உயர்வால் தற்போது 400 கிராம் பால் மா பாக்கெட் ரூ.790க்கும் 1 கிலோ பாக்கெட் ரூ. 1945க்கும்…
அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தற்போது 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூடை ரூ.2300 – 2350 என்ற விலையில் விற்பனை செய்யப்படுவதால், சீமெந்தின் புதிய விலையை ரூ.500 – 600 ரூபாவால் உயர்த்த சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. சீமெந்து விலை உயர்ந்துள்ளதாலும், புதிய கட்டிடங்களின் கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டுள்ளதாலும் சீமெந்தின் தேவை குறைந்துள்ளதாகவும், இதனால் மொத்த விற்பனைக் கடைகளில் சீமெந்து இருப்பு இல்லை எனவும் சிமெந்து விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்தார். இதன்படி, முகக்கவசம் அவசியமில்லை என்ற தீர்மானம் கடந்த 19 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இருப்பினும், குறித்த தீர்மானம் தற்போதைய நிலைமையில் ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும் , இந்தத் தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு நிபுணர் குழுவுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்போது காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், சாரதிகள் தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத நிலையிலும், தொழிலை மேற்கொள்ளா முடியாமல் உள்ள நிலையிலும், ரம்புக்கனை பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோரியும் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.