ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு நாம் விரட்டி அடிக்கும் வரை மக்கள் ஓயாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சரான மங்கள சமரவீரவினுடைய 66 ஆவது பிறந்தநாள் நினைவு தினத்தினை ஓட்டி கொழும்பில் நேற்று முன் தினம் (21) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில் , “தனக்கு எதிரான மக்களினது தன்னெழுச்சி மிக்க ஆர்ப்பாட்டத்தினை துப்பாக்கி முனையில் அடக்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சித்துக் கொண்டிருக்கின்றார். ரம்புக்கனை சம்பவத்தினூடாகத் தானொரு கொலைகாரன் தான் என்பதினை ஜனாதிபதி மீண்டும் நிரூபித்துகாட்டியுள்ளார். ‘கோ ஹோம் கோட்டா’ (Go Home Gota) என்ற கோஷத்துடன் கொழும்பு – காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவினை மக்கள் தந்து போராட்டத்தினை வலுவடைய செய்துள்ளனர். இந்த விடையம் ஜனாதிபதிக்கும் அவருடைய தலைமையிலான அரசுக்கும் சர்வதேச…
Author: admin
நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வங்கியாளர்களின் விசேட மாநாடு நேற்று (22) மாலை கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்திருந்தார்.
இந்தியவினுடைய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டிருந்த 40,000 மெட்ரிக் தொன் அரிசியினையும் சதொச விற்பனை நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டுவருவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசியினுடைய விலை 145 ரூபாவாக்கு சதொச ஊடக தற்போது பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சிவப்பரிசியினை 145 ரூபாவுக்கும் மற்றும் ஒரு கிலோ சம்பா அரிசியை 175 ரூபாய்க்கும் கொள்வனவு செய்ய முடியும். மேலும் ஒரு வாடிக்கையாளருக்கு அதிகபட்சம் 05 கிலோ மாத்திரமே கொள்வனவு செய்யமுடியும் என வர்த்தக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உதவுவதற்கு முன்வந்துள்ளது. இதன்படி, இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 101 வகையான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சைப் பொருட்கள் அடங்கிய உதவி எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் என அரசாங்கம் கூறியுள்ளது. சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்தோனேசியாவினால் வழங்கப்பட்ட 340 மில்லியன் பெறுமதியான மருந்துகளும் ஒரு வாரத்திற்குள் பெற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும், விரும்பிய நன்கொடையாளர்கள் தமக்கு தேவையாக மருந்து வகைகளை வழங்கி உதவுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து *தடுமாறும் அரசே பதவி விலகு* எனும் கண்டன சுவரொட்டிகள் யாழ் நகரம் முழுவதும் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் ஒட்டப்பட்டுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், Zoom ஊடாக நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டார். தேவையான மறுசீரமைப்பு இன்றி சர்தேச நாணய நிதியத்தின் அவசர நிதியுதவிகள் உடனடியாக கிடைக்காது. அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டமையானது, சர்வதேச நாணய நிதியத்துடன் மாத்திரம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அல்ல, குறுங்கால மற்றும் இடைக்கால நிதி திட்டங்கள் சம்பந்தமாக பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. உலக வங்கி, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய அமைப்புகளுடனும் ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ரம்புக்கனையில் 19 ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கான உத்தரவை தானே பிறப்பித்ததாக கேகாலை பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேபி கீர்த்திரட்ணே ஏற்றுக்கொண்டுள்ளார். கேகாலையில் ஆர்ப்பாட்டக்காராகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை அதில் ஒருவர் கொல்லப்பட்டமை குறித்த ஆரம்பகட்ட விசாரணைகள் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட எரிபொருள் வாகனமொன்றினை தீயிட்டு கொழுத்துவதற்காக தீப்பெட்டிகள் லைட்டர்களுடன் பலர் வருவதை பார்த்தேன் எரிபொருள் வாகனம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கான வேறு வழியில்லாததன் காரணமாக முழங்காலின் கீழ் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்கள் இரு எரிபொருள் வாகனங்களிற்கும் பெட்ரோல் நிரப்பும் நிலையத்திற்கும் தீமூட்டியிருந்தால் பெரும் உயிர்ச்சேதமும் சொத்துக்களிற்கு அழிவும் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி உயிரிழப்புகள் குறித்து நானும் எனது பொலிஸ் உத்தியோகத்தர்களும் அச்சம் கொண்டிருந்தோம் என தெரிவித்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற பகுதியில் காணப்பட்ட…
பொ.த உயர்தரப் பரீட்சை 2021 2022)க்கான செயன்முறைப்பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இம்மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10ஆம் திகதி வரை உரிய நடனம் மற்றும் இசை பாடங்களுக்கான செயன்முறைப்பரீட்சைகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகள்செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அத்துடன் (28) மனைப் பொருளியல் (65) பொறியியல் தொழிலநுட்பவியல் (E-Tec). (66) உயிர் முறைமைகள்தொழில்நுட்பவியல் ( 8-Tec) ஆகியபாடங்களின் செயன்முறைப்பரீட்சைகள் 2021 (2022) கல்வி பொது தராதர சாதாரன தர பரீட்சை நடைபெற்ற பின்னர் நடாத்த தீர்மானம்செய்து உள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் 2022.04.29 முதல் ஆரம்பிக்கும் நடைமுறைப் பரீட்சைகள் இற்கான AdmissionCard பரீட்சார்த்திகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனவும் இதுவரை கிடைக்க பெறாதவர்கள் www.doenets.lk.எனும்இணைய களத்தில் download செய்யுமாறு அறிவித்தல் வெளியாகி உள்ளது. – பரீட்சைகள் திணைக்களம்-
உரிமம் பெற்ற வங்கிகளின் கடன் மற்றும் வைப்புத் தயாரிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது. மார்ச் 11, 2022 தேதியிட்ட 2022 ஆம் ஆண்டின் பணவியல் சட்டச் சட்டத்தின் ஆணை எண்.01 இன் ஆணை 2.1ஐ வங்கி ரத்து செய்தது. பணவியல் கொள்கை நடவடிக்கைகளை கடுமையாக்க CBSL இன் சமீபத்திய முடிவிற்கு இணங்க இந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கி அமைப்பில் வைப்புகளை ஈர்ப்பதற்காக, CBSL ஆல் பின்பற்றப்பட்ட இறுக்கமான பணவியல் கொள்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, டெபாசிட் விகிதங்களை போதுமான அளவில் சரிசெய்ய உரிமம் பெற்ற வங்கிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரின் தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முக்கிய பொருட்கள் என்பன தேடப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தோண்டும் நடவடிக்கை நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குரவில் பகுதியில் குறித்த காணியின் உரிமையாளர் வெளிநாடு ஒன்றில் வசித்துவரும் நிலையில், போருக்கு முன்னர் குறித்த காணியில் விடுதலைப்புலிகளின் முகாம் அமைந்திருந்தது. இந்த நிலையில் தற்போது வேறு ஒரு நபரினால் காணி பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. குறித்த காணியில் தோண்டும் நடவடிக்கைக்கான அனுமதியினை முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியுள்ள நிலையில் கிராம அலுவலகர், மருத்துவபிரிவினர், பொலிஸார், படையினர், சிறப்பு அதிரடிப்படையினர் உள்ளிட்டோர் முன்னிலையில் தோண்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. காணியில் மூன்று வேறு இடங்களில் நிலத்தில் தோண்டப்பட்டபோதும் எதுவித பொருட்களும் கிடைக்காத நிலையில் குறித்த அகழ்வுபணி மாலை 4.30 மணியவில் முடிவிற்கு கொண்டுவந்துள்ளார்கள்.