மகளிருக்கான ஆசியக் கிண்ண ரி-20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கை அணியை வீழ்த்தி இந்திய மகளிர் அணி, ஏழாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது. அதேவேளை ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்த இலங்கை அணி, தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டது. பங்களாதேஷின் சில்ஹெட் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை மகளிர் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 65 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரனவீர ஆட்டமிழக்காது 18 ஓட்டங்களையும் ரனசிங்ஹ 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்திய மகளிர் அணியின் பந்துவீச்சில், ரேனுகா சிங் 3 விக்கெட்டுகளையும் கயக்வாட் மற்றும் ரனா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 66 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய மகளிர்…
Author: admin
சமூக நீதிக்கான தேசிய இயக்கம் மற்றும் இன மத நல்லிணக்கத்திற்கான கூட்டமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்டத்திற்கான மக்கள் கலந்துரையாடல் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்றுள்ளது. “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் யாழிலுள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத் தலைவர் கரு ஜயசூரிய, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதேவேளை ஜனநாயகத்தையும் மக்களுக்கான நீதியையும் உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த சிவில் சமூக அமைப்பு செயற்பட்டுவருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கோதுமைமாவின் விலை 290 ரூபாயாக குறைத்தாலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது. இரு நிறுவனங்களும் கோதுமை மாவின் விலையை 250 ரூபாயாக குறைத்தால் மாத்திரமே தம்மால் பாண் உள்ளிட்ட பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என இச்சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார். இந்த நாட்டிலுள்ள இரண்டு மாவு நிறுவனங்களும் இன்னமும் கோதுமை மாவை கிலோ ஒன்றுக்கு 310 முதல் 280 ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவு குறைக்கப்பட்டுள்ளது, ஆனால் சந்தையில் மாவின் விலை இன்னும் கிலோவுக்கு 350 ரூபாயாக உள்ளது என்றும் அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
ஊவா மாகாணத்தில் தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளிடம் அரச தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி ஆசிரியையொருவர் உட்பட இரு பெண்கள் கோடிக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்காட்டுக்களின் பேரில், அவர்கள் பண்டாரவளைப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து, ( இன்று 15-10-2022) ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சந்தியா அம்பன்வெலவிடம் வினவியபோது, குறித்த ஆசிரியையை இடைநிறுத்தம் செய்துள்ளதாகவும், இது குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். பதுளைப்பகுதியைச் சேர்ந்த ஆசிரியையொருவரும், இரு பெண்களும் இணைந்து , தொழிலற்று இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கு அரச தொழில் வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதாகக்கூறியே மேற்படி பண மோசடி செய்யப்பட்டுள்ளதாகும்.தொழில் திரமைளுக்கமைய இரண்டு இலட்சங்களிலிருந்து ஆறு இலட்சம் ரூபாவரை பணம் பெறப்பட்டது. அந்த வகையில் பணம் பெறப்பட்டதும் அரச இலச்சினை பொறிக்கப்பட்டவகையில் தொழில் நியமனப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்நியமனப்பத்திரங்கள் வழங்கப்பட்டவர்களுக்கு, குறிப்பிட்ட ஆசிரியையினால் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடிகளினால் நியமனங்கள் வழங்குவதற்கு காலதாமதமாகலாமென்று தொலைபேசி மூலம்…
மோசடிகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி மோசடி செய்பவர்களால் விளம்பரப்படுத்தப்படும் பயண காப்பீட்டு சான்றிதழ்கள் அமெரிக்காவிற்கு பயணிக்க தேவையில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க தூதரகம் இன்றைய தினம் (15.10.2022) டுவிட்டரில் பதிவிட்டுள்ளது. அதில், பயணிகள் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விசா கட்டணங்கள் உத்தியோகபூர்வ வங்கிகள் அல்லது அமெரிக்க தூதரகத்தின் தூதரக காசாளருக்கு மட்டுமே செலுத்தப்பட வேண்டும். அமெரிக்காவுக்குச் செல்வதற்கான ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களைப் பெறுவதற்காக மோசடிகள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி அமெரிக்க தூதரகம் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளது. மேலும் விசா தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் வகையில் இணையத்தள முகவரியொன்றும் தரப்பட்டுள்ளது. இதேவேளை பொதுவாக கிரீன் கார்ட் (Green Card) என அறியப்படும் அமெரிக்க பன்முகத்தன்மை விசா திட்டம் (US Diversity Visa Program 2024) விண்ணப்பத்திற்காக திறக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ். சுன்னாகத்தில் விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று (சனிக்கிழமை) சுன்னாகத்தில் ஆரம்பமான பேரணி சுன்னாகம் பஸ் தரிப்பு நிலையம் வழியாக வாழ்வகத்தை சென்றடைந்தது. இதனை வாழ்வகம் மற்றும் லயன்ஸ் கழகம் ஆகிய இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை முன்னெடுத்திருந்தது. மேலும் இதன்போது வெள்ளைப் பிரம்பின் முக்கியத்துவம், விழிப்புலனற்றவர்கள் வீதியில் நடமாடுவதற்கு இருக்கின்ற இடையூறுகள், அவர்களை ஏன் முன்னுரிமைப்படுத்த வேண்டும் போன்ற விடயங்கள் இதன்போது வலியுறுத்தப்பட்டிருந்தது.
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட இன்னும் ஒரு படி நெருக்கமாக உள்ள ஆசிரியர்கள், 5 சதவீத ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்துவிட்டு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் மிகப்பெரிய தொழிற்சங்கமான தேசிய கல்வி ஒன்றியம், ஆரம்ப வாக்கெடுப்புக்கு பதிலளித்த 86 சதவீத உறுப்பினர்கள் தாங்கள் வேலைநிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறியது. அது இப்போது முறையான பணிபகிஷ்கரிப்பு வாக்கெடுப்பைத் தொடங்குகிறது. NASUWT தொழிற்சங்கம் ஸ்கொட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உறுப்பினர்களுக்காக ஒன்றைத் தொடங்கியுள்ளது. அரசாங்கத்தின் சலுகை ஆசிரியர்கள் மீதான வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை நிவர்த்தி செய்யவில்லை என்று தொழிற்சங்கமும் முன்பு கூறியுள்ளன. கடந்த 2008ஆம் ஆண்டு ஆசிரியர்களின் ஊதியம் தொடர்பாக தேசிய அளவில் சர்ச்சை ஏற்பட்டது. ஊதியம் தொடர்பான நடவடிக்கைகளுடன் போராடும் பல துறைகளில் கல்வியும் ஒன்றாகும். வெளிநடப்பு செய்பவர்களில் ரயில்வே ஊழியர்கள் மற்றும் றோயல் மெயில் ஊழியர்கள் உள்ளனர். தொற்றுநோயால் தாமதமான 2019 தேர்தலின் போது வழங்கப்பட்ட…
விடுதலைப் புலிகளை தான் அழித்ததாக சொல்வதில் எவ்வித உண்மையும் இல்லை என முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். தீவிரவாத போக்குடைய தமிழ் மற்றும் சிங்களவர்களே இவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம் மாகாணங்களிற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆயுதமோதலின் போது உயிரிழப்பு என்பது சாத்தியமே என்றாலும் காணாமல் போனவர்கள் குறித்து மேலதிக தகவல்களை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்த விரும்பிய தாம் அதன் ஒரு பகுதியாக இருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாகவும் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
வரக்காபொல – தும்பிலியத்த பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று (வெள்ளிக்கிழமை) மண்சரிவு ஏற்பட்டதில் நால்வர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று (சனிக்கிழமை) மண்மேடுட்டில் சிக்கியிருந்த 48 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மண் மேட்டின் சிக்கியுள்ள மூவரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் நடவடிக்கையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் நேற்று ஆரம்பித்திருந்தனர். இதன்போது நேற்று ஆண் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், மேலும் மூவரை தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
உக்ரைனுக்கு கூடுதலாக 725 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதிப்படுத்தப்பட்டள்ளது. இந்த இராணுவ பொதியில், ஹிமார்ஸ் ரொக்கெட் லொஞ்சர்கள், வெடிமருந்துகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் அடங்கும். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் கீழ் மொத்தம் 18.3 பில்லியன் டொலர்கள் அளவுக்கு இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.