Author: admin

சமைக்காமல் இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த கணவனை இந்தியாவின் கர்நாடக உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மனைவியை கொலை செய்த கணவரை நீதிமன்றமே விடுதலை செய்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுவதுடன், சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாகவும் மாறியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள முடிகிரே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷா (43). இவருக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருந்த நிலையில், தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர், ராதா (33) என்ற பெண்ணை சுரேஷா கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். முதலில், ஓராண்டு இவர்களின் திருமண வாழ்க்கை நன்றாக போயிருக்கிறது. பின்னர் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு ஒரு நாள் அலுவலகத்தில் இருந்து சுரேஷா கொஞ்சம் முன்னதாக வீடு திரும்பியுள்ளார். எப்போதும் வரக்கூடிய நேரத்துக்கு முன்கூட்டியே சுரேஷா வந்ததால், வீட்டில்…

Read More

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை 22 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களின் அடிப்படையில் ஆவரங்கால் கிழக்கு, புத்தூரை சேர்ந்த 43 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரையும், அவரிடமிருந்து மீட்கப்பட்ட போதை மாத்திரைகளையும் மேலதிக நடவடிக்கைக்காக புலனாய்வு பிரிவினர் அச்சுவேலி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்

Read More

வீதியோரத்தில் நின்றிருந்த 71 வயதான முதியவர் மீது, இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் மோதியதில், அவர் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றதன் பின்னர் மரணமடைந்தார். சம்பவத்தை அடுத்து பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் இருவரும் தப்பியோடி தலைமறைவாகிவிட்டனர். இந்த சம்பவம் மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துக்கு அண்மையிலேயே இன்று (18) மாலை இடம்பெற்றுள்ளது. இதில், மன்னார் சாத்தான்குளம் பகுதியைச் ​சேர்ந்தவரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உறவினர்களும், பிரதேச மக்களும் விபத்து இடம்பெற்ற இடத்தில் முரண்பட்டதால், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. எனினும், அந்த பஸ் சம்பவ இடம்பெற்ற இடத்திலிருந்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது எனத் தெரிவித்த மன்னார் தலைமையக பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிப்பதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னராசா தெரிவித்தார். யாழ் ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய அ.அன்னராசா இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கம் சுற்றுச்சூழலை கருத்திற்கொண்டு இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கும் வளர்ப்பதற்கும் தடை விதித்துள்ளது. ஆனால் கடந்தவாரம் மன்னார் ஒலைத்தொடுவாய் பகுதியிலுள்ள கடலட்டை உற்பத்திக் குஞ்சு நிலையத்தில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிக்காக வருகை தந்துள்ளனர். இந்தியாவில் தடைசெய்யப்பட்ட கடலட்டை தொழிலுக்கு இலங்கையின் வடபகுதியில் இந்திய முதலீட்டாளர்கள் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவது கவலையளிக்கிறது. இந்தியாவில் தடைசெய்யப்பட்ட தொழில்நூட்ப முறைகளை இலங்கையின் வடபகுதியில் அமல்படுத்துவதை வடபகுதி மீனவர்கள் விரும்பவில்லை. இந்திய அரசு மற்றும் இந்திய துணைத் தூதரகம் என்பன இதனை கருத்தில் கொண்டு கடலட்டை சார்ந்த தொழில்நுட்பங்களை அமுல்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

Read More

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலத்தின் 2ஆவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 77 வாக்குகளும் எதிராக 17 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

Read More

ஆசிரியர்களை உருவாக்கும் வகையில் தேசிய மட்டத்தில் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read More

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே சுசில் பிரேமஜயந்த இதனைத் தெரிவித்தார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட பாடசாலைகளின் அதிபரினால் வழங்கப்பட்ட அடையாளச் சான்று ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், பரீட்சைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவர்களின் அடையாளத்தை மீள் சரிபார்ப்பதற்கு எவ்வித காரணமும் இல்லை எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது..

Read More

நாட்டின் சில பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, இங்கிரிய, பாலிந்தநுவர மற்றும் புலத்சிங்கள ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், கொழும்பு, களுத்துறை, காலி, நுவரெலியா, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Read More

இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகொப்டர் இன்று மதியம் 12.15 மணியளவில் 6 பேருடன் பயணித்தது. கேதார்நாத்தின் காட் ஷடி என்ற மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர் திடீரென தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகொப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்நிலையில் குறித்த, ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Read More

தேர்தல்களை பிற்போட உடன்படப்போவதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “தேர்தலை முன்கூட்டியே நடத்துமாறு போராடியக் கட்சியே எமது கட்சியாகும். தேர்தலை கோரி நீதிமன்றத்தைக்கூட நாடினோம். ஜனநாயகமே எமது கட்சியின் பிரதான நோக்கம். எனவே, தேர்தல்களை பிற்போட உடன்படமாட்டோம். அதனை பிற்போட வேண்டிய தேவையும் எமக்கு கிடையாது. ஏனெனில் வெற்றி என்பது எம் வசமே உள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

Read More