மாவனல்லை பகுதியில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனல்லை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள மியான் நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற வேளையில் குறித்த மாணவர் நீர்வீழ்ச்சியின் கரையில் இருந்து தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் படுகாயமடைந்த மாணவன் மாவனல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குண்டசாலை பகுதியைச் சேர்ந்த 17 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவனல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லையெனவும், சிறுபான்மை ஆதரவைக் கொண்ட பிரதமர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாயகரிடம் சத்தியக்கடதாசியை கையளிக்கவுள்ளனர். அந்த சத்தியக்கடதாசியில் கைச்சாத்திட இணக்கம் தெரிவித்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 115 யை கடந்துவிட்டதாகவும் அறியமுடிகின்றது. கையொப்பம் இடப்படும் சத்தியக்கடதாசி, அடுத்தவாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்நிலையில், பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த ராஜபக்ஷ விலக வில்லையெனில், பிரதமருக்கு எதிரான நம்பிக்கை பிரேரணையில் கையொப்பம் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை, நாளை (25) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆளும் தரப்பிலிருந்து வெளியேறி, எதிரணியில் சுயாதீனமாக இயங்கும் குழுவும் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. கையொப்பம் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, அடுத்த பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளிலேயே கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அறியமுடிகின்றது.
கொழும்பில், அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. இந்நிலையில், கொழும்பின் பிரதான இடங்களுக்குச் செல்லும் வீதிகளில் நிலையான இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வழியாக பயணிக்க வேண்டிய பஸ்கள், வேறு வழிகளுக்கு திரும்பிவிடப்படுகின்றன. நடந்துச் செல்வோர் கூட இரும்பு வேலிக்குள் நுழைய முடியாத அளவில், மிக நெருக்கமாக இரும்புகள் கட்டப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை, யோர்க் வீதி, வங்கி வீதி உள்ளிட்ட இடங்களிலேயே வீதிகளை முழுமையாக மறைத்து இவ்வாறு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பொலிஸாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர், சுகாதாரம் மற்றும் நீர் தொடர்பான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதே அரசாங்கத்தின் தேசிய இலக்கு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். தற்போதுள்ள நீர் வழங்கல் திட்டங்களின் கொள்ளளவையும் தரத்தையும் மேம்படுத்தி, நாடு முழுவதும் புதிய நீர் திட்டங்கள் ஆரம்பிக்கப் படும் என ஜனாதிபதி தெரிவித்தார். இன்று முற்பகல் ஜப்பானின் குமமோட்டோவில் இடம்பெற்ற 4ஆவது ஆசிய பசுபிக் நீர் உச்சி மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கொவிட் -19 தொற்றுநோய் இருந்தபோதிலும், கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையால் பொதுமக்களுக்கு முன்னரை விட 50% க்கும் அதிகமான தண்ணீரை வழங்க முடிந்துள்ளது. நீர் சுழற்சி முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் நீர் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் கொவிட் -19 தொற்று நோயால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் விளைவாக வளங்களுக்கான அணுகல் தடைப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். எனினும், கடந்த இரண்டு வருடங்களில், பங்கேற்பு அபிவிருத்திக்…
இலங்கையில் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், யாழ். போதானா வைத்தியசாலையிலும் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது. மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளதை வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி.யமுனாநந்தா ஐ.பி.சி தமிழ் செய்தி பிரிவுக்கு உறுதிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அத்தியாவசியம் தவிர்ந்த, ஏனைய சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளது. குருதிப் பரிசோதனை உள்ளிட்ட அடிப்படை ஆய்வுகூட பரிசோதனைகளைக்கூட செய்யமுடியாத அபாயகரமான சூழல் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
தமிழர்களின் தொல்பொருள் அடையாளங்கள் பல உள்ள திருகோணமலை மூதூர் 64ம் கட்டையில் உள்ள ராஜவந்தான் மலைக்கு இன்று காலை தமிழ் மக்கள் மற்றும் சைவ மதகுருக்கள் வழிபாடுகளில் ஈடுபடுவதற்காகச் சென்ற போது பௌத்த பிக்கு ஒருவர் வீதியை மறித்து மக்களை தொடர்ந்து செல்லவிடாது தடுத்துள்ளார். அத்துடன் அங்கு சென்ற தமிழர்களை இனவாதத்தைத் தூண்டும் விதத்தில் மிகவும் கீழ்த்தரமாக பேசியும் அவர்களின் தொலைபேசிகளை பறித்து எறிந்தும் அடாவடியில் ஈடுபட்டுள்ளார். இதன் போது அங்கு நின்ற பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் மக்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்களையும் எடுத்துள்ளனர். இந்த ராஜவந்தான் மலையின் கீழ் சகாயபுரம் (வெட்டுக்காட்டுச்சேனை) மாணிக்கப்பிள்ளையார் ஆலயம் அமைந்துள்ளது. அப்பிரதேச மற்றும் அயல்ப்பிரதேச மக்கள் மலையின் மீது சென்று வழிபட்டுவந்த நிலையில் மூன்று வருடங்களிற்கு முன்னர் மலையின் மேல் இருந்த வழிபாட்டிடம் அழிக்கப்பட்டு அங்கு பௌத்த சின்னங்களை நிறுவும் வேலைகள் நடைபெற்று வருகின்றதெனவும் தெரியவருகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க இடைக்கால அரசாங்கத்தை அமைக்குமாறு போராட்டக்காரர்கள் விடுத்த கோரிக்கையை அந்நாடு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சனிக்கிழமை நிராகரித்தார். “மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ள முடியாதபோது, இதுபோன்ற அரசியல் அமைப்புகளால் எந்தப் பயனும் இல்லை” என்று அவர் தெரிவித்தார். ஒருவேளை அப்படியொரு அமைச்சரவை அமைந்தால் அதற்கு நானே தலைவன் என்றும் அவர் கூறினார். முக்கிய இறக்குமதிகளை செய்ய இயலாத வகையில் போதிய பணமின்றி இலங்கை அரசாங்கம் தவித்து வருவதாகக் கூறி ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் இலங்கையின் பல்வேறு நகர வீதிகளில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டக்காரர்களை முன்னெடுத்து வருகின்றனர். இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடுமயாக உயர்ந்துள்ளன. எரிபொருள், மருந்துகள் மற்றும் மின்சார விநியோகத்தில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமானால், அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த…
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் நேற்று (22) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 16,500 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 02 மரணங்களுடன், *இலங்கையில் இதுவரை 16,502 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளன.* இவ்வாறு மரணமடைந்தவர்கள் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட 01 ஆண் மற்றும் 01 பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மத்திய இரத்த வங்கியில் இரத்தத்தை சேகரிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரத்தில் இரத்தம் ஏற்றுவதற்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சுகாதார சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இரத்தம் சேமிக்கும் பைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும் அதனை நிர்வகித்து வருவதாக மத்திய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் குடியேற்ற திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்