20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் அணியின் சகல துறை விளையாட்டு வீரர் சாமிக்க கருணாரத்ன, சிட்னி நகரில் கெசினோ சூதாட்ட விடுதி ஒன்றில் மோதலை ஏற்படுத்திக்கொண்டதாக செய்தி வெளியாகியுள்ளது. கெசினோ சூதாட்ட நிலையத்தில் இருந்த ஒருவரை சாமிக்க கருணாரத்ன தாக்கியுள்ளதாகவும் கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் ஷானக மற்றும் ஷானுக ராஜபக்ச ஆகியோர் தலையிட்டு சமரசம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாட அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை கிரிக்கெட் அணிக்கு விருந்துகளில் கலந்துக்கொள்ளுமாறு சுமார் 20 அழைப்புகள் கிடைத்துள்ளது. எனினும் அணியின் முகாமைத்துவம் 5 விருந்துகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தது. எனினும் சில கிரிக்கெட் வீரர்கள், அணியின் முகாமையாளரை ஏமாற்றி வரம்பு மீறி நடந்துக்கொண்டதாகவும் சில வீரர்கள் வரையறுக்கப்பட்ட நேரத்தை கடந்தே தங்கியிருந்த ஹோட்டல் அறைகளுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தனுஷ்க குணதிலக்கவின் சம்பவத்தின் பின்னர், கிரிக்கெட்…
Author: admin
கொழும்பு – ஃப்ளவர் வீதியிலுள்ள தாய்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தாய்லாந்து தூதுவர் போஜ் ஹன்போலின் வாசஸ்தலத்துக்குள் நுழைந்த மர்ம நபர் சுமார் 5000 ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் 300,000 ரூபா பணத்தை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்கும் காலை 7 மணிக்கும் இடையில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. திருடப்பட்ட பொருட்களில் கையடக்கத் தொலைபேசி, நினைவுப் பரிசு, தாய்லாந்து நாணயம் மற்றும் இலங்கை ரூபா என்பன உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வாசஸ்தலத்துக்கு வெளியில் நின்றிருந்த போதும், மற்றொரு தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீட்டிற்குள் இருந்த போதிலும் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் சந்தேநபர்கள் எவரும் கைதுசெய்யப்படாத அதேவேளை, கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி ஒன்றை வேனில் எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை புத்தளம் குற்றப்புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகத்துக்குரிய சட்டத்தரணி தனது வேனில், சாலியவெவ கலாவெவ பகுதிக்குச் சென்று கொண்டிருந்த போது வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோதே துப்பாக்கி கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம். கிழக்கு மாகாணத்திலும் பொலனறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். கடல் பகுதிகள்: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.காற்று வடகிழக்கு அல்லது திசையில் மாறுபடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும். அது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். காங்கேசன்துறையிலிருந்து மன்னார்…
கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகு ஒன்றில் இருந்து புலம்பெயர்ந்தோர் என சந்தேகிக்கப்படும் சுமார் 300 பேர் சிங்கப்பூர் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. படகில் இருந்த இலங்கைப் பிரஜை ஒருவர், இலங்கை கடற்படையினரைத் தொடர்பு கொண்டு, தாங்கள் ஆபத்தில் இருப்பதாகவும், கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் உதவியை நாடியதாகவும் தெரிவித்ததாக இலங்கை கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் படகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு வியட்நாம் நோக்கி அழைத்துச் செல்லப்படுவதாக சிங்கப்பூர் அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கப்பலில் இலங்கையர் ஒருவர் இருப்பது மட்டுமே இலங்கை கடற்படையினருக்கு உத்தியோகபூர்வமாகத் தெரியும். எனினும் ஏனையவர்கள் யார் என்ற விடயம் வியட்நாமில் தரையிறங்கிய பின்னரே கண்டறியப்படும் எனவும் கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீண்ட உள்நாட்டுப் போரில் இருந்து தப்பிக்க இலங்கையர்கள் சில சமயங்களில் அபாயகரமான சட்டவிரோத…
உலகின் ஏனைய நாடுகளில் பரவி வரும் குரங்குக் காய்ச்சல் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜூம் தொழிநுட்பத்தினூடாக இடம்பெற்ற குரங்குக் காய்ச்சல் தொடர்பான விசேட கலந்துரையாடலின்போது உரையாற்றிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா, வெளிநாடுகளில் இருந்து அறிகுறியற்ற நோயாளர்கள்கூட இலங்கைக்கு வரமுடியும் எனவும் தெரிவித்தார். இலங்கையில் அடையாளம் காணப்பட்ட நோயாளரை சிறப்பாக நிர்வகித்து, அவரை சிகிச்சைக்காக அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இதுபோன்ற நோயாளிகள் அதிகம் வரும் அபாயம் உள்ளதென்றும் இந்த நோய் உலகின் ஏனைய பகுதிகளில் இன்னும் இருப்பதால், ஒரு கட்டத்தில் அதிகமான வழக்குகள் பரவக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். தற்போது அறிகுறியுடன் அடையாளம் காணப்பட்ட ஒருவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சில நேரங்களில் அறிகுறியற்ற நோயாளிகள்கூட இலங்கைக்கு வரலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். சிலருக்கு அறிகுறிகள்…
காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி வனவிலங்கு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். உடவளவையில் உள்ள யானைகள் பராமரிப்பு நிலையத்தில் கடமையாற்றிய வனவிலங்கு அதிகாரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று காலை வனவிலங்கு உத்தியோகத்தர் வன விலங்குகளுக்கு உணவளிக்க சென்ற போதே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். காயமடைந்த அதிகாரி எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த அதிகாரி பனாட்டுவ பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவை ஒக்டோபர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கட் வீரரை அறிவித்துள்ளது. அதற்கமைய, இந்திய கிரிக்கட் அணி வீரர் விராட் கோஹ்லி ஒக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் சிம்பாம்வே அணி வீரர் சிகந்தர் ராசா மற்றும் தென்னாபிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன. எவ்வாறாயினும், குறித்த இருவரையும் பின்தள்ளி விராட் கோஹ்லி ஒக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான கோப்-27 மாநாட்டில் கலந்துகொள்வதற்காக எகிப்தின் ஷாம் எல் ஷேக் நகருக்கு பயணித்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை சற்று முன்னர் சந்தித்தார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஸ்லோவேனியா குடியரசின் ஜனாதிபதி போரட் பாகோர்க்கும் இடையில் இன்று (07) சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்லோவேனியா ஜனாதிபதி மிகவும் அன்புடன் வரவேற்றதுடன், இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் சுற்றாடல் அமைச்சர் நசீர் அஹமட் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவன் விஜேவர்தன ஆகியோரும் கலந்துகொண்டனர்.
ஹம்பாந்தோட்டை கடற்பிராந்தியத்தில், இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 300 கிலோகிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய 02 மீன்பிடிப் படகுகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. போதைப்பொருள் ஒழிப்பு பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டதாக இலங்கை கடற்படை குறிப்பிட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயின் மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய் என்றும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள், இழுவைப் படகுகள் மற்றும் கைதாகிய 10 சந்தேகநபர்கள், இன்று (07) காலை காலி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டனர். கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, சரக்குகளை பார்வையிடுவதற்காக காலி துறைமுகத்துக்கு வருகை தந்திருந்தார். இந்த சோதனை நடவடிக்கையின் போது, இலங்கை கரையில் இருந்து 10 கடல்மைல் தொலைவில் மீன்பிடிப் படகின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டத்தை அவதானித்த கடற்படை, படகை…