Author: admin

நாசகாரச் செயல் ஒன்றின் காரணமாக கொழும்பில் 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் கொழும்பு-02 நவம் மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடமொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் வௌிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர் கைது செய்யப்பட்டுள்ளவர்களை இன்று ஞாயிற்றுக்கிழமை கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Read More

சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்கான அடுத்தகட்ட செயற்பாடுகளை இலங்கை விரைவில் ஆரம்பிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். மேற்படி செயற்பாடுகள் நாட்டின் வணிகச் செயற்பாடுகளை இலகுபடுத்துவது தொடர்பான மதிப்பீடுகள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தல் போன்ற விடயங்கள் மீது நேரடியாக தாக்கம் செலுத்தும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நுவரெலியா கிரேண்ட ஹோட்டலில் நேற்று (03) நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டின் 2 ஆம் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். “பொருளாதாரத்தை வழமைக்கு திருப்பும் முயற்சிகளில் நீதிக் கட்டமைப்பின் பணியும் வணிக நிலைத்தன்மையும்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்று வரும் மேற்படி மாநாடு இன்று (04) நிறைவடையவுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிகளை வழங்குவதை தடுப்பதற்காக காணப்படும் சட்டதிட்டங்களின் இடைவெளிகளை விரைவில் கண்டறிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில்…

Read More

இந்த ஆண்டின், முதல் 5 மாதங்களில், 524,486 சுற்றுலாப் பயணிகள், நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதத்தில் மாத்திரம், 83 309 வெளிநாட்டவர்கள், சுற்றுலா வீசா மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு(2022) மே மாதம், 30,207 சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா வீசா மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனர். எனவே, இந்த ஆண்டில், குறித்த காலப்பகுதியில், சுற்றுலாவில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை, 175.8 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சிறிலங்கா அபிவிருத்தி பத்திரங்கள் 2001 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டதன் மூலம் சிறிலங்காவின் வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் ஆரம்பமாகி 1,720 மில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றுள்ளன. 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த அறிக்கையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் 2007ஆம் ஆண்டு முதல் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை வழங்கி மேலும் 1,760 மில்லியன் டொலர்கள் வர்த்தகக் கடன்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. அத்தோடு, 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரணில் விக்ரமசிங்க, சிறிலங்காவின் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான தகவல்களை விசாரிக்க சர்வதேசத்தின் ஆதரவைப் பெற வேண்டும் என வெளிப்படுத்தியிருந்தார். இந்நிலையில், அவர் பெரும் கடனை மறைத்ததாக சொல்லி அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மத்திய வங்கியால் வழங்கப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கடன்கள் தொடர்பான தகவல்களின்படி, 2001 முதல் 1,720 மில்லியன் டொலர் வளர்ச்சிப் பத்திரங்கள் மற்றும் 2007 முதல் 1,760 டிரில்லியன் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் மூலமாக…

Read More

கேரள கஞ்சா ஒரு கிலோவும் பத்து கிராமை தம் வசம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் பொலிஸ் அதிகாரியொருவரை இம்மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் நேற்று (3) உத்தரவிட்டுள்ளார். முள்ளிப்பொத்தானை- 10ஆம் கொலனியில் வசித்து வரும் நான்கு பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் திருகோணமலையில் அனுராதபுர சந்தியில் இருந்து முச்சக்கர வண்டியில் கேரளா கஞ்சா பொதியை ஏற்றிக்கொண்டு சென்ற போதே 96ஆம் கட்டை பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு அருகில் வைத்துக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விசேட பொலிஸ் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்போபுர பொலிஸ் அதிரடிப் படையினருக்குக் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் சந்தேக நபரை கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் . சந்தேக நபரை தம்பலகாமம் பொலிஸார் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் (வாசஸ்தல்) ஆஜர்படுத்திய போதே…

Read More

எஹலியகொட, பன்னில பிரதேசத்தில் நேற்று (3) மாலை தன்சல் ஒன்றிற்கு அருகில் 23 வயதுடைய இளைஞரொருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரின் குடும்பத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சூப் தன்சலுக்கு அருகாமையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபரின் பணப்பையிலிருந்த பணம் தொலைந்து போனதையடுத்து அவருக்கும் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என கூறப்படும் சந்தேக நபருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து குறித்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கெலைச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் இன்று (04) காலை நாற்காலியில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். களனி வெதமுல்ல சாந்தி விஹார மாவத்தையைச் சேர்ந்த கருணாரத்ன ஆராச்சிகே தர்மசேன (வயது 73) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் துப்புரவுப் பிரிவில் கடமையாற்றும் இவர், மேற்படி வளாகத்தின் மேல் தளத்தில் துப்புரவுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வசித்து வந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இராணுவச் சிப்பாய் ஒருவர் இன்று காலை கடமைக்காக துப்புரவுப் பிரிவுக்குச் சென்று கொண்டிருந்த போது, ​​அதன் முன்னிருந்த நாற்காலியில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் இறந்துக்கிப்பதைக் கண்டு, மேலதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். அதன் பிரகாரம் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் சென்று சோதனையிட்ட பின்னர், தலங்கம மரண விசாரணை அதிகாரி சமாதான நீதவான் பிரேமலதா அபேவர்தன சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொழும்பு…

Read More

பெற்றோரின் முறையான கண்காணிப்பு சிறுவர்கள் மீது இல்லாத காரணத்தாலும், அக்கறையின்மையினாலுமே 80 வீதமான சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதென யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்தார். சங்கானையில் சிறுவர் துஸ்பிரயோகத்தை தடுத்தல் என்ற தொணிப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் வன்முறைகளில் இருந்து அவர்களைக் காப்பற்ற முடியும். யாழ்ப்பாணத்தில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகமாகவே உள்ளன. இவ்வாறான சம்பவங்களை நாங்கள் தனித்தனியாக மதிப்பீடு செய்த போது, அவற்றில் 80 வீதமானவை பெற்றோரின் முறையான கண்காணிப்பு இல்லாத காரணத்தாலும், சிறுவர்கள் மீதான அக்கறையின்மையினாலுமே இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தடுப்பதில் நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும். சட்டத்தை உருவாக்குபவர்கள், அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் பங்குண்டு. அத்துடன் ஊடகங்களுக்கும் பெரும் பங்கு உண்டு. எனவே நாம் அனைவரும் ஒன்றாகி…

Read More

ரயில் தடம் புரண்டதால் மலையக வீதியில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. கண்டியில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த செங்கடகல மெனிகே ரயில் கடிகமுவ மற்றும் ரம்புக்கணை ரயில் நிலையத்திற்கு இடையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக மலையகப் ரயில் வீதியின் ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read More

பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் தடங்கல்கள் எதுவுமில்லாமல் பெற்றுக்கொள்ள முடியும். இதற்காக நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான அளவு எரிபொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று எரிபொருள் கொள்கலன் விநியோக உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் சாந்த டி சில்வா தெரிவித்தார். அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் வேண்டுகோளுக்கு இணங்க, பௌர்ணமி தினத்திலும் எரிபொருள் கொள்கலன்கள் விநியோகச் செயற்பாட்டில் ஈபட்டுள்ளதோடு மேல் மாகாணத்தில் 90 சதவீதத்துக்கும் அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாவும் அவர் மேலும் குறிப்பிட்டார். கொழும்பில் சனிக்கிழமை (3) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 31 ஆம் திகதியன்று நள்ளிரவு எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டிருந்து. எரிபொருளின் விலை குறைக்கப்படுவதை முன்கூட்டி கணித்திருந்த எரிபொருள் விநியோகஸ்தர்கள், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் ஐ.ஓ.சி. நிறுவனங்களிடம் எரிபொருள் கொள்வனவில் ஈடுபடாமல்…

Read More