Author: admin

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை உடனடியாக நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்றம், இன்று (10) இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது. அவரை, கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்பின் 12(1), 13(1) மற்றும் 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறும் அடிப்படை உரிமைகள் மீறல் மனுவை ஜனவரி 31ஆம் திகதி பரிசீலிக்கவும் நீதியர்சர்களான விஜித் மலல்கொட மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய குழாம் தீர்மானித்தது.

Read More

மக்கள் அச்சமடையும் விடயங்களே சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட உடன்பாட்டில் உள்ளடக்கப்பட்டு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், ‘நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியமே ஒரே தீர்வு என்று அரசாங்கமானது தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்மட்ட உடன்பாட்டில் கூறப்பட்டுள்ள விடயங்களை ஹர்ஷ டி சில்வா எம்.பி சபைக்கு கூற முற்பட்டபோது நிதி இரஜாங்க அமைச்சர், அதனை கூறி மக்களை அச்சத்துக்குள் தள்ள வேண்டாம் என்று கூறினார். சர்வதேச ஊழியர்மட்ட உடன்பாட்டில் பொதுமக்கள் அச்சமடையும் விடயங்களே உள்ளடங்கியிருப்பது இதனூடாக உறுதியாகின்றது. பொறுப்புடன் ஒரு விடயத்தை கூறுகின்றேன். மார்ச் மாதம் 02 ஆம் திகதி சர்வதேச நாணய நிதியம் சமர்ப்பித்த ஆர்டிக்கல் 4இல் ஐந்து நிபந்தனைகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. வரியை அதிகரித்தல், வரி விலக்கை இல்லாமல்…

Read More

பல ஆசிரியர்கள் உரிய ஆடைகளை அணிந்து பணிக்கு சமூகமளிக்கத் தயக்கம் காட்டுவதாக கல்வி அமைச்சர் கூறியுள்ளமையால் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தப்படுவதாக அதன் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். இணையவழி மூலம் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி முறையில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது. மாணவர்களின் புத்தகங்கள் மும்மடங்கு அதிகரித்துள்ளது.பரீட்சை கடமையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இவ்வாறான நெருக்கடியை பற்றி பேசுவதற்கு பதிலாக, கல்வி அமைச்சு சேலையை தெரிவு செய்துள்ளது. இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தங்கள் பற்றி வெளிப்படையாக பேசினோம். அது குறித்து எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது, ​​இலங்கை ஆசிரியர் சங்கம் நாடு தழுவிய இணையவழி கணக்கெடுப்பு ஒன்றை தொடங்கியுள்ளது. ஆசிரியர்களின் கருத்தைக் கேட்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். 90% ஆசிரியைகளுக்கு இது பிடிக்கவில்லை என்று அமைச்சர்கள் தெரிவித்தனர். எத்தனை பேர் இதை விரும்பவில்லை என்பதை அமைச்சருக்கு தெரிவிப்பதற்காக நாம் இந்த கருத்துக்கணிப்பை முன்னெடுத்துள்ளோம்.

Read More

ஒரு லீற்றர் டீசல் 12 ரூபா நட்டத்திலேயே தற்போது விற்பனை செய்யப்படுவதாக எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி சானக்க தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேயின் வினாவுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் பாராளுமன்றத்தில் இதனை தெரிவித்தார். எரிபொருள் விலை சூத்திரத்திற்கமைய எரிபொருள் விலையில் மாற்றங்களை கொண்டுவருவதாக, அமைச்சர் கஞ்சன விஜயசேக்கர முன்னதாக அறிவித்திருந்தார். எனினும், விலைசூத்திரத்துக்கேற்ப எரிபொருள் விலையில் மாற்றங்களைச் செய்யாதமை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகுமென ஹேஷா விதானகே தெரிவிக்கின்றார். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கின்ற சந்தர்ப்பத்தில், விலைசூத்திரத்திரத்தை பயன்படுத்தி விலை அதிகரிக்கப்படுகின்றது. குறைவடைகின்ற சந்தர்ப்பத்தில் ஏன் மக்களுக்கு எரிபொருளை குறைந்த விலையில் பெற்றுக்கொடுக்க முடியாதெனவும் ஹேஷா விதானகே வினவினார். இதற்கு பதிலளித்த இராஜாங்க டி.வி சானக்க, டீசல் ஒரு லீற்றர் 12 ரூபா நட்டத்திலும், மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 22 ரூபா நட்டத்திலும் விற்பனை செய்யப்படுகின்றது. உலக சந்தையில் கடந்த வாரம் எரிபொருளுக்கான விலை…

Read More

நாட்டில் இரண்டு குரங்கு காய்ச்சல் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள போதிலும் இது ஒரு தொற்றுநோய்க்கான ஆரம்பம் அல்ல என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். டுபாயைச் சேர்ந்த ஒருவருக்கு குரங்குக் காய்ச்சல் இருப்பது நேற்று கண்டறியப்பட்டதையடுத்து, நாட்டில் இதுவரை இரண்டு குரங்குக் காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். எவ்வாறாயினும் இது தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருப்பது அவசியம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த நோய் விலங்குகளுக்கு பரவும் நோய் என்பதால், நெருங்கிய தொடர்பு இல்லாமல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு இந்த நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இவ்வாறான நோயுற்றவர்களைச் சந்திப்பதால் இந்நோய் தாக்கும் என எண்ணி, நோயாளியை சந்திப்பதன் அடிப்படையில் தேவையற்ற பயத்தை உருவாக்க வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நோய்…

Read More

அதிக குடிநீர் கட்டணம் தொடர்பான வாக்குவாதம் முற்றியதில் குடிநீர்மானி வாசிப்பாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் இன்று (நவ.10) காலை கைது செய்யப்பட்டதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்டவர் வடக்கு பயாகல பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்த நபர் களுத்துறை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார். சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Read More

வாகன விபத்தில் படுகாயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பேராதனை பல்கலைக்கழக பல் வைத்திய பீடத்தின் மூன்றாம் வருட மாணவி உயிரிழந்துள்ளார். பல்கலைக்கழக ஹில்டா ஒபேசேகர மாணவர் விடுதிக்கு முன்பாக கடந்த நவம்பர் 01ஆம் திகதி இடம்பெற்ற இவ்விபத்தில் சச்சினி கலப்பத்தி எனும் 23 வயதான மாணவி காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (08) உயிரிழந்துள்ளார். இவர் தங்காலை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என பேராதனை பல்கலைக்கழக பிரதி உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்த மாணவியுடன் பயணித்த மேலும் இரு மாணவிகளும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் தற்போது குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் பல்கலைக்கழகத்திலிருந்து ஹில்டா ஒபேசேகரவிலுள்ள தங்கும் விடுதிக்கு சென்று கொண்டிருந்த போது, கார் ஒன்று மோதியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாகன சாரதியின் தூக்கமே விபத்துக்கான காரணமென…

Read More

மட்டக்களப்பு விமானபடபடை தளத்திற்கு முன்னால் உள்ள சுமைதாங்கி சந்தி வீதியை ஊடறுத்து 3 அடிக்கு மேல் வெள்ளநீர் பாய்ந்துவருவதால் பகுதி ஊடாக செல்லும் புதூர், வுணதீவு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பயணிக்க முடியாத நிலை. நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையினால் மட்டக்களப்பு வாவிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து பல பிரதேசங்களுக்களை ஊடறுத்துச் செல்லும் பாலங்களின் மேலால் வெள்ள நீரி பாய்ந்துவருகின்றது. இந்த நிலையில் மட்டு நகர் பகுதியினையும் புதூர் வீச்சுகல்முனை, சேத்துக்குடா மற்றும் வவுணதீவு பிரதேசத்தையும் இணைக்கும் இந்த சுமைதாங்கி வீதியினை ஊடறுத்து வெள்ள நீர் ஓடுவதால் அந்தபகுதி மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நகருக்கு வருமுடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது.

Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு விடுமுறை வழங்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று(8) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து, விடுமுறை கோரிக்கைக்கு அனுமதி வழங்குவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Read More

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி, தனிநபர்களுக்கான புதிய வருமான வரி விதிகள் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. முன்னதாக, ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் புதிய வரிச் சட்டம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டது. இந்தநிலையில் புதிய சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி அரசியலமைப்பின் 120 மற்றும் 121 ஆவது பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் மீதான விசாரணையின் போது சட்டமா அதிபர் வழங்கிய உறுதிமொழி காரணமாக இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Read More