‘சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. அது ராஜபக்ஷக்களுக்கு வேண்டுமானால் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சீனா ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமிக்கிறது. இலட்சம் வழங்குவதற்கு முனைகிறது. உய்குர் முஸ்லிம்களை புனர்வாழ்வு என்ற பெயரில் சிறைவாழ்வுக்கு உட்படுத்தியுள்ளது’ என நாடாளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார். அதேநேரம், ’20ரில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டுள்ள சீனா, 7.4 பில்லியன் டொலர்கள் கடன் செலுத்த வேண்டிய இலங்கை விடயத்தில் இறுக்கமாக இருக்கின்றது. 22 மில்லியன் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையேல் ‘கோ ஹோம் சீனா’ போராட்டம் ஆரம்பமாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சாணக்கியனின் இந்தக் கருத்துக்கள் சீனாவிற்கு நிச்சயமாக சினமூட்டியிருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இலக்கையின் சீன தூதரகம் உடனடியாகவே டுவிட்டரில் பிரதிபலிப்பைச்…
Author: admin
தற்போது வாழ்வின் எழுச்சி திணைக்களத்தின் நிர்வாகத்திலுள்ள மொனராகலை-பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பயிற்சி நிலையமாக மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனூடாக மொனராகலை மாவட்டத்தில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை எதிர்பார்ப்பவர்களுக்கு தேவையான பயிற்சி வசதிகளை வழங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுமென அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அதற்கமைய, தற்போது மொனராகலை-பிபில வீதியோரத்தில் அமைந்துள்ள பயிற்சி நிலையம் மற்றும் வளாகத்தை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்திற்கு ஒப்படைப்பதற்காக மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சராக ஜனாதிபதி மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2021-2022 ஆம் ஆண்டுக்கான பெரும்போக செய்கையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான 657 மில்லியன் ரூபா இழப்பீட்டு தொகையை விவசாயம் மற்றும் கமநல காப்புறுதி சபையூடாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வறட்சி, வௌ்ளம் மற்றும் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்திற்கொண்டு விவசாயிகளுக்கான இழப்பீட்டு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வளவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் 42,934 ஏக்கரில் பாதிக்கப்பட்ட 31,613 விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.
வடகிழக்கு பருவப்பெயர்ச்சி படிப்படியாக நாட்டிற்கு குறுக்காக நிலைபெற்று வருவதால் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் உருவாகியுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்வங்காள விரிகுடா கடற்பரப்புகளின் மத்திய பகுதிகளுக்கு மேலாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளமையே இதற்கு காரணமாகும். குறை அழுத்த பிரதேசம் எதிர்வரும் மூன்று நாட்களில் மேற்கு – வடமேற்குத் திசையில் நகர்ந்து இலங்கையின் கரையோரப் பிரதேசங்களை நோக்கி கிரமமாகச் செல்லக்கூடிய சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் இடைக்கிடை கன மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டில், இலங்கை பாடசாலை மாணவர்களின் 70 சதவீத சீருடைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 90 மில்லியன் சீன யுவான் (5 பில்லியன் ரூபாய்) பெறுமதியான பாடசாலை சீருடை துணிகளை சீனா அன்பளிப்பாக வழங்கியுள்ளது. 1வது தொகுதியில், 20 கொள்கலன்கள் மூலம் 38 ஆயிரம் பெட்டிகளில் 3 மில்லியன் மீற்றர் துணியை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
நாளை (20) முதல் எதிர்வரும் 22ஆம் திகதிவரை பிற்பகல் வேளையில் 1 மணி நேரமும்இரவு வேளையில் 1 மணிநேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தாய்லாந்து வளைகுடாவில் நேற்றிரவு ஏற்பட்ட கடும் புயலின் போது தாய்லாந்து கடற்படை கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில், 100 க்கும் மேற்பட்ட கடற்படையினர் பயணித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. HTMAS Sukhotai என்ற கப்பல் மூழ்கிய நிலையில், 33 கடற்படையினர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. பிரச்சுவாப் கிரி கான் மாகாணத்தில், பேங் சபான் மாவட்டத்தின் கடற்கரையிலிருந்து 32 கிலோமீற்றர் (20 கடல் மைல்) தொலைவில் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு 150க்கு மேல் சென்றதாகவும் இந்தப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக NBRO அறிக்கை தெரிவித்துள்ளது. இதேவேளை இலங்கையின் காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதோடு கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காற்றின் தரத்தில் மாற்றம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகக்கிண்ண காற்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஆர்ஜென்டினா வெற்றி பெற்றதையடுத்து, சர்வதேச காற்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என லயனல் மெஸ்ஸி நேற்று (18) தெரிவித்துள்ளார். உலக சாம்பியனாக இன்னும் சில போட்டிகளில் விளையாட விரும்புவதாக உலகக்கிண்ண போட்டிக்கு பின்னர் கட்டாரில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஒரு காற்பந்து வீரர் பெறக்கூடிய ஒவ்வொரு கிண்ணத்தையும் வென்றுவிட்டதாகவும், இறுதியாக உலகக்கிண்ணத்தையும் வென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இதுவே தனது கடைசி உலகக்கிண்ணம் என்று அவர் குறிப்பிட்டார்.
கத்தார் உலகக் கிண்ணக் கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி இன்று லுசைல் மைதானத்தில் 90,000 இரசிகர்கள் முன்னிலையில் விறுவிறுப்பாக இடம்பெற்று முடிந்தது. கால்பந்து உலகக்கோப்பை 2022 தொடரின் இறுதிப்போட்டியில் இன்று ஆர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் ஆகிய அணிகள் மோதியிருந்தன. வழங்கப்பட்ட ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் 3-3 என சமநிலையில் இருந்த நிலையில், பெனால்டி முறையில் வெற்றி தீர்மானிக்கப்பட்டது. இதில் ஆர்ஜெண்டினா நான்கு முறை கோல்களை போட்டு வெற்றியை தனதாக்கிக்கொண்டது.இதன் மூலம் 36 ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது முறையாக ஆர்ஜெண்டினா உலகக்கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இறுதி போட்டியை பார்க்க கத்தார் சென்ற பிரான்ஸ் ஜனாதிபதி தோல்வியை தழுவி கண் கலங்கி நின்ற தமது நாட்டு வீரர்களை கட்டித்தழுவி ஆறுதல் கூறியுள்ளமை பார்ப்பவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை,நடப்பு உலக கோப்பை கால்பந்து தொடரில் 8 கோல்களை அடித்த பிரான்சின் எம்பாப்வேக்கு தங்க காலணி பரிசாக வழங்கப்பட்டுள்ளது.