உலகக்கோப்பையை ஏந்தியபடி, இன்ஸ்டாகிராமில் மெஸ்ஸி பதிவேற்றிய புகைப்படம், ஐந்தரை கோடி லைக்குகளை பெற்றுள்ளது. விளையாட்டு வீரர் ஒருவர் பதிவேற்றிய புகைப்படத்திற்கு இவ்வளவு லைக்குகள் கிடைப்பது, இதுவே முதல்முறையாகும். இதற்குமுன், லூயி வுய்டோன் ஆடை நிறுவன விளம்பரத்திற்காக மெஸ்ஸியுடன் செஸ் விளையாடுவதுபோல் கிறிஸ்டியானோ ரொனால்டோ பதிவேற்றிய புகைப்படம், நான்கரை கோடியை அண்மித்தளவில் லைக்குகளை பெற்றிருந்தது அதிகப்பட்சமாகக் கருதப்பட்டது.
Author: admin
மத்திய கிழக்கு நாடான கட்டார் இதுவரையில் எந்தொரு விளையாட்டுப் போட்டிக்கும், நிகழ்ச்சிக்கும் செலவு செய்திடாத வகையில் 2022 FIFA உலகக் கிண்ணத்திற்கு செலவு செய்துள்ளது. FIFA உலகக் கிண்ணப் போட்டிக்காகவும் அதன் ஏற்பாடுகளுக்காகவும் சுமார் 220 பில்லியன் டொலர்களைச் செலவிட்டு உலக நாடுகளை வியக்க வைத்துள்ளது. இந்தப் பெறும் திட்டத்தின் கட்டுமானத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும், உதைபந்து இரசிகர்கள் மூலம் உருவாக்கும் வர்த்தகத்திற்காகவும் உலகின் பல நாடுகளில் இருந்து ஊழியர்கள் கட்டாரில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். தற்போது இவர்களின் நிலை என்ன..? நவம்பர் 20 ஆம் திகதி மிகவும் பிரம்மாண்டமான முறையில் FIFA உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பல நாடுகள் எப்படியாவது வெல்ல வேண்டும் எனக் கனவுடன் வந்தாலும் இறுதிக் கட்டத்திற்கு வந்தது அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய அணிகள் தான். அர்ஜென்டினா அணி தலைவர் லியோனல் மெஸ்ஸியின் நீண்ட காலக் கனவு ஞாயிற்றுக்கிழமை நனவாகியது. 36 வருடங்களுக்குப் பின் அர்ஜென்டினா உலகக் கிண்ணத்தை…
2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் வேலைதிட்டத்திற்காக கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கான இறுதி திகதி டிசெம்பர் 23 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்காக விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் குறித்த விண்ணப்பப்படிவத்தை தமது அதிபரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், குடும்ப பொருளாதார நிலைமைக் குறித்த கிராம உத்தியோகத்தரின் சிபாரிசுக் கடிதம் ஆகியவற்றுடன், 2022-12-23 ஆம் திகதிக்கு முன்னர் பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட வேண்டும். பின்னர் இவ்விண்ணப்பம் பாடசாலை அதிபர் மூலமாக வலயக் கல்வி அலுவலகத்துக்கூடாக ஜனாதிபதி அலுவலகத்திடம் கையளிக்கப்பட வேண்டும். எனினும் விண்ணப்பம் கையளிக்கப்பட வேண்டிய முறை தொடர்பில் முறையான தெளிவின்மைக் காரணமாக பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் நேரடியாகவே ஜனாதிபதி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கவலைக்குரிய…
உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவு பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது. கடந்த முறை இலங்கை ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தது. உலக வங்கியின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடாக 321 சதவீததுடன் சிம்பாப்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதேவேளை லெபனான் மற்றும் வெனிசுலா ஆகியன குறித்த பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடித்துள்ளன.
இன்று பாடசாலைகளில் மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் பாவனை அதிகரித்துள்ளது பெரும் கவலைக்குரிய விடயம் என தெரிவித்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற எம்.ராமேஷ்வரன், இதற்கு நாம் நிச்சயம் முடிவு கட்ட வேண்டும் என்றார். அதற்காக எமது பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் அவர்கள் தலைமையில் அண்மையில் பொலிஸார் உள்ளிட்ட பொலிஸ் நிலைய பொதுப்பதிகாரிகள் பாதுகாப்பு தரப்பினர்கள், அதிபர்களை அழைத்து நாம் கூட்டம் ஒன்று நடத்தினோம். ஹட்டன் வலய அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சந்திப்பும், கலந்துரையாடலும் ஹட்டன் ஹைலண்ஸ் கல்லுரி கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகளில் தேவையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் இதற்கான அனுமதியை ஆளுநர் ஊடாக பொலிஸாருக்கு பெற்று தரப்படும் எனவும் நாம் கூறியுள்ளோம் என்றார். எமது சமூகம் கல்வியால் மட்டுமே முன்னேற முடியும்.…
10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் அமலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது. விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பொருட்கள் என்பன இதில் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசெம்பர் 18ஆம் திகதியன்று நடைபெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த இரண்டு மாதங்களுக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்தார். பரீட்சை பெறுபேறுகளை உரிய நேரத்தில் மதிப்பீடு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இதேவேளை ஞாயிற்றுக்கிழமை (18) நாடு முழுவதும் 2,894 பரீட்சை நிலையங்களில் இரண்டு அமர்வுகளாக நடத்தப்பட்ட பரீட்சையில் 334,698 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு டெஸ்லா வாகன நிறுவனத்தின் பங்குகளில் ஏற்பட்ட பெரிய வீழ்ச்சிக்கு பெடரல் ரிசர்வ் வங்கியே காரணம் என்று தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். டெஸ்லா சந்தை மூலதனத்தில் 600 பில்லியன் டொலர்களுக்கு கீழாக சரிவடைந்ததை தொடர்ந்து, தம் மீதான குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்து அவர் ட்வீட் செய்துள்ளார். அதில், பெடரல் ரிசர்வ் வங்கியை தாங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றும் அதன் வட்டி விகிதம் அதிகரிப்புமே காரணம் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, எலான் மஸ்க் 44 பில்லியன் டொலருக்கு ட்விட்டரை வாங்கியதே அவரது கவன சிதறலுக்கு காரணம் என்று டெஸ்லா முதலீட்டாளர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பினும், நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் அது உட்சேர்க்கப்படவில்லை. சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையில் இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகளை மேலும் வினைத்திறனாகவும் பயன்வாய்ந்ததாகவும் மேற்கொள்வற்கு இயலுமாகும் வகையில் ஆரம்ப சட்டமூலத்திற்கு புதிய திருத்தங்களை உட்சேர்த்து மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்திற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைநகர் – களபூமியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 3 1/2 பவுண் தங்க நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபா பணம் என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,வீட்டில் தனியாக வசித்துவந்து 72 வயதுடைய மூதாட்டி சமுர்த்திக் கொடுப்பனவை பெறுவதற்காக இன்றையதினம் திங்கட்கிழமை பிரதேச செயலகத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு சென்ற திருடர்கள் கதவினை உடைத்து உள்ளே சென்று நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் களபூமி பொலிஸ் காவலரணில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.