நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறிருப்பினும் சுற்றுலாத்துறைசார் சேவைகளை வழங்கும் ஹோட்டல்களில் மாத்திரம் மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பிற்கு முரணாக சட்ட விரோமாக மதுபான விற்பனையில் ஈடுபடுவோருக்குக எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Author: admin
இரசாயன உர இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டு பொருளாதார உறுதிப்பாடு, தேசிய கொள்கைகள் மற்றும் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் கையெழுத்திடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, விவசாய அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் கீழ் க்ளைபொசேட், யூரியா, அமொனியா, சல்பேட், பொற்றாசியம் கிளோரையிட், பொற்றாசியம் நைட்ரேட் உள்ளிட்ட இரசாயன உரங்களை திறந்த கணக்கின் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்ய முடியும். இதேவேளை, சோள இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையும் தளர்த்தப்பட்டு, கால் நடைக்கான தீவனம் தவிர்ந்த ஏனைய இறக்குமதியாளர்கள் ஜனவரி 15ஆம் திகதி வரையில் சோளத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, தடை செய்யப்பட்ட காற்றாடிகள், வெசாக் கூடுகள் மற்றும் மூங்கில் உற்பத்தி பொருட்களை எதிர்காலத்தில் மீண்டும் இறக்குமதி செய்வதா என்பது குறித்து தீர்மானிக்கப்பட வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
தாம் வழங்கிய முறைப்பாடுகளை வேறுகோணத்தில் விசாரணை செய்து முடிக்க வடக்கு மாகாண கல்வி அமைச்சும், கல்வி திணைக்களமும் முயற்சிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உபதலைவர் தீபன் தீலீசன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்க உபதலைவர் தீபன் திலீசன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “மோசடிக் கும்பல்களை வைத்துக்கொண்டு வடமாகாண கல்வியை முன்னேற்றமுடியாது. பெற்றோர் பிள்ளைகளின் கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கம் வழங்கிய முறைப்பாட்டுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அரச பாடசாலைகளில் வசதிகள் சேவைக்கட்டணம் தவிர வேறெந்த நிதியோ அன்பளிப்பு பாடசாலையால் வசூலிக்க முடியாதென சுற்றுநிரூபம் இருக்கும்போது அதையும் மீறி நிதி வசூலிக்கப்படும் போது அதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை. வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் ஊடகங்கள் வாயிலாக கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம். அதற்கு ஒரு விசாரணைக் குழுவை…
மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்துச் சென்ற நிலையில் குறித்த இளைஞன் சடமாக மீட்கப்பட்டுள்ளார். காணாமல் சென்ற இளைஞனை மீட்பதற்கு இன்று சனிக்கிழமை (24) பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை மேற்கொண்ட நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை மாடுகளை மேய்ப்பதற்காக கிட்டங்கி ஆற்றில் இறங்கிய இளைஞனை முதலை இழுத்து சென்ற நிலையில் காணாமல் சென்றிருந்தார். இச்சம்பவமானது அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி கல்முனை பகுதியை இணைக்கின்ற கிட்டங்கி வாவி பகுதியில் இடம்பெற்றிருந்தது. இதன்போது மாடுகள் கிட்டங்கி வாவியில் இறங்கி நிற்பதாக நண்பன் தெரிவித்ததற்கமைய குறித்த இளைஞன் மாடுகளை கரையேற்றுவதற்காக வாவியினுள் இறங்கிய நிலையில் குறித்த இளைஞனை முதலை பிடித்து இழுத்து சென்றுள்ளது. இவ்வாறு காணாமல் போனவர் சேனைக்குடியிருப்பு 1 பிரிவு 157 விக்னேஸ்வரன் வீதியை சேர்ந்த சுகிர் பிரதாஸ் (வயது-30) என்பவராவார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்படுவதுடன் பொதுமக்களுடன் கடற்படையினர் பொலிஸார் இணைந்து தேடுதலை…
மனிதர்கள் பல வகையான வினோதமான மற்றும் அதிர்ச்சியூட்டும் உலக சாதனைகளை செய்து வரும் நிலையில், சமீபத்திய உலக சாதனையில் ஒரு பெண் ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். கின்னஸ் உலக சாதனைகள் தங்கள் சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் ஐந்து பெண் குழந்தைகள் மற்றும் நான்கு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்த ஒரு பெண் குறித்து வெளியிட்டுள்ள, பதிவில் ஒன்பது குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் இருப்பதைக் காட்டும் வீடியோ இடம்பெற்றுள்ளது. மொராக்கோவில் உள்ள காசாபிளாங்காவில் உள்ள ஏய்ன் போர்ஜா மருத்துவமனையில் குறித்த பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் அடாமா, ஓமோவ், ஹவா, காதிதியா, பத்தூமா என்று 5 பெண்குழந்தைகளும் ஓமர், எல்ஹாட்ஜி, பா மற்றும் முகமது என 4 ஆண் குழந்தைகளும் பெயர் வைத்துள்ளனர். ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுக்கப் போவது குறித்து அந்த பெண்ணுக்கு கூட தெரியவில்லை. மாலியில் உள்ள வைத்தியர்கள் ஹலிமா ஏழு குழந்தைகளை பெற்றடுப்பார் என்று நம்பினர், அதனால்…
அப்புத்தளை, பிதரத்மலேவத்த பகுதியில் தொட்டில் புடவையில் கழுத்து சிக்கியதில் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கையை தூங்க வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த புடவை தொட்டிலில் கழுத்து சிக்கி இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 12 வயது குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், கழுத்து நெரிக்கப்பட்டதால் குழந்தை உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 2000க்கும் அதிகமான நீர் பாவனையாளர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதற்கான கோப்புகள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதில் அரசியல்வாதிகள் , அரச நிறுவனங்கள், வர்த்தக ஸ்தலங்கள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பலதரப்பட்ட மக்களுடன் தொடர்புடையவர்களும் அடங்குகின்றனர். இதன்படி இந்த பட்டியலில் ஐந்து முதல் ஆறு லட்சம் வரையிலான கட்டணத்தை செலுத்தத் தவறியவர்களும் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிடுகிறது.
நாராஹென்பிட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வரும் நபர்களை ஏமாற்றி அவர்களின் பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை மிக நுணுக்கமாக எடுத்துச் சென்ற ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்த 22 பேர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர். பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டின் சந்தேகநபர் ஒருவரும் இதில் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடம் இருந்து வீதி போக்குவரத்து திணைக்களம் வழங்கிய பல்வேறு ஆவணங்கள், சமாதான நீதவான்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான உத்தியோகபூர்வ முத்திரைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன. பல்வேறு தேவைகளுக்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு வருகைத்தருவோரிடம், அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதாக தெரிவிப்பதோடு, கடந்த காலங்களில் நாராஹேன்பிட்ட மற்றும் பொரளை பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளை கவனத்திற்கொண்டு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிரதான வாயிலுக்கு அருகில் இருந்த இனந்தெரியாத நபர்கள் பணம் மற்றும் ஆவணங்களுடன் மாயமாகியுள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பணம் மற்றும் ஆவணங்களை…
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விரிவடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இத் தொகுதியின் தாக்கம் காரணமாக டிசம்பர் 24 ஆம், 25 ஆம் திகதிகளில் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமையும் காற்று நிலைமையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, கிழக்கு, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50…
எதிர்வரும் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வருமானம் பெறும் வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில், ஒரு இலட்சம் ரூபாய் வருமானத்திற்கு வரி இல்லை. மேலும், 150,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 3500 ரூபாய் வரி, 200,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 10,500 ரூபாய் வரி, 250,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 21,000 ரூபாய் வரி, 300,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 35,000 ரூபாய் வரி, 350,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 52,500 ரூபாய் வரி, 400,000 ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 70,500 ரூபாய் வரி,10 லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்களுக்கு 286,500 ரூபாய் வரி அறிவிடப்படவுள்ளது.