ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இடையே விசேட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவிதுள்ளார். இதன்போது 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பாவும் இதில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Author: admin
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு தேர்தல் நடவடிக்கைகளிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சிக்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை நேற்று மாலை கொழும்பில் சந்தித்த போதே ஜனாதிபதி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு வருடத்துக்குள் நாட்டை அதள பாதாளத்தில் இருந்து மீட்பதற்காகவே தனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அந்த ஆணையை மீறி செயற்பட தாம் ஒருபோதும் தயாராக இல்லை என்றார். ஐக்கிய தேசியக் கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின், அது தொடர்பில் தீர்மானிக்கப்படும் செயற்குழுக் கூட்டத்தின் தலைமைப் பதவியை மரபு ரீதியாக மாத்திரம் ஏற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யால தேசிய பூங்கா உட்பட இலங்கையில் உள்ள தேசிய பூங்காக்களுக்கு வருகை தரும் வெளிநாட்டு பிரஜைகள் எதிர்காலத்தில் அமெரிக்க டொலர்களில் பணம் செலுத்தி நுழைவுச்சீட்டுக்களை கொள்வனவு செய்ய முடியும் என்று வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதாரத்துக்கு டொலர்களை உருவாக்கும் நோக்கில் நடவடிக்கை எடுக்குமாறு விடயதான அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதற்கமைய தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் இந்த மாதம் முதல் யால தேசிய பூங்காவில் இருந்து இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சந்திர ஹேரத், அமைச்சருக்கு அறிவித்துள்ளார். அண்மைய நாட்களில் யால தேசிய பூங்காவுக்கு அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதால், பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை உடனடியாக மேம்படுத்துமாறும் அமைச்சர் அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதகுலத்தின் இன்றுவரை மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ‘அப்பல்லோ’ என்ற திடத்தின் மூலம் இதை சாதித்து காட்டியது. அதற்கு முதல் முயற்சியாக நாசா நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையை பல முறை நடத்தியது. அதன்படி 1968-ம் ஆண்டு ஒக்டோபர் 11-ம் திகதி முதல் முறையாக ‘அப்பல்லோ 7’ என்ற விண்கலத்தில் மனிதர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது நாசா. டொன் எப் ஐசெல், வோல்டர் எம். ஷிரா மற்றும் வோல்டர் கன்னிங்ஹாம் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் ‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் 11 நாட்கள் விண்வெளியை சுற்றி வந்தனர். அதோடு அவர்கள் தங்கள் விண்வெளி பயணத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்தனர். பின்னர் ஒக்டோபர் 22-ந் திகதி அவர்கள் அதே விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் விண்வெளி சென்று திரும்பிய முதல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் என்ற பெருமையை அவர்கள்…
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் வானிலையில் இன்றிலிருந்து மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் எதிர்கால நாணய, நிதியியல் துறை கொள்கைகள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020 ஆம் ஆண்டில் பரவிய கொரோனா தொற்று காரணமாக 2021 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கு ஏற்பட்ட அழுத்தங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளையும் இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. இதற்கமைய, உத்தேச பண வீக்கம் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருவதால், பண வீக்கம் கட்டுப்பாட்டில் வருவதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துபாயில் உள்ள தனியார் விலங்கினச்சாலையில் விலங்குகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குடும்பத்தினருடன் துபாயில் உல்லாசப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்போதே அவர் விலங்கு பண்ணை ஒன்றில் விலங்குகளுடன் காட்சிக்கொடுக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
(எம்.என்.எம்.அப்ராஸ்) பாலமுனை றைஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் அனுசரனையோடு பாலமுனை மின்ஹாஜ் மகா விததியாலயத்தில் (தேசிய பாடசாலை) கராத்தே பயிற்சி அங்குரார்பண நிகழ்வு கழகத் தலைவர் ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் மின்ஹாஜ் மகா விததியாலய (தேசிய பாடசாலை)அதிபர் கே.எல். உபைதுல்லாஹ்வின் நெறிப்படுத்தலில் நேற்று(03) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக சர்வதேச மராட்டி கலை சம்மேளன இலங்கை கிளை செயலாளர் எம்.கே.இப்னு அஸார்,கிழக்கு மாகாண கராத்தே சம்மேளனத்தின் தலைவர் முகம்மது இக்பால், றைஸ்டார் கழகத்தின் முன்னாள் தலைவரும் ஆலோசகருமான எஸ்.எல்.றஹ்மத்துல்லாஹ் மற்றும் கழகத்தின் செயலாளர் ஏ.றிஸ்மி உபதலைவர் எம்.டி.எம்.பாஜில், செயலாளர் ஆர்.சாமில்,எம்.சாஜின் பயிற்றுவிப்பாளர் உப செயலாளர் எம்.ஏ.சிபான் மற்றும் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.
லிட்ரோ சமையல் எரிவாயு விலை நாளை முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோ நிறை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், குறைக்கப்படவுள்ள சரியான விலை நிலவரம் நாளை வெளியாகும் என லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளது.