முல்லைத்தீவு – முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் சிறுவியாபார வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மருத்துவமனை சட்டவைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமையைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் வணிக நிலையம் நடத்திவந்த வணிகர் ஒருவர் நேற்று உயிரிழந்த நிலையில் வணிக நிலையத்திற்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 68 வயதுடைய அமிர்தலிங்கம் தனபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். இவரது சடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டு பிரோத பரிசோதனைகளின் போது அவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதை தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டதுடன், முள்ளியவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Author: admin
பேலியகொட மத்திய மீன் சந்தையில் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் மீன் விலை குறைந்துள்ளது. தற்போது போதியளவு மீன்கள் கிடைத்து வருவதாகவும், பண்டிகைக் காலத்தையொட்டி, நுகர்வோரும் அதிகளவில் வணிக வளாகத்துக்கு வருவதாகவும் மொத்த வியாபார சங்கத்தின் செயலாளர் ஜெயந்த குரே தெரிவித்தார்.
யாழ். அச்சுவலி பொலிஸ் பிாிவிற்குட்பட்ட புத்துாா் – வாதரவத்தை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற இளைஞா் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்று மாலை ஆடு மேய்ப்பதற்காக சென்ற வாதரவத்தை – பொிய பொக்கணை பகுதியை சோ்ந்த செ.ராகுலன் (வயது25) என்ற இளைஞன் காலை ஆகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் இளைஞனின் தந்தை இளைஞனை தேடிச் சென்றிருந்தபோது நீாில் மூழ்கி அவா் உயிாிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வலிப்பு காரணமாக நீாில் மூழ்கி உயிாிழந்திருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தொியவந்துள்ளது. சம்பவம் தொடா்பாக அச்சுவேலி பொலிஸாா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
சீனாவில் புதிய வகை உரு மாறிய கொரோனா (பிஎப்.7), வேகமாக பரவி வருகின்ற நிலையில், இந்திய மருத்துவ சங்கம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணம், அரசியல் நிகழ்வுகள், சமூக கூட்டங்கள் என பொது இடங்களில் மக்கள் தேவையின்றி கூட வேண்டாம் என அறிறுத்தப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச நாடுகளுக்கு செல்வதை தவிர்த்து விடுமாறும் வலியுறுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதோடு கொரோனா முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கொரோனாவின் புதிய உருமாற்றமான பி.எஃப்.7 வகை ஒமிக்ரோன் தொற்று, இந்தியாவில் 3 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது.
மின்சார கட்டண அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தை முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மின் கட்டண அதிரிப்பை எதிர்த்து பொதுமக்களிடம் கையெழுத்தும் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இறக்குவானையில் இருந்து 15 வயதுடைய சிறுமியை முச்சக்கர வண்டியில் கடத்திச் சென்று பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று, பலவந்தமான முறையில் மது அருந்த வைத்துவிட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இறக்குவானை பொலிஸ் பிரிவில் வசிக்கும் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர், சிறுமியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதன் பின்னர், அவரது இரண்டு நண்பர்களும் குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக அப்பகுதியின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் ஏனைய இருவரை கைது செய்யும் வகையில் இறக்குவானை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள 24 வயதுடைய சந்தேக நபருடன் குறித்த சிறுமி காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவளது காதலன் என்று கூறிக்கொண்ட 24 வயது இளைஞன்,…
சிறைச்சாலையில் உள்ளவர்களில் 74 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் ஏற்பட்டுள்ள கடுமையான முட்டை தட்டுப்பாடு மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த பண்டிகை காலத்தில் ஒரு கிலோ கேக்கின் விலை 1500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார். ஒரு மாதத்திற்கு முன்னர் 1100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேக்கின் விலை 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பண்டிகைக் காலங்களில் கேக்கிற்கான கேள்வி 25 வீதத்தால் குறைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் பண்டிகைக் காலங்களில் கேக் தேவையை பூர்த்தி செய்ய முடியாது என்று கூறிய அவர், ஒரு சில பாரியளவான பேக்கரிகளைத் தவிர, சிறிய அளவிலான பேக்கரிகள், கேக் உற்பத்தியை கைவிட்டுள்ளதாக தெரிவித்தார்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு எட்டு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையும் பதுளையிலிருந்து கோட்டை வரையும் மூன்று விசேட ரயில்கள் சேவையில் ஈடுபடவுள்ளன. கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறைக்கும் காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டைக்கும் விசேட ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.