கல்வி அமைச்சின் ஒரு சில தகவல்களின் அடிப்படையில் GCE AL 2021 பரீட்சைப் பெறுபேறுகள் மே மாதம் 4 அல்லது மே மாதம் 5 2022 அன்று வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இதனடிப்படையில் GCE AL 2021 பரீட்சை பெறுபேறுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.. எனினும் நாட்டின் நிலைமையை பொறுத்து சில நேரங்களில் மாறுபடும் சாத்தியங்கள் உள்ளது.. நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலைமையால் வெளியிடப்படும் திகதியில் சில நேரங்களில் மாற்றம் ஏற்பட்டால் உங்களுக்கு உடனுக்குடன் அறியத்தரப்படும்.. ஏற்கனவே GCE OL பரீட்சை பெறுபேறுகள் வெளியிடுவதற்கு சில காலம் தாமதமானது
Author: admin
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவது உள்ளிட்ட அரசியலமைப்பில் புதிய திருத்தம் ஒன்றை முன்வைக்கும் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி சபாநாயகரிடம் கையளித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான பிரேரணையை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவிடம் இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கையளித்தார். இதனையடும் இந்த பிரேரணை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவினால் இன்று காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல், 20வது திருத்தத்தை ரத்து செய்தல், சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல் மற்றும் தேசிய பாதுகாப்பு சபையை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல ஜனநாயக அம்சங்கள் இந்த பிரேரணையில் அடங்கியுள்ளன.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து செல்கிறது. இதனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் இலங்கையின் நாணய மாற்று விகிதம் காரணமாக வீசா மற்றும் அமெரிக்க குடியுரிமைக்கான சேவை கட்டணம் என்பவற்றில் மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாக இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி முதல் இந்த கட்டண மாற்றம் அமுலாகும் என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு நிதி உதவி வழங்க இந்தியா முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிப்புன ரணவக்க Mp தெனியா பிரதேசத்தில் உள்ள வீட்டில் யானை குட்டி ஒன்றை வளர்த்தது தெரியவந்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரியின் மகனான நிப்புண ரணவக்கவின் வீட்டை நேற்று சுற்றி வளைத்த பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். பாரிய சத்தங்களுடன் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வீட்டில் இரகசியமான முறையில் வளர்க்கப்பட்ட யானைக்குட்டி வெளியில் வந்து பொதுமக்களை பார்வையிட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இசை எழுப்பிய போது அந்த இசைக்கேற்ப யானை நடனமாடி மக்கள் வியப்பில் ஆழ்த்தியது. இதன்போது யானைக்குட்டி தமது ஆதரவு தெரிவிப்பதாக கூட்டத்தில் உள்ள மக்கள் கூச்சலிட்டனர். எனினும் நிப்புன ரணவக்க வீட்டை சுற்றிவளைக்க முடியாமல் அங்கிருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று கடந்த 19 ஆந் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தப் பேரிடர் தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம் நீட்டும் சீனாவுக்கு தான் நன்றி தெரிவிப்பதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர் இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் நீண்டகால இரு தரப்பு உறவுகளையும் அவர் இதன் போது நினைவு கூர்ந்தார். இலங்கையை தற்போதுள்ள நிலையில் இருந்து மீட்பதற்காக சீனாவின் பெருந்தன்மையான ஆதரவு மிகவும் அவசியமானது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இது தொடர்பில் தலையீடு செய்யுமாறும் தூதுவரிடம் அவர் கோரிக்கை விடுத்தார். இரு நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இராஜதந்திர உறவுகளை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் இதன் போது கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.
எதிர்வரும் 25 ஆம் திகதி வரை வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எரிவாயு தீர்ந்துபோயுள்ள காரணத்தினால் கடந்த 12 ஆம் திகதி தொடக்கம் வீட்டுப் பாவனைக்கான சமையல் எரிவாயு சிலிண்டகைளை விநியோகிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது. தலா 3,600 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றிய இரு கப்பல்கள் எதிர்வரும் 25 அல்லது 26 ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார். அதன் பின்னர் வீட்டுப் பாவனைக்கான சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் தொழிற்சாலைகள், வைத்தியசாலைகள், தகன சாலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான எரிவாயு விநியோகம் முன்னெடுக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதேவேளை, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் மக்கள் தொடர்ச்சியாக பாதிப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
ரம்புக்கனை பொலிஸ் பிரிவில், ஏப்ரல் 19 அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று (21) அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இவ்வறிவிப்பை விடுத்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ரம்புக்கனை பிரதேசவாசிகள் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்ட நிலையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு, பலர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர் தற்போது அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது எழுந்த சர்ச்சையே இதற்குக் காரணம் என தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இளைஞர்களுக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்கப்படும் என கூறப்பட்ட போதிலும், முன்னாள் அமைச்சர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளமை சர்ச்சையை அதிகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சமூகத்தின் பார்வையில் திறமையற்றவர்களாகவும், ஊழல்வாதிகளாகவும் அறியப்பட்டதாக பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். புதிய அமைச்சரவையின் போது ஜனாதிபதி ஆற்றிய உரை தொடர்பில் பொதுமக்கள் தாங்கள் குற்றவாளிகள் என நினைப்பதாக சிலர் கூறுகின்றனர். இதனையடுத்து, முன்னாள் அமைச்சர்கள் குழுவொன்று நாடாளுமன்றத்தில் சுயேச்சையாக செயற்பட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கத்தில் இருந்து வெளியேறும் தீர்மானம் இன்னமும் தாமதமாகி வருவதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதலினால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, தங்களது அன்புக்குரியவர்களை இழந்து தவிக்கும் அனைவருக்காகவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றது. இதன் சூத்திரதாரிகள், இத்தாக்குதலுடன் தொடர்புபட்ட உண்மையான குற்றவாளிகள் மற்றும் அதன் பின்னணியில் செயற்பட்ட அனைவரும் அவசரமாக அடையாளம் காணப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படல் வேண்டுமென்பதுடன், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென்று உரிய அதிகாரிகளை ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது. இந்தப் புனிதமான ரமழான் மாதத்தில், உயிரிழந்த அனைவரினதும் குடும்பங்களுக்காகவும், அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதற்காகவும், அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆச் செய்யுமாறு அனைத்து முஸ்லிம்களிடமும் ஜம்இய்யா கோட்டுக் கொள்வின்றது அத்துடன் தற்போது நம் நாட்டில் ஏற்பட்டுள்ள…