கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை) காலை கட்டாரில் இருந்து வந்த குறித்த நபர் வருகை முனையத்தில் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் வசிக்கும் 55 வயதான குறித்த நபர் கொழும்பிலுள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Author: admin
சட்டக்கல்லூரி நுழைவு பரீட்சைக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளதாக சட்டக் கல்விச் சபை அறிவித்துள்ளது. நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் இணக்கத்துடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. 6,000 ரூபாவாக இருந்த பொது நுழைவுப் பரீட்சைக்கான கட்டணம் 9,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நுழைவுப் பரீட்சை கட்டணம் 15,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சட்டமாணி பட்டம் பெற்ற மாணவர்களுக்கு சட்டக் கல்லூரியில் இணைவதற்கான கட்டணம் 75 ஆயிரம் ரூபாயாகும். இது தவிர நடைமுறை பயிற்சி வகுப்பு கட்டணம், விரிவுரைகள், நூலகங்கள் என பல கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான புதிய கூட்டணி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக சுதந்திர மக்கள் சபை தெரிவித்துள்ளது. இந்த கூட்டணி தொடர்பான அறிவிப்பு எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்குள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உத்தரலங்கா சபை, சுதந்திர மக்கள் சபை, ஸ்ரீ லங்கா கொம்யூனிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜனநாயக இடதுசாரி கட்சி உள்ளிட்ட கட்சிகளின் விசேட சந்திப்பொன்று நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளது.
இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விலங்குணவு பற்றாக்குறையால் குறைந்துள்ள முட்டை உற்பத்தி மற்றும் 40 ஆயிரமாக குறைந்துள்ள தாய்க் கோழிகளின் இறக்குமதி ஆகியவற்றை நிவர்த்திக்கும் வகையில் 2 இலட்சம் குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்தது. முட்டையின் வருடாந்தத் தேவை 2.99 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளதாகவும், மாதாந்தத் தேவை 249-250 மில்லியனுக்கும் இடைப்பட்ட நிலையில் தற்போது 30 மில்லியனாகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. முட்டை உற்பத்தி 11 மாதங்கள் தாமதமாகும் என்பதால், 2 இலட்சம் குஞ்சு பொரிக்கும் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சின் கால்நடைப் பிரிவுக்கு அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் இதற்கான பூர்வாங்கப் பணிகளை நிறைவு செய்துள்ளதாகவும், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் கீழ் உள்ள மிரிஸ்வத்தை மற்றும் மாரவில பண்ணைகளில் உள்ள இரண்டு குஞ்சு பொரிப்பகங்களில் மேலதிக நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. குஞ்சு…
மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படாது என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நேற்று(09) அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியளவில் மீள் பரிசீலனை செய்யும் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே, மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பிலான யோசனை நேற்று(09) பிற்பகல் தமக்கு கிடைத்ததாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பில் உள்ள இல்லத்தில் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி முன்னதாக கூடி ஆராய்ந்திருந்தது. இதன்போது எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஏனைய பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம் – கற்பிட்டி, சின்னக்குடியிருப்புப் பகுதியில் 02 கிலோ கிராமுக்கும் மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் நேற்று(09) கைது செய்ய்ப்பட்டுள்னர். 02 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 02 கிலோகிராம் எடை கொண்ட ஐஸ் போதைப்பொருள் சந்தேகநபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, கற்பிட்டி பொலிஸார் முச்சக்கர வண்டி ஒன்றை சோதனைக்குட்படுத்திய போதே குறித்த போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டில் இன்று மழையற்ற சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணிக்கு 25-35 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அண்மையில் அரச நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற தெற்கு சூடான் ஜனாதிபதி ‘ சல்வா கீர்‘, தேசிய கீதம் இசைக்கப்படும் போது தனது நீளக்காற்சட்டையில் சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவில்லை என்றாலும் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில், குறித்த வீடியோவைப் பகிர்ந்ததாகக் கூறி குறித்த நிகழ்வில் பங்கேற்ற 6 ஊடகவியலாளர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர் .