நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் அனைத்து வர்த்தக வலயங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் இன்று நடைபெறவுள்ள போராட்டத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு இலட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக வர்த்தக வலய ஊழியர்களுக்கான தேசிய ஊடக மையம் தெரிவித்துள்ளது.
Author: admin
தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் நிதிக் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் வரிகளை உயர்த்துவதுடன் நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப் ) தெரிவித்துள்ளது. முக்கியமான செலவினங்களை நிவர்த்தி செய்வதற்கும், கடன் நிலைத்தன்மையை நோக்கிய முன்னேற்றத்திற்கும் வரி வருமானத்தை அதிகரிப்பதற்கு இலங்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பதில் பணிப்பாளர் அன் மேரி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை பேணிச்செல்ல வேண்டியதன் முக்கியத்தை சுட்டிக்காட்டியுள்ள அவர், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு இலங்கை நிதிக் கொள்ளையை கடுமையாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். கடந்த வார இறுதி நாட்களில் இலங்கை பிரதிநிதிகளுடன் சாதகமான கலந்துரையாடலில் ஈடுப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கு வழங்கும் கடனின் மொத்த மதிப்பு அல்லது இலங்கையுடனான பேச்சுவார்த்தைகள்…
தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக உலக வங்கியின் நிரந்தரப் பிரதிநிதி சியோ கந்தா, இன்று (26) தெரிவித்தார். அதில் முதல் கட்டமாக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எதிர்வரும் முதலாம் திகதி உடனடியாக வழங்கப்படும் என ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அதன் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 2,185 ரூபாவால் அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வு இன்று (ஏப்ரல் 26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது. இதன்படி, 12.5 கிலோ எடையுள்ள எல்பி எரிவாயு சிலிண்டரின் திருத்தப்பட்ட புதிய விலை 4,860 ரூபாவாகும்.
காரைதீவு பிரதேச செயலகத்தின் கணக்காளராக ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய என்.ஜெயசர்மிகா இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து காரைதீவு பிரதேச செயலகத்தின் புதிய கணக்காளராக ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் தமது கடமைகளை நேற்று (25) பொறுப்பேற்றுக் கொண்டார். இறக்காமம் பிரதேச செயலகத்தில் கணக்காளராக கடமையாற்றிய நிலையில் இடமாற்றம் பெற்ற ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் அவர்களை வரவேற்கின்ற நிகழ்வு காரைதீவு பிரதேச செயலகத்தில்,பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற்து. இதன் போது இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ரஷ்ஷான் ,காரைதீவு ,இறக்காமம், பிரதேச செயலக உதவிப்பிரதேச செயலாளர்கள்,பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர். தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் வர்த்தகத்துறை பட்டப்படிப்பில் விசேட சிறப்புத் தேர்ச்சி பெற்று, இலங்கை கணக்காளர் சேவைப் பரீட்சையில் சித்தியடைந்து இறக்காமம் பிரதேச செயலகத்தில் கணக்காளராக சுமார் 8 வருடங்கள் கடமையாற்றி நிலையில்,இடம்மாற்றம் பெற்ற ஏ.எல்.எப்.றிம்சியா காரைதீவு பிரதேச…
அநுராதபுரம், தலாவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் 2.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. அண்மையில் நகைக் கடையின் பின்பக்க கதவுக்குள் புகுந்த திருடன் தங்கம், வெள்ளி மற்றும் இரத்தினக் கற்களை திருடிச் சென்றிருந்தான். எவ்வாறாயினும், திருடப்பட்ட பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட வேளையில், இரகசிய முகவர் ஒருவரைப் பயன்படுத்தி பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் இருவரை தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர் இன்று (26) அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (26) முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இதன்படி, கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், விலையை அதிகரிக்குமாறு லிட்ரோ எரிவாயு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார். செலவு அதிகரிப்பு காரணமாகவும் நிறுவனத்தின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் வகையிலும் அந்நிறுவனம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். அதற்கமைய, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். மேலும் எரிவாயு இறக்குமதி மற்றும் ஏனைய செலவுகள் தொடர்பிலான அறிக்கைகள் ஆராயப்பட்டு இன்று தீர்மானம் அறிவிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்
சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை (27) தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுக்கு டி.என்.ஏ.வை பரிசீலனை செய்யவும், அவர்களில் சாரா ஜஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் சடலம் உள்ளதா என்பதை கண்டறிய இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை (27) அம்பாறை மயானத்தில் தோண்டி எடுக்க பொலிஸாருக்கு கல்முனை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவி விலாகத பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. எதிர்கட்சி சுயாதீன குழுக்கள் மற்றும் அரசாங்கத்திற்குள் உள்ள சிலர் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளித்துள்ளனர் என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். இது அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பம் இந்த ஜனாதிபதி இந்த பிரதமர் ஊழல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை உருவாக்க நாங்கள் தயார் என தெரிவிக்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். 21வது திருத்தத்தை நிறைவேற்றுவதே இடைக்கலா அரசாங்கத்தின் முதலாவது நடவடிக்கையாக விளங்கும் என அவர் தெரிவித்துள்ளார். 19வது திருத்தத்தை மீண்டும் ஏற்படுத்துவற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். 12 உறுப்பினர்களை கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளது.மத்திய குழு ஆதரவளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிரதமர் பதவிவிலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிப்பது என…
அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி இன்று கண்டியில் ஆரம்பமானது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியிலிருந்து கொழும்பிற்கு ஏற்பாடு செய்துள்ள பேரணி இன்று ஆரம்பமாகிறது. குறித்த பேரணி, இன்று முதல் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு முன்னெடுக்கப் படவுள்ளது. இன்றைய தினம் கண்டி – தலதா மாளிகையில் ஆரம்பமாகும் பேரணி மாவனெல்ல வரையில் பணயிக்கவுள்ளதுடன், நாளை மாவனெல்லையிலிருந்து கலிகமுவ வரையும் 28ஆம் திகதி கலிகமுவையிலிருந்து தனோவிட வரையும் பயணிக்கவுள்ளது. தொடர்ந்து, 29 ஆம் திகதி தனோவிடவிலிருந்து யக்கல வரையும் 30 ஆம் திகதி யக்கலையிலிருந்து பயணிக்கும் பேரணி, கொழும்பில் நிறைவடையவுள்ளது. இதேவேளை, தங்கள் பேரணி முடிவடையும் வரை அரச தலைவர் பதவி விலக கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அதற்கு பின்னரும் பதவி விலகவில்லை என்றால் கொழும்பில் அனைத்து மக்களையும் திரட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுப்போம்.