இந்த ஆண்டு (2022) இலங்கையின் பொருளாதாரம் 2.6% வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனத்தால் 2021 இல் கணிக்கப்பட்ட 3.6% இலிருந்து முன்னறிவிப்பு குறைந்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் உத்தேச நுகர்வோர் விலைகள் 17.6% என்று IMF மேலும் கூறியுள்ளது. தற்போது நிலுவையில் இருக்கின்ற கடன்களுக்கான இலங்கையினுடைய சிறப்பு வரைதல் உரிமைகள் எதிர்வருகின்ற மாதம் 31 நிலவரப்படி US $ 892.28 மில்லியன் ஆகும் எனவும், இதற்கிடையில், நாட்டினுடைய சிறப்பு வரைதல் உரிமைகளானது 85.7 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று IMF மேலும் தெரிவித்தது.
Author: admin
ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல காவல்துறையினரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான் நீதிமன்றினால் இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களின் சட்டவைத்திய பரிசோதனைகளில் அவர்களது காயங்கள் துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்டது என உறுதிசெய்யப்பட்டது. இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகளை உடனடியாக கைது செய்துமாறு காவல்துறைமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை வாகனங்கள் மற்றும் பேருந்துகள் பயன்படுத்தி அலரி மாளிகையின் முன்பக்கத்தை மூடி பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு அனைத்து சேவைகளிலிருந்தும் விலகுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி அனைத்து அரச, தனியார் மற்றும் அரை அரச துறைகளின் பங்குபற்றுதலுடன் நாளை பாரிய தொழிற்சங்க நடவடிக்கையாக இது முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பிலுள்ள மத்திய அஞ்சல் பரிவர்த்தனை உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள 653 தபால் நிலையங்கள் மற்றும் 3,410 உப தபால் நிலையங் களில் பணியாற்றும் அனைத்து தபால் ஊழியர்களும் நள்ளிரவில் சேவையிலிருந்து விலகுவதாக கூட்டணியின் ஒருங்கிணைப் பாளரான சிந்தக பண்டார தெரிவித்தார். பொதுமக்களுக்கு ஏற்படும் சுமைகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாழும் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும், குழந்தைகளின் எதிர்காலத்தை உறுதிப்படுத் தவும், பொருத்தமான ஆட்சி முறையை பொதுமக்களுக்கு உருவாக்கவும் அரசாங்கத்தை இராஜினாமா செய்யுமாறு தாம் கோருவதாகவும் அவர்…
ஹட்டனில் சில வாரங்களின் பின்னர், நேற்று 26ஆம் திகதி விநியோகிக்கப்பட்ட 6,600 லீற்றர் மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்ய 2000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அட்டன் -கொழும்பு பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தருகில் காத்திருந்ததாகத் தெரிய வருகிறது. ஹட்டன் பிரதேசத்தில் நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் கொள்வனவு செய்ய வரிசையில் காத்திருப்பதாக பாவனையாளர்கள் தெரிவித்தனர். நேற்று பாடசாலை முடிந்ததும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு ஆசிரியர்களும் வரிசையில் நின்றிருந்தனர். எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தலா 500 ரூபாவுக்கு மண்ணெண்ணெயை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் அரசாங்கக் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி தனித்தனியாக கலந்துரையாடவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதேவேளை, ஆளும் கட்சிக் குழுக் கூட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.6 சதவீதத்தில் இருந்து 2.6 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உலக வங்கி 600 மில்லியன் டொலர்கள் நிதி உதவியை இலங்கைக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்கள் விரைவில் வழங்கப்படும் என உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ காந்தா அறிவித்துள்ளார். மருந்து மற்றும் சுகாதார தேவைகள், சமூக பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படவுள்ளது. தற்போதைய…
சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு ஏற்ப, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று காலை மாவனெல்லையில் இருந்து கலிகமுவ வரை தொடரவுள்ளது. இந்த எதிர்ப்பு ஊர்வலம் அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிரான ஒற்றுமையின் சின்னம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்புப் பேரணியில் நேற்று கணிசமானோரின் பங்கேற்பு காணப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினரான ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார். ‘தேசத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு இலங்கையர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்பதே இந்த எதிர்ப்புப் பேரணியின் தொனிப்பொருள் என அவர் தெரிவித்தார். இந்த எதிர்ப்புப் பேரணி எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி கொழும்பை வந்தடைய வுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சாய்ந்தமருதில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி இன்று (ஏப்ரல் 27) காலை ஆரம்பமானது. டி.என்.ஏ.வை மறுபரிசீலனை செய்வதற்காக இறந்தவரின் எச்சங்களை தோண்டி எடுக்க கல்முனை நீதவான் நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. இதன்படி, அம்பாறை மயானத்தில் புதைக்கப்பட்ட எச்சங்கள் அம்பாறை நீதவான் முன்னிலையிலும், ஆரம்ப விசாரணைகளில் ஈடுபட்ட நீதி வைத்திய அதிகாரி (JMO) மற்றும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச பகுப்பாய்வாளர்களின் பங்களிப்புடன் தோண்டி எடுக்கப்பட்டு வருகின்றன. டிஎன்ஏவை மீள் ஆய்வு செய்வதன் மூலம், கடந்த 26ஆம் திகதி சாய்ந்தமருது பாதுகாப்பு இல்லத்தில் சோதனையிடப்பட்டு உயிரிழந்தவர்களில் மதம் மாறிய இஸ்லாமிய தீவிரவாதி மற்றும் சஹ்ரான் ஹாசிமின் பயங்கரவாதக் குழுவில் அங்கம் வகிக்கும் புலஸ்தினி மகேந்திரன் எனப்படும் சாரா ஜாஸ்மின் ஆகியோரின் எச்சங்கள் உள்ளதா என்பதை கண்டறியும் உத்தேசித்துள்ளது. ஏப்ரல் 2019. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி…