நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நீரிழிவு நோயாளர்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் உள்ளிட்ட பல வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அந்த சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மருந்து தட்டுப்பாடு காணப்படுவதாகவும் இதனால் நோயாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அரசாங்கம் தீர்வு வழங்காவிட்டால் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Author: admin
சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ‘ஸ்ரீலங்காபிமன்ய’ விருது வழங்கப்படவுள்ளது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலாளர், 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விருதை வழங்குவார் என தெரிவித்துள்ளார். 2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி சந்தர்ப்பத்தில் கரு ஜயசூர்ய முக்கிய பங்கு வகித்தார். முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க, சேர் ஆர்தர் சி. கிளார்க், லக்ஷ்மன் கதிர்காமர், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ், கிறிஸ்டோபர் கிரிகோரி வீரமந்திரி மற்றும் அஹங்கமகே டியூடர் ஆரியரத்ன ஆகியோர் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.
இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தை புறக்கணித்து மக்கள் எழுச்சி பேரணியில் ஒன்றுகூடுமாறு அழைப்பு விடுத்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த ஊடக சந்திப்பிலேயே இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது கருத்து தெரிவித்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். ஆங்கிலேயரிடம் இருந்து இலங்கை சுதந்திரம் அடைந்திருந்தாலும் தமிழ் மக்களாகிய எமக்கு இன்னமும் சுதந்திரம் கிடைக்கவில்லை. சிங்கள பேரின வாத அரசின் திட்டமிடப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடர்வதால் பெப்ரவரி 4 ஆம் திகதியை காலம் காலமாக தமிழர்கள் கரிநாளாக தான் அனுஸ்டித்து வருகிறோம். தமிழர் தாயகப்பகுதிகளில் மக்களின் பூர்வீகக் காணிகள் அபகரிப்பு, பௌத்தமயமாக்கல் என்பன இன்று வரை புதிய புதிய வடிவங்களில் தொடர்கிறது. போர் முடிந்து 14 ஆண்டுகள் கழிந்தும் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை, தமிழ்…
மின்சார அமைச்சின் செயலாளர் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். க.பொ.த. உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்வெட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 23 ஆம் திகதி குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பரீட்சை நடைபெறும் காலத்தில் மின்சார துண்டிப்பை நிறுத்துமாறு பலரும் வலியுறுத்தியிருந்த போதும் 2 மணி நேரம் மின்சாரம் தடைபடும் என அமைச்சரவை பேச்சாளர் அறிவித்திருந்தார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால், மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் (SDFR) மற்றும் நிலையான கடன் வசதி வீதம் (SLFR) ஆகியவற்றை முறையே 14.50 வீதம் மற்றும் 15.50 வீதமாகப் பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்களினால் வழங்கப்படும் நிலையான வைப்பு மற்றும் கடன் வசதிகளுக்கான வட்டி வீதங்களும் மாறாமல் தற்போதுள்ள பெறுமதிகளில் தொடர்ந்தும் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த மூன்று மாத காலமாக பண வீக்கம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், இம்முறை நாணயமாற்றுக் கொள்கையின் போது வைப்பு மற்றும் கடன் வசதிகளுக்கான வட்டி வீதங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், நாணய சபையினால் அவ்வாறான மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜசின்டா ஆர்டெர்ன் பதவி விலகியதை அடுத்து நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுள்ளார். நியூசிலாந்தின் தற்போதைய ஆளும் கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராக அவர் பதவியேற்றமையை தொடர்ந்து இந்த பதவி ஏற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் அவர் பொலிஸ் அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பிரசவித்த 15 வயதான சிறுமியும், கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர் பிரதேசத்திலுள்ள பாழடைந்த காணியில் இருந்து உயிரிழந்த நிலையில் சிசுவொன்று இன்று (24) செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டது. அந்த சிசுவை பிரசவித்த 15 சிறுமி ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார்ர் தெரிவித்தனர். ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு நுளம்பு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண்ணொருவர், அந்தப் பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற போது, புதிய காட்டுப்பள்ளி வீதியிலுள்ள வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளார். அப்போது, 15 வயதான சிறுமியுடன் தொடர்பு ஏற்படுத்தி, அச்சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார். கர்ப்பமடைந்த சிறுமி, பாடசாலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். இந்நிலையில், இன்று (24) காலை 9 மணியளவில் சிசுவை பிரசவித்துள்ளார். தனது வீட்டில் வைத்தே சிசுவை பிரசவித்த…
நாட்டில் தற்போது அமல்ப்படுத்தப்பட்டுள்ள மின்வெட்டால் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் கல்வி உரிமைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எனவே, இம்மாதம் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் மின்வெட்டை அமல்ப்படுத்தாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து மின்சக்தி, வலுசக்தி சக்தி அமைச்சின் செயலாளர், பொதுப்பயன்பாட்டு அலுவல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இது தொடர்பில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினரும் எந்தவொரு நடவடிக்கைகளையும் இதுவரையில் எடுக்கவில்லை எனவும், இதனால், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்காக நாளை (25) ஆணைக்குழு முன்பாக ஆஜராக வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களும் இன்று (24) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டனர். உள்ளூராட்சித் தேர்தலில் வாக்காளர் ஒருவர் சார்பாக 15 ரூபாயை மட்டுமே வேட்பாளர் செலவு செய்ய முடியும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை நகரில் உள்ள உயர்தரப்பரீட்சை நிலையத்திற்கு தந்தையுடன் பரீட்சைக்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவர் அமிலம் (அசிட்) வீச்சு தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞரொருவர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவி மீது அமிலம் (அசிட்) வீச முற்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உடுமாகம பிரதேசத்தில் வசிக்கும் 21 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தந்தையுடன் முச்சக்கர வண்டியில் கேகாலை நகரில் உள்ள பரீட்சை நிலையத்திற்கு சென்றுள்ளார். இதன்போது குறித்த முச்சக்கரவண்டியை பின் தொடர்ந்த மாணவியின் காதலன் என கூறப்படும் இளைஞர் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்து வீதியை மறித்து முச்சக்கரவண்டியின் பின்னால் இருந்த பாடசாலை மாணவியின் கழுத்தை நெரித்து அமிலம் வீச முற்பட்டுள்ளார். இதன்போது மாணவியின் தந்தை அமில போத்தலை பறித்து இளைஞன் மீது வீச முற்பட்ட சமயத்தில் மாணவி, அவரது தந்தை மற்றும் இளைஞர்…