Author: admin

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பமாவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.

Read More

தேர்தலுக்கான செலவுகளை கட்டுப்படுத்துவது தொடர்பான சட்டமூலத்தை நாளை (19) விவாதத்திற்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் இன்று சபாநாயகரின் தலைமையில் கலந்துரையாடலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் ஜனாதிபதியும் பங்கேற்கவுள்ளார். இதன்போது கட்சித் தலைவர்களின் ஒருமித்த இணக்கப்பாடு கிடைக்கும் பட்சத்தில் நாளை (19) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

Read More

மேல், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. தென் மாகாணத்தில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும். நாட்டின் மற்றைய பகுதிகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு ஆதரவளித்த முக்கிய முகவர் ஒருவரும், போலி ஆவணங்களை தயாரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்ட இரண்டு கிராம உத்தியோகத்தர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். குறித்த முகவர் ஆமர்வீதி பகுதியிலும், கிராம உத்தியோகத்தர்கள் ராஜகிரிய மற்றும் கடுவாளை ஆகிய பகுதிகளிலிருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read More

வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட புதிய வரிக்கொள்கை மற்றும் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் தன்னிச்சையான அசாதாரண வரி திருத்தத்தை உடனடியாக மீளப்பெற, மருந்து இல்லை சுகாதார கட்டமைப்பும் சீர் குலைந்துள்ளது, சத்திர சிகிச்சைகளும் இல்லை மருந்துகளும் இல்லை என்ற பதாதைகளை தாங்கியிருந்தனர்.

Read More

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அமைச்சரவை விசேட தீர்மானமொன்றை எடுத்துள்ளது. இதன்படி, நிறைவேற்று அதிகாரம் அற்ற ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியில் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அத்துடன், நிறைவேற்று அதிகாரிகளின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதிக்கு சில நாட்களுக்குப் பின்னர் வழங்குவதற்கு அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது. திறைசேரியின் நடவடிக்கைகள் தொடர்பில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை அமைச்சர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் புதிய வருவாய் முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் வசூலிக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால், அரச ஊழியர் சம்பளம் வழங்குவது குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2023 ஜனவரி முதல் அடுத்த சில மாதங்களுக்கு அரசு செலவினங்களை நிர்வகிப்பதற்கு அரசு ஊழியர்களின் சம்பளத்தை வழங்க அமைச்சர்கள் குழு முன்மொழிந்துள்ளது.

Read More

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த தா.தினேஷ் (வயது 27) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். பட்டா வாகனம், துவிச்சக்கர வண்டியில் சென்ற இளைஞனை மோதியதிலையே விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக சடலத்தினை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Read More

பேலியகொடை கறுப்பு பாலத்திற்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 32 வயதான ஒருவரே இதன்போது காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வீட்டிலிருந்த குறித்த குறித்த நபர் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Read More

முட்டை இறக்குமதிக்கான சுகாதார பரிந்துரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை என அரச வணிகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டை விநியோகத்திற்கு கடுமையான பாதிப்பு ஏற்படும் என கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ள போதிலும், கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பரிந்துரை கிடைக்காமை காரணமாக அந்த நடவடிக்கை தாமதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களினால் (AZ – Zuharian Past Pupils Association) முன்னெடுக்கப்பட்டு வரும் அஸ்-ஸுஹராவுடன் மீள் இணைவோம் எனும் தொனிப்பொருளில் “உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும்” வேலைத்திட்டத்தின் கீழ் (பகுதி -2) கொள்வனவு செய்யப்பட்ட Internal sound system த்தினை கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்தின் செயலாளர் எஸ். எச். எம். அஜ்வத்தினால் கல்லூரி அதிபர் எம். எஸ். எச். ஆர் மஜீதியா தியாவிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இப்பாடசாலையினது பழைய மாணவகளின் அமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் “உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும்” வேலைத்திட்டத்தின் (பகுதி 1) கீழ் கடந்த வருடம் ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான வேலைத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்ட மை குறிப்பிட தக்கதாகும். மேலும் இப்பாடசாலையில் கல்விகற்ற பழைய மாணவர்களுக்கென பிரத்தியோகமான WhatsApp குழுமம்…

Read More