2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு முகம் கொடுத்தால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு எழுத்துப்பூர்வமாக முறைப்பாடுகளை சமர்ப்பிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் – 0775687387 மின்னஞ்சல் – [email protected] தொலைநகல் 0112392641 உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், குறித்த காலப்பகுதியிலும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Author: admin
கொழும்பில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் இடம்பெற்ற இந்திய குடியரசு தின விழாவில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் அவரது சகோதரரும், முன்னாள் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஸவும், தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்விற்கு பல இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் வர்த்தகர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். கடந்த ஆண்டு போராட்டங்களைத் தொடர்ந்து பதவியை விட்டு விலக வேண்டிய கட்டாயத்தில் இருந்த முன்னாள் ஜனாதிபதி வெளி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அதிகமாக தவிர்த்திருந்தார். இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப்பின் கோட்டாபய ராஜபக்ஸ பொது நிகழ்வில் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றப்பற்றுள்ளனர். அந்தவகையில் சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார், இதேவேளை, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக டபிள்யூ. சமரதிவாகர நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த நியமனங்கள் ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைபடுத்தும் போதே இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதம் காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த வழக்கில் இருந்தே வசந்த முதலிகே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன், ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடு அறிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சாதனைகள் என்பது பல்வேறு வகையில் நிகழ்த்தப்படுகின்றது.கல்வியில் சாதனைகள் என்பது சாதாரணமாக நிகழ்த்தப்படுகின்றபோதிலும் விசேட தேவையுடைய மாணவர்களின் சாதனைகள் என்பது இன்று பல்வேறு தளங்களிலும் பதிவுசெய்யப்பட்டுவருகின்றது. வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தின் விசேட தேவையுடைய மாணவன் குபேந்திரன் றினோபன் 160புள்ளிகளைப்பெற்று பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவன் என்ற சாதனையினை படைத்துள்ளார். செங்கலடியினை சேர்ந்த குபேந்திரன்-கஜேந்தினி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வாரன றினோபன் பிறவியிலேயே இரண்டு கால்களும் நடக்கமுடியாத நிலையிலும் இரண்டு கைகளும் தொழிற்பாடு குறைந்த நிலையிலேயே இருந்துவந்துள்ளது. இந்த நிலையில் குறித்த மாணவன் பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளில் திறமையான மாணவனாகயிருந்துவந்த நிலையில் பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் மாணவர்களும் உதவி வந்துள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சையில் பாடசாலையில் அதிகூடிய புள்ளிகளைப்பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமைசேர்த்துள்ள றினோபன் எதிர்காலத்தில் தான்ஒரு பொறியியலாளராக ஆகவேண்டும் என்பதே இலட்சியம் எனவும் தெரிவித்தார். கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஊடல் ஊணம் என்பது…
நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒத்திவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் பெப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய கட்டண முறை அமுல்படுத்தப்பட்ட முதல் மூன்று மாதங்களில் மின்சார சபைக்கு 108 பில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். நிதி நெருக்கடி மற்றும் நஷ்டம் காரணமாக தொடர்ந்து மின்சார விநியோகத்தை வழங்க முடியாது என்ற கூற்றினை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பணத்திற்காக 15 வயது சிறுமியை வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் மற்றும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் 42, 45, 54 மற்றும் 84 வயதுடைய பாணந்துறை, கெசல்வத்த மற்றும் கோரக்கன பிரதேசங்களைச் சேர்ந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி ஒருவரை பணத்திற்காக வயதானவர்களுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். மேலும் பொலிஸ் விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், சிறுமியின் தாயை ஏமாற்றி பணம் கொடுத்து சிறுமியை விற்றுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகத்திற்கிடமான தொழிலதிபரான பெண், பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(எம்.என்.எம்.அப்ராஸ்) சாய்ந்தமருது,கமு/கமு/அல்-கமறூன் வித்தியால யத்தில்,2022 வெளியாகிய புலமைப்பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று எம்.ஆர்.எம். ஷைஹான் சாதிர் (162புள்ளிகள்),ஏ.ஆர்.எப்.ஹிபா பானு(149)புள்ளிகள்),எம்.ஏ.ஸஹ்ரா(147 புள்ளிகள்) ஆகிய 03 மாணவர்கள் சித்தியடைந்து உள்ளதுடன், மேலும் இப்பரீட்சைக்கு தோற்றிய 22 மாணவர்களில் அனைத்து மாணவர்களும்70 புள்ளிக்கு மேல் பெற்று சாய்ந்தமருது கோட்டமட்ட பாடசாலைகளில் முதலாம் இடத்தைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் எம்.ஐ. நிபாயிஸ் தெரிவித்தார். மேலும் இம்மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர் ஏ.நஸ்ரூதீன் மற்றும் ஏனைய ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் அதிபர் எம்.ஐ.நிபாயிஸ் தெரிவித்தார்.