உயர்தரப் பரீட்சை நிறைவடையும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை, திட்டமிடப்பட்டுள்ள மின் தடைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, 3 இலட்சத்து 31 ஆயிரம் பரீட்சார்த்திகளின் உரிமையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில் அமுலாக்கப்படும் எந்தவொரு மின்தடையும், அனுமதியற்றதும் சட்டவிரோதமானதுமாகும் என்றும் அவர் கூறியுள்ளார். எவ்வாறிருப்பினும், இன்றைய தினம் 2 மணித்தியாலங்களும், 20 நிமிடங்களும் மின்தடை அமுலாக்கப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
Author: admin
பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், 04 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த பொருட்களின் விலை குறைப்பு நாளை (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரு கிலோ காய்ந்த மிளகாய் ஆயிரத்து 675 ரூபாய்க்கும், ஒரு கிலோ பெரிய வெங்காயம் 165 ரூபாய்க்கும், உள்நாட்டு சிவப்பரிசி 169 ரூபாய்க்கும், கோதுமை மா 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
பெட்ரோல் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு. அதன்படி புதிய விலை 400 ரூபா
தான் தவறு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையில், மன்னிப்பு கோருவதற்கு அவருக்கு உரிமை இல்லை என, அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையிலும் தான் தவறு செய்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொள்ளாத நிலையொன்று காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நிலையில், தவறு செய்யவில்லை என்று கூறிக்கொண்டு அதற்கு மன்னிப்பு கேட்பது அர்த்தமற்ற ஒரு சொல்லாகவே தான் பார்ப்பதாகவும் அவர் கூறினார். அத்துடன், அவ்வாறான மன்னிப்புக் கோரல் வெறும் அறிவிப்பு மாத்திரமே என்றும் அவ்வாறான மன்னிப்பு கோரல் தமக்கு தேவையில்லாத ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டார். இன்று(01) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அருட்தந்தை சிறில் காமினி இந்த விடயத்தை தெரிவித்தார்
அவுஸ்ரேலியா, சுவீடன், கென்யா ஆகிய நாடுகளில் தூதரகங்கள் செயற்படும் இலங்கை அரசிற்கு சொந்தமான கட்டடங்கள் சிறந்த முறையில் பயன்படுத்தப்படவில்லை என கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதரகங்களுக்கு பணியாளர்களை நியமிப்பதில் ஒவ்வொரு நாடும் பயன்படுத்தும் முறையான அளவுகோல்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச கணக்குக் குழு உத்தரவிட்டிருந்தது. இருப்பினும் 2021 ஆம் ஆண்டு வரை அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் இந்த தகவல் வெளிவிவகார அமைச்சின் 2021 ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கணக்காய்வாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
2022 ம் ஆண்டு கல்வி பொதத்தராதர சாதாரணதர பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இணையவழி ஊடாக விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். அனைத்து பாடசாலை விண்ணப்பதாரிகள் உரிய பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாகவும், தனியார் விண்ணப்பதாரிகள் தாமாகவே இணையத்தினூடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளனது இதற்காக பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic என்பவற்றை அணுக முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி செயலியான “Exams SRILANKA” ஐ பயன்படுத்தலாம். தேவைப்படும் சந்தர்ப்பத்தில் சமர்ப்பிப்பதற்காக, பரீட்சார்த்திகள் விண்ணப்பத்தின் அச்சிடப்பட்ட நகலை வைத்திருத்தல் அவசியமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் பெப்ரவரி 28 ஆம் திகதி பிற்பல் 12 மணிக்கு மேல் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியாது எனவும் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதிகளை நீடிக்க எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும்…
அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள அரச துறை ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்காக சுய ஓய்வு பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்படும் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவரதன தெரிவித்துள்ளார். இந்த சுய ஓய்வு பொறிமுறையின் மூலம் திறமையற்ற பொதுத்துறை ஊழியர்கள் நீக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அனைத்து திணைக்களங்களிலும் தமது செலவினங்களைக் குறைக்குமாறு அனைத்து அமைச்சுக்களுக்கும் திறைசேரி வழங்கிய அறிவுறுத்தலின் பிரகாரம் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அமைச்சர், திறைசேரியின் சுற்றறிக்கைகளுக்கு அமைச்சின் செயலாளர்கள் அனைவரும் கட்டுப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அரச சேவையில் புதிதாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்படமாட்டாது எனவும், குறிப்பிட்ட அரச நிறுவனத்தில் உள்ள வெற்றிடங்கள் தற்போதுள்ள அரச துறை நிறுவனங்களினால் நிரப்பப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். “உதாரணமாக, புதிதாக 29,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்கள் பரீட்சை மூலம் அரசாங்கத் துறையின் உற்சாகமான பணியாளர்களில் இருந்து ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2023 மற்றும் 24 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அனைவருக்கும் பயன் அளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். சுதந்திரத்தின் 75வது ஆண்டில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை உலகம் அங்கீகரித்துள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் தாக்கல் செய்யும் இறுதி வரவு செலவுத்திட்டம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மன்னார்,கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்ற நிலையில் விவசாய செய்கையில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மழை காரணமாக அறுவடைக்கு தயாரான நிலையில் காணப்பட்ட நெற்செய்கைகள் சரிந்துள்ளதுடன் வயல் நிலங்களுக்குள் நீரும் அதிகளவு தேங்கியுள்ளது. அதே நேரம் அறுவடையின் பின்னர் வீதிகளில் உலர விடப்பட்டிருந்த பல டொன் நெல் முற்றுமுழுதாக மழையில் நனைதுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே பசளை, உரம், ஏரிபொருள் விலை என அனைத்தின் விலையேற்றத்தின் மத்தியிலும் விவசாய செய்கையை மேற்கொண்ட விவசாயிகளிடம் நெல் மிகவும் அடிமாட்டு விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு வரும் நிலையில் சீரற்ற கால நிலை காரணமாக மன்னார் கிளிநொச்சி மாவட்ட ஏழை விவசாயிகள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் நம்பிக்கை மீண்டும் அதிகரிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் 8000 உறுப்பினர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமென எதிர்கட்சி எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக நாடு மீண்டும் பொருளாதார பாதாளத்தில் விழுவதுடன் சுற்றுலாத்துறையும் பாதிக்கப்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் வாகனங்களை பெற்றுக்கொள்ள எடுத்த கடனக்களையும் வங்கிக் கடனை செலுத்த முடியாதவர்களும் கூட கடினமான காலத்தை சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார். சுமார் 20 பில்லியன்கள் தேர்தலுக்காக மட்டுமே செலவிடப்படும் என்பதோடு தெரிவு செய்யப்பட்ட 8000 உறுப்பினர்களுக்கு அதன் பின்னர் மாதாந்தம் சம்பளங்களை வழங்க வேண்டும் என்றார். இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனவும், பொருளாதார நெருக்கடிக்கு மீண்டும் முகங்கொடுக்க முடியாது என்றும் வஜிர அபேவிவர்தன தெரிவித்தார்.