நாட்டில் நிலவும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறைவடையக்கூடும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 27 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நேற்று முன்தினம் (11) கிடைத்துள்ளதாக அமைச்சர் கூறினார். இதனிடையே, 42 மில்லியன் டொலர்கள் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் அமெரிக்காவிடமிருந்து கிடைக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Author: admin
புதிய வரி திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்மேளனம் இன்று(13) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது. Online கற்பித்தல் செயற்பாடு உள்ளிட்ட கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர், பேராசிரியர் ஷ்யாம் பன்னேஹெக்க தெரிவித்துள்ளார்.
(எம்.என்.எம்.அப்ராஸ்) ஜி- சேர்ப்(G-CERF)நிறுவனத்தின் அனுசரணையில் ஹெல்விடாஸ்(HELVETAS) நிதியுதவியுடன் சமாதானமும் சமூக பணி(PCA) நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வை-சென்ச்(y-change) திட்டத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 20 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள இளைஞர் நல்லிணக்க குழுக்களின் இணைப்பாளர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான03 நாள் வதிவிட செயலமர்வு(9/12/2022 தொடக்கம்11/12/2022 வரை) அம்பாரையில் இடம்பெற்றது. இதில் வளவாலராக ரி.மோசஸ் கலந்து கொண்டதுடன், சமாதானமும் சமூக பணி நிறுவனத்தின் (PCA) தேசிய பணிப்பாளர் ரி.தயாபரன்,வை-சென்ச் வை-சேன்ச் (y-change) திட்டத்தின் திட்ட இணைப்பாளர் ஐ.சுதாவாசன்,நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர்களான கே.டி.ரோகிணி,எச்.எஸ்.ஹசனி,டப்ளியு.எம்.சுரேகா சமாதான தொண்டர் டி.சாலினி உட்பட அம்பாரை மாவட்ட நல்லிணக்க இளைஞர் குழுக்களின் பிரதேச இணைப்பாளர்கள்,அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். வன்முறையற்ற தொடர்பாடலும்,முரண்பாடுகளை கையாள்வதற்கான வழிமுறைகள்,அம்பாரை மாவட்டத்தில் இளைஞர் நல்லிணக்க குழுவினால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள நல்லிணக்க செயற்ப்பாடுகள் பற்றி இதன் போது குறித்த செயலர்வில் கருத்துரைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (12) மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். தமிழகத்தில் இருந்து 2,400 கிலோ மஞ்சள் கடத்தி வரப்பட்டு விற்பனைக்காக கொண்டு சென்ற நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலும் தெரிய வருவதாவது, ஆனைக்கோட்டைப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான பயணித்த வாகனம் ஒன்றை பொலிஸார் வழிமறித்து சோதனையிட்ட போதே பெருந்தொகையான மஞ்சள் மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் இருவரும் சுதுமலைப் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவருகிறது. 2 சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் இன்று (13) முற்படுத்த மானிப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Colombo Stars மற்றும் Jaffna Kings அணிகளுக்கு இடையிலான LPL போட்டி நேற்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Jaffna Kings முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அந்த வகையில், முதலில் களமிறங்கிய Jaffna Kings அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களை பெற்றது. அதனடிப்படையில் Colombo Stars அணிக்கு 178 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Colombo Stars அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. Colombo Stars அணி சார்ப்பில் அணித்தலைவர் மெத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அதனடிப்படையில் Jaffna Kings அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : புத்தளத்தில் இருந்து மன்னார், காங்கேசந்துறை மற்றும் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழைபெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு முதல் தென்கிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர்…
கொழும்பு, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தையில் உள்ள இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரின் சாரதி, விபத்து இடம்பெற்ற சில மணி நேரங்களில் டுபாய்க்கு சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். 24 வயதுடைய வர்த்தகரான மொஹமட் ரைசுல் ரிசாக் என்ற சொகுகு காரை செலுத்திய சாரதி, சனிக்கிழமை (10) காலை 9.55 மணியளவில் டுபாய்க்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். சந்தேகநபரின் பெயரில் மூன்று மேர்சிடீஸ் பென்ஸ் சொகுசு கார்கள் இருப்பதாகவும், அந்த வாகனங்களுக்கான பணம் டுபாயில் இருந்து பெறப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் தாயாரிடமும் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாகவும் சந்தேக நபரை அழைத்து வருவதற்கு இன்டர்போல் உதவியை பொலிஸார் நாடியுள்ளதாகவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். இரவு விடுதியில் இருந்து சனிக்கிழமை காலை திரும்பிக்கொண்டிருந்த சொகுசு கார் கொள்ளுப்பிட்டியில் ஓட்டோ மீது மோதியதில் 58 வயதுடைய ஓட்டோ…
தனது மூன்று வயது பெண் பிள்ளையின் பெண் உறுப்புக்குள் விரல் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய தந்தை கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பருதித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிராமம் ஒன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேக நபரான 38 வயதுடைய நபரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்மறியல் வைக்க பருத்தித்துறை நீதிமன்ற நீதிவான் பொண்ணுத்துரை கிரிசாந்தன், இன்று (12) உத்தரவிட்டார். மனைவி இல்லாத நேரம் குறித்த நபர் தனது மூன்று வயது மகளின் பெண்ணுறுப்புக்குள் விரலை நுழைத்து தனது இச்சைக்கு பயன்படுத்தி உள்ளார். பெண்ணுறுப்பில் காயம் ஏற்பட்டதை அவதானித்த தாயார் இது தொடர்பில் பருத்துத்துறை பொலிஸாருக்கு முறைப்பாடு செய்திருந்தார். இதன் அடிப்படையில் தந்தை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அந்த சந்தேகநபருக்கு ஏற்கெனவே மூன்று பிள்ளைகள் இருக்கின்றனமை குறிப்பிடத்தக்கது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மீதான தாக்குதல் நடத்தப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட 10 மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளது என, பேராதனை பல்கலைக்கழகத்தின் பிரதி துணைவேந்தர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். முன்னாள் துணைவேந்தர் அதுல சேனாரத்னவின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் பதிவாகியுள்ள காட்சிகளுக்கு அமைய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதனையடுத்து, அவர்களின் கற்றல் செயற்பாடுகனளத் தற்காலிகமாக தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய மாணவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவ்வாறு அடையாளம் கண்டவுடன் அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கும் தடைவிதிக்கப்படும் என்றார்.
பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு வருகைத் தரும் மாணவர்களின் எண்ணிக்கையில் பாரிய வீழச்சி ஏற்பட்டுள்ளதென தெரிவித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், இது பெருந்தோட்ட கல்வித்துறையின் பாரிய வீழ்ச்சி என்றார். இன்று (12) ஹட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், பெருந்தோட்ட மாணவர்கள் அதிகமாக போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். பெருந்தோட்ட மக்கள் அதிகமாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நிலையில், அவர்களுக்கு வழங்குவதாகத் தெரிவித்த 1,000 ரூபாய் சம்பளமும் உரிய முறையில் கிடைப்பதில்லை என்றார். இந்த நிலையில் பெருந்தோட்ட பாடசாலைகளில் 10 சதவீதமான மாணவர்கள் பாடசாலைக்கு சமூகமளிப்பதில்லை என்றும் எனவே கல்வி அதிகாரிகள் இந்த விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 2019, 2021ஆம் ஆண்டுகளில் கொரோனாவால் கல்வித்துறை வீழ்ச்சியடைந்ததைப் போல் இந்த வருடம் அரசியல் நெருக்கடியால் கல்வித்துறை வீழ்ச்சிக்கண்டுள்ளது என்றார். பெருந்தோட்ட பாடசாலைகள் மற்றும்…