உள்ளூராட்சி மன்றத் தேர்தலை கண்காணிப்பதற்காக நான்கிற்கும் மேற்பட்ட அமைப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பெப்ரல், கபே, சி.எம்.ஈ.வி உள்ளிட்ட அமைப்புகளுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கு அனுமதி வழங்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இரண்டு கண்காணிப்புக் குழுக்களுக்கு மாத்திரமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். ஏனைய அமைப்புகள் வெளிப்புற கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Author: admin
இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்தும் (Online முறை) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த நவம்பர் மாதம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தடைப்பட்ட இந்த முறைமை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலகுவான முறையில் மக்கள் கட்டணங்களை செலுத்த முடியும் எனவும் மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு தொடர்பும் இல்லை என இலங்கை அணியின் தலைவர் தசுன் சானக்க தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ஒரு அரசியல் கட்சியின் பிரச்சாரத்துடன் எனது படம் பரவுவதை நான் கவனித்தேன். எனக்கு எந்தக் கட்சியுடனும் இணைந்து செய்யபட விருப்பமில்லை. தாய் நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவதே எனது உண்மையான அன்பும் ஆர்வமும்.“ எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. மழை பெய்துவரும் காரணத்தினால் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை திறப்பதற்கு நீர் முகாமைத்துவ செயலகம் தீர்மானித்துள்ளமை காரணமாகவே இவ்வாறு குறித்த இரு நாட்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 140 பேர் காயமடைந்தனர். தொழுகைக்காக ஏராளமான மக்கள் கூடியிருந்த மசூதியில் குண்டுவெடிப்பு நடந்ததாக பொலிஸ்துறை அதிகாரி சிக்கந்தர் கான் தெரிவித்தார். இந்த குண்டுவெடிப்பின் போது, கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததாகவும் அந்த இடிபாடுகளில் சிலர் அதில் சிக்கியிருப்பதாக நம்பப்படுகின்றது. தற்கொலை குண்டுதாரி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. குண்டு வெடித்தபோது மசூதிக்குள் 150க்கும் மேற்பட்ட தொழுகையாளர்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘பெஷாவர் மசூதியில் தொழுகையின் போது நடந்த பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார். இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானின் எல்லையில் அமைந்துள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் தலைநகரான பெஷாவரில் இதுவரை எந்தவொரு குழுவும் அல்லது தனி…
மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத போலி வாகன இலக்கத்துடனான மோட்டார் சைக்கிளொன்றை நிறுத்திவிட்டு மாயமான இருவரைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலுக்கு அருகில் குறித்த மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைத்துவிட்டு பிரதேசத்திலிருந்து தலைமறைவாகியுள்ளமை CCTV காணொளிகளில் தெரியவந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர்கள் இருவரும் புத்தளம் பகுதியிலிருந்து பாடசாலையொன்று நிதி சேகரிப்புக்காக 21ஆம் திகதி ஹட்டனுக்கு வருகைத் தந்த பின்னர், பள்ளிவாசலுக்கு அருகில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு வாடகை அறையொன்றில் தங்கியிருந்துள்ளனர். பள்ளிவாசல் நிர்வாகத்தின் அனுமதியின்றி சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, கடந்த 24ஆம் திகதி வரை ஹட்டன் பகுதியில் தங்கியிருந்து நிதியுதவி பெற்று அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் செயலாளர் மொஹமட் ஃபௌமி தெரிவித்துள்ளார். பள்ளிவாசலுக்கு அருகில் உரிமையாளரற்ற மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டமை தொடர்பில் நிர்வாகத்தால் ஹட்டன் பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் வெடிகுண்டு…
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும் என பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பேக்கரிகளின் மின்சாரக் கட்டணம் தற்போதைய விலையை விட இருமடங்காக அதிகரித்துள்ளது என அச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தினால் பேக்கரி தொழில்துறையால் அதனை தாங்கிக்கொள்ளவே முடியாது எனவும் தெரிவித்துள்ளார். மா, முட்டை மற்றும் பிற பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் எரிபொருள் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிப்பு காரணமாக பேக்கரி தொழில் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் மீண்டும் மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
குருநாகல் நகரில் மேற்கொள்ளப்பட்ட ATM கொள்ளை சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொட்டிகாபால பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நேற்று (29) 6 வங்கி அட்டைகளுடன் குருநாகலில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். ஏ.டி.எம் இயந்திரத்தைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி அவர்களின் பின் இலக்கங்களைப் பெற்று வங்கி அட்டைகளை மாற்றிக் கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபரை இன்று (30) குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் பிக்குகள் என தம்மை இனங்காட்டிக்கொண்டு, மதுபோதையில் சாதாரண உடையில் இருந்த 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர். இன்று (30) அதிகாலை 1 மணியளவில் கண்டி நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, கண்டி- மணிக்கூட்டு கோபுரத்துக்கு அருகில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய குறித்த 6 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டையும் காணப்படாமையினால் கைதுசெய்யப்பட்டு மேற்கொண்ட விசாரணைக்கு அமைய குறித்த 6 பேரும் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் பிக்கு மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் ஐவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கற்பவர்கள் என்பதுடன், ஒருவர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் கற்பவர் என்றும் தெரியவந்துள்ளது. அத்துடன் இவர்கள் தங்காலை, காலி, பிலிமத்தலாவை, நுவரெலியா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 6 பேரும் மதுபோதையில் இருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், அவர்கள் தமது அடையாள அட்டைகளை பொலிஸாரிடம் காண்பிக்கும்…
பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான டிஸ்கோ என அழைக்கப்படும் தர்மகீர்த்தி உதேனி இனுக பெரேரா என்ற போதைப்பொருள் மற்றும் கூரிய ஆயுதங்களை வைத்திருந்த வேளையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஜனவரி 29 கைது செய்யப்பட்டுள்ளார்.