பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்யப்படும் முட்டைகளின் விலை குறைவடைந்துள்ளது. 10 முட்டைகள் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் விலை 21 சதவீதத்தால் குறைவடைந்துள்ளது. இதன்படி 10 முட்டைகள் 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Author: admin
(எம்.என்.எம்.அப்ராஸ்) 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்புரைக்கு அமைய “வீட்டினையும் நாட்டினையும் சுத்தமாக்குவோம்” எனும் கருப்பொருளில் கல்முனை சமுர்த்தி வங்கி வலயங்களில் இன்று (29) மாபெரும் சிரமதான நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத்தலி அவர்களின் வழிநடத்தலில்,தலைமை பீட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் ஆலோசனைக்கமைய கல்முனைக்குடி வங்கி வலய முகாமையாளர் மோசேஸ் புவிராஜ்,தலைமையில் கடற்கரைப்பகுதி, பாடசாலைகள்,மையவாடி மற்றும் பூங்காகளில் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் சமுர்த்தி பயனாளி குடும்பங்கள் மற்றும் நலன் விரும்பிகள் என பலரும் தங்களது பங்களிப்பினை வழங்கி சிரமதான பணியில் ஈடுபட்டனர். ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் வழி நடத்துவோர்களாக சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கல்முனைக்குடி சமுர்த்தி வங்கியின் கட்டுப்பாட்டுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிரமதான நிகழ்வில் ஈடுபட்டனர்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) எதிர் வரும் பெப்ரவரி மாதம் நான்காம் திகதி நடைபெறவிருக்கும் எமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் காரியாளயத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் சிரமதானப் பணிகள் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கு அமைய நடைபெற்றது. இத்திட்டத்திற்கமையசாய்ந்தமருது கடற்கரை பகுதியில் சிரமதானத்தில் மக்கள் ஈடுபட்டதை படங்களில் காணலாம். இந்நிகழ்வில் இப்பிரிவின் கிராம சேவகர் ஏ.கே.சனாஸ், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பாத்திமா றஸானா, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.றிப்கா ஜெஸ்மின் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுதினம் (01) இலங்கையின் கிழக்கு கரையை அடைய அதிக சாத்தியம் உள்ளதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் தாக்கம் காரணமாக இன்று (30) மாலை முதல் நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சில பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி சங்கத்தானையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாதையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் சாவகச்சேரி சங்கத்தானையை சேர்ந்த 27 வயதுடைய சண்முகலிங்கம் பிரகாஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றப்பத்திரிகையை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருப்பதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை ஆணைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கான குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு உள்ளதாகவும் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன, ஞாயிற்றுக்கிழமை (29) காலை தெரிவித்திருந்தார். எதிர்வரும் பெப்ரவரி 17ஆம் திகதியன்று உயர்தர பரீட்சை முடியும் வரை தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பில் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை இலங்கை மின்சாரசபை செயற்படுத்தத் தவறியுள்ளது. இந்நிலையில், மின்சாரசபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க அறிவித்துள்ளார். இதனையடுத்து, ஆணைக்குழுவின் தலைவருக்கும் வலுச்சக்தி அமைச்சருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் விசேட கூட்டம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. கடந்த வாரம் நடைமுறைப்படுத்தப்பட்ட கறுப்பு போராட்ட வாரத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கே இந்த விசேட கூட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த கூட்டத்தில் சுமார் 30 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட மாத வருமானம் பெறுவோரிடம் இருந்து 6% முதல் 36% வரை வரி அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் தமிழ் ஆங்கில மற்றும் சிங்கள ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வெற்றிடங்களுக்கு அரச பணியாளர்களை இணைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 10ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams என்ற இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கண்டி – பன்விலை நகரில் நேற்று மாலை இம்பெற்ற விபத்துச் சம்பவம் ஒன்றில் 8 வயதுச் சிறுவன் ஒருவன் காயமடைந்து கண்டி அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மடுல்கலை பிரதேசத்திலிருந்து பன்விலை நோக்கி வந்துகொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று, வீதியை கடக்க முயற்சித்த சிறுவன் மீது மோதியதால் படுகாயமடைந்த சிறுவன் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வித்து சம்பந்தமான விசாரணைகளை பன்விலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ் வீதியில் பஸ் வண்டிகள் நிறுத்தப்படுவதாலேயே இவ்வாறான விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக போது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். மேலும், இது போன்ற மற்றுமொரு விபத்து அண்மையில் இப்பகுதியில் இடம்பெற்றதாக பொது மக்கள் தெரிவிப்பதுடன், பாதசாரிகள் கடவை ஒன்று விபத்து நடந்த இடத்தில் அமைக்கப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர். குறித்த விபத்து நடந்த இடத்திலேயே தமிழ் பாடசாலை ஒன்றைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணவர்களும் வீதியைக் கடந்து பாடசாலைக்குச் செல்வதும் குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் – இளவாலை, பெரியவிளான் பகுதியில் மது போதையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினால் ஏற்பட்ட கைகலப்பில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்று வியாழக்கிழமை மாலை பெரிய விளான் சந்தியில் சுண்டல் விற்பனையை செய்துவிட்டு இரு இளைஞர்கள் தமது சுண்டல் வண்டியை வீடு நோக்கி தள்ளிச்சென்று கொண்டிருந்த நிலையில் அந்த பகுதியில் மதுபோதையில் வருகைதந்த இளைஞர் சுண்டல் வண்டியை தள்ளிச் சென்ற இளைஞர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இந் நிலையில் இரு இளைஞர்களில் ஒருவர் கம்பியால் தாக்கிய நிலையில் குறித்த இளைஞர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் இருந்து வெள்ளிக்கிழமை தப்பித்து வந்த நிலையில், குறித்த இளைஞர் இன்று உடல்நிலை மோசமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 29 வயதுடைய புஷ்பராசா நிசாந்தன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரழந்துள்ள நிலையில்…