கொழும்பில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த காத்தான்குடியைச் சேர்ந்த வை.பி.. அப்துல் ரஊப் (வயது 52) இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். இவர், 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக 2019 மே மாதம் 5ம் திகதி கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தார். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு வெலிக்கடை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்ததாக தெரியவருகிறது இவர் இருதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் இரண்டு முறை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாகவும் தெரிய வருகிறது புதிய காத்தான்குடி விடுதி வீதியைச் சேர்ந்த இவர், நான்கு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
Author: admin
இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதற்காக இந்திய அரசால் வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில் 50 பேருந்துகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார். இது தொடர்பான ஆவணங்களை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இன்று (05) முற்பகல் கொழும்பிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியிடம் கையளித்தார். இந்திய அரசாங்கத்திடம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, 75வது தேசிய சுதந்திர கொண்டாட்டத்துடன் இணைந்து இந்த பஸ்களை வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலங்கைக்கு இதுவரை 165 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 500 பஸ்களை வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
( கல்முனை நிருபர்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இளைஞர்களின் பங்களிப்புடன் தூய்மை மற்றும் பசுமையான இலங்கை எனும் நிகழ்ச்சித் திட்டம் நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகிறது இதற்கமைய,கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம்.அஸீம் அவர்களின் நெறிப்படுத்தலிலும் கல்முனை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் எம்.என்.எம்.அப்ராஸ் அவர்களின் ஏற்பாட்டிலும் கல்முனை மாநகரில் மர நடுகை நிகழ்வு,கல்முனை மாநகரசபை,கல்முனை பிரதேச செயலகம்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை வர்த்தக சங்கம்,உப்ட இதர அரச,தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் (04)இடம்பெற்றது இதன் போது கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப்,மாநகர சபையின் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர்,மாநகர சபை உறுப்பினர்கள்,கிழக்கு மாகாண இளைஞர் சேவைகள் மன்ற பணிப்பாளர் சரத் சந்திரபால அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர் கங்கா சாகரிக தமயந்தி, அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ.முபாரக் அலி,கல்முனை மாநகர சபையின் ஆணையாளர்…
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்காக 770 மில்லியன் ரூபாவை பெப்ரவரி மாதத்தில் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி புஞ்சிஹேவா, நிதி அமைச்சின் செயலாளரிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உரிய தொகையை முழுமையாகவோ அல்லது தவணையாகவோ வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நிதி அமைச்சின் செயலாளரிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அவசியமான அனைத்துவித ஒத்துழைப்புக்களையும் வழங்கத்தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் குடும்பம் என்ற ரீதியில் நாம் ஒருவருக்கொருவர் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்ட அவர் உலகளாவிய அமைப்புகளை விரிவுபடுத்தும் நெருக்கடிகளின் சிக்கலான இடத்தில் அனைவரும் பிணைக்கப்பட்டுள்ளதாகவும் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதேவேளை மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது. கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) எமது நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாளயத்தில் பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியாவின் தலைமையகல் சுதந்திர தின நிகழ்வுகள் இடம் பெற்றது. பாடசாலை மாணவர்கள். ஆசிரியர்கள்.பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்த இன் நிகழ்வில் நாட்டின் இன ஒற்றுமைமையை வலியுறுத்தும் பாடலும் இசைக்கப்பட்டது.
“இருள்சூழ்ந்த சுதந்திரம்” என பிரகடனப்படுத்தி தமிழரசுக்கட்சியால் மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுத்திருந்தது. இன்று (சனிக்கிழமை) இலங்கை தமிழரசுக்கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஆரம்பமாகியிருந்தது. அதன் பின்னர் மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் ஊடாக ஊர்வலம் இடம்பெற்றதுடன் பாலத்தின் இரு மருங்கிலும் சங்கிலி வடிவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அதனை தொடர்ந்து ஊர்வலம் கல்லடி பாலத்தின் அருகில் உள்ள மைதானம் வரையில் போராட்டம் சென்றது. ஊர்வலத்தினை தொடர்ந்து கல்லடி பாலத்தில் உள்ள மைதானத்தில் பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்ததுடன் அங்கு இறுதி யுத்ததின்போது வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் குறித்து வீதி நாடகமும் நடாத்தப்பட்டது. குறித்த போராட்டத்தில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள்,பிரதேசசபை தவிசாளர்கள்,உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் தனது 78 ஆவது வயதில் காலமானார். நெஞ்சில் நிலைத்திருக்கும் பல பாடல்களைப் பாடிய வாணி ஜெயராம், 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவர் தமிழ், தெலுங்கு,மலையாளம்,கன்னடம் உட்பட பல இந்திய மொழிகளில் பாடியுள்ளார்.