Author: admin

அதிகாரப்பகிர்வு என்ற பேர்வையில் மாயாஜால வித்தை காட்டி தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். திருகோணமலை வெருகல் பிரதேச சபையில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எம்.ஏ. சுமந்திரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழ் மக்கள் கோரும் சமஷ்டி தீர்வு என்ற நிலைப்பாட்டில் தாம் உறுதியாக இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். தெற்கில் எவ்வாறான மாற்றம் ஏற்பட்டாலும் தம்மைத் தாமே ஆள அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்ற வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நிலைப்பாட்டில் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களது இந்த நிலைப்பாடு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெளிப்படுத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Read More

புத்தல – வெல்லவாய பிரதேசத்தில் 2.3 ரிக்டர் அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இன்று (சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என அந்நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை நேற்று மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. மேலும் பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் அமைந்துள்ள நில அதிர்வு அளவை நிலையங்களில் (Seismic Stations) இந்த அதிர்வுகள் உணரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொழில்நுட்பம் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து கண்காணிப்பு கெமராக்களையும் அதன் வசதிகளில் இருந்து அகற்ற அவுஸ்ரேலியாவின் வெளியுறவு அமைச்சகம், முடிவு செய்துள்ளது. தனது துறை அலுவலகங்களில் இருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட கெமராக்கள் அகற்றப்படும் என வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், இன்று (வெள்ளிக்கிழமை) மாநில ஒளிபரப்பு ஏபிசியிடம் கூறினார். முன்னதாக, 250க்கும் மேற்பட்ட அவுஸ்ரேலிய அரசாங்க கட்டடங்களில் குறைந்தபட்சம் 913 கெமராக்கள் நிறுவப்பட்டிருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புத் தளங்களில் இருந்து சீனத் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு கெமராக்களை அகற்ற உத்தரவிட்டதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் வியாழக்கிழமை தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை தடை செய்வதற்கான முடிவினால், மோசமடைந்த இராஜதந்திர உறவுகளை சீர்படுத்த இரு நாடுகளும் முயற்சி செய்தன. அமெரிக்கா ஏற்கனவே பல சீன விற்பனையாளர்கள் மற்றும் கண்காணிப்பு தயாரிப்புகளை தடை செய்துள்ளது. மேலும் பாதுகாப்பு அபாயங்களை…

Read More

அண்மையில் துருக்கி நாட்டில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் இலங்கையர்கள் 16 பேரில், 15 பேர் பாதுகாப்பாக உள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இவர்களுள் ஒரு பெண் மட்டும் காணாமல் போயுள்ளதாக துருக்கிக்கான இலங்கை தூதரத்தின் கொன்ஸ்யூலர்அதிகாரி பபோதா பெரேரா தெரிவித்துள்ளார். இதுவரை சுமார் 21000 பேர் வரை இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இப்பூமியதிர்ச்சியினால் துருக்கியில் 18342 பேர் இறந்துள்ளதுடன், சிரியாவில்3377 இறந்துள்ளதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இன்றுடன்(10) சுமார் 100க்கு மேற்பட்ட மணித்தியாலங்கள் கடந்த நிலையில், காணாமல் போனோர்களை தேடும் பணி தொடர்ந்த வண்ணமே உள்ளன. இருப்பினும் , கடும் குளிரான காலநிலை தொடருவதால் காணாமல் போனொரை தேடும் பணியில், மிகவும் கஸ்டமான சூழ்நிலையை முகம் கொடுப்பதாக , செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

Read More

இலங்கையில் உருவாக்கப்பட்ட Hyundai i10 Grand கார் இன்று வெளியிடப்பட்டது உதிரிப்பாகங்களை கொண்டுவந்து இலங்கையின் முதல் முதலாக உள்நாட்டில் உருவாக்கப் பட்ட Hyundai i10 Grand கார் இன்று வெளியிடப்பட்டது. அறிமுக நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டார்.

Read More

உயர்தர பரீட்சை காலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மீறியமையினால் ஆணைக்குழுவுக்கு அவமதிப்பு ஏற்படுத்தியதாக, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. இலங்கை மின்சாரபை மற்றும் அதன் தலைவர் உள்ளிட்ட பல தரப்பினருக்கு எதிராக குறித்த மனுவை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்திருந்தது. இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது, குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாது உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

Read More

காவல் துறையினர் தங்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை எனக் கூறி எப்பாவல பொலிஸ் நிலையம் முன்பாக ஒருவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் எப்பாவல பொலிஸ் நிலையம் தனது கடமையை சரிவர செய்யவில்லை எனவும், அதற்கு நீதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்து இன்று (10) காலை எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒருவர் சாகும் வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார். எப்பாவல பொலிஸ் நிலையத்திற்கு பல தடவைகள் சென்றும் தமது முறைப்பாட்டுக்கு நீதி கிடைக்கவில்லை எனவும் பொலிஸ் நிலைய அதிகாரிகள் தம்மை திட்டி விரட்டியடித்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்

Read More

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் வெளியேறியது பிரித்தானியாவிற்கு ஒரு இருண்ட அத்தியாயம்’ என்று மூத்த கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார். எல்வுட் தலைமையிலான பாதுகாப்புக் குழு, ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானியா வெளியேறியது குறித்து நேர்மையான விசாரணையை நடத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்த இந்த வெளியேற்றம், நாடு மீண்டும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறி வருவதை எடுத்துரைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் அறிக்கை எச்சரித்துள்ளது. பிரித்தானியாவுக்கு வரதகுதியான ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் ஆப்கானிஸ்தானில் ஆபத்தில் வாழ்கின்றனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த அறிக்கைக்கு பதிலளித்த அரசாங்கம், ஆப்கானிஸ்தானில் இருந்து முடிந்தவரை பலரை பாதுகாப்பாக வெளியேற்ற அயராது உழைத்ததாக கூறியது. பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் பிரித்தானிய ஆயுதப் படைகளுக்காக பணியாற்றிய அல்லது உடன் பணியாற்றிய ஆப்கானிய குடிமக்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம், மேலும் இன்றுவரை நாங்கள் திட்டத்தின் கீழ் 12,100 நபர்களை இடமாற்றம் செய்துள்ளோம்’ என…

Read More

அரசியல் நோக்கத்துக்காக பிரபல்யமடையும் தேவை ஜனாதிபதிக்கு கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது உரையாற்றிய அவர், “பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஜனாதிபதியின் பொருளாதார கொள்கைத் திட்டத்தை கடுமையாக விமர்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியினர் இதுவரை பொருளாதார மீட்சிக்கான கொள்கைத் திட்டங்களை முன்வைக்கவில்லை. மாறாக, குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நாட்டை வலம் வந்து தேர்தல் பிரசாரம் செய்துகொள்கிறார்கள். உழைக்காமல் எவ்வாறு சொகுசாக வாழ்வது என்பது தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியினர் நாட்டு மக்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் வியாபாரம் ஏதும் செய்வதில்லை. தொழில் செய்வதில்லை. ஆனால், சொகுசாக வாழ்கிறார்கள். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிறரை ‘திருடர்’ என விமர்சிக்கிறார். ஆனால், அரசியல்…

Read More

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Read More