சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவும் பொருட்களை வழங்கவும் ஒரு மசூதி தனது சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது. கார்டிஃப்பின் கேத்தேஸ் பகுதியில் உள்ள டார் யுஎல்-இஸ்ரா மசூதி இதுவரை 25,000 பவுண்டுகள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்குவதற்காக ஐந்து வேன்கள் அளவில் ஆடைகள் மற்றும் காலணிகளை திரட்டியுள்ளது. இதேவேளை, கடந்த மூன்று நாட்களில் மட்டும் வேல்ஸில் 1.9 மில்லியன் பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளது. பிரித்தானியா முழுவதும், பேரிடர் அவசரநிலைக் குழு, 60 மில்லியன் பவுண்டுகளுக்கும் அதிகமாக திரட்டியுள்ளது. பேரழிவில் 33,000க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகிறது, நூறாயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக உள்ளனர்.
Author: admin
தகனசாலையில், சடலமொன்று எரியூட்டப்பட்டுக்கொண்டிருந்த போது கேஸ் தீர்ந்துவிட்டதால் அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது. கொட்டகலை பிரதேச சபைக்குச் சொந்தமான, கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் உள்ள தகனசாலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த தமது உறவினரின் சடலத்துடன் உறவினர்கள் இன்று (13) பகல் 1 மணியளவில் தகனசாலையை வந்தடைந்தனர். அதற்கான கட்டணமான 24,850 ரூபாயை உறவினர்கள் ஏற்கெனவே செலுத்தியும் இருந்தனர். சடலத்தை எரியூட்டிக்கொண்டிருந்த போது கேஸ் தீர்ந்துவிட்டதால், உறவினர்கள் குழம்பிவிட்டனர். “கேஸ் தீர்ந்துவிட்டது. நான் வாங்கி வரும் வரையில் இவ்விடத்திலேயே இருக்கவும்” என அங்கு பணியாற்றும் ஊழியர், உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஊழியருக்கும் உறவினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இரண்டு மணிநேரத்துக்குப் பின்னரே, கொட்டகலை பிரதேச சபையின் லொறியில் கேஸ் சிலிண்டர் ஏற்றிக்கொண்டு வரப்பட்டது. அதுவரையிலும் காத்திருந்த உறவினர்கள், லொறியின் சாரதியுடனும் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டனர். முறையாக கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதால், பிரதேச சபை எதற்கும் தயாராகவே இருக்கவேண்டும் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
கடவுச்சீட்டு விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கணினி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாகவே சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த திணைக்களம், அதனை சரிசெய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
Toyota Corolla மற்றும் Yaris கார்களில் ஏர்பேக்கை (Airbag ) இலவசமாக மாற்றுவது தொடர்பில் Toyota Lanka Pvt Ltd வாகன உரிமையாளர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இதனுடன் தொடர்புடைய விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. காரின் செஸ்ஸி / பிரேம் இலக்கம் மேலே உள்ள அளவுகோல்களுடன் பொருந்தினால், உங்கள் மோட்டார் வாகனத்தை அருகில் உள்ள டொயோட்டா லங்கா சேர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று ஒப்படைக்குமாறு அந் நிறுவனம் தெரிவிக்கிறது. இது தொடர்பான விசாரணைகளுக்கும் , முன்பதிவு செய்வதற்கும் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளலாம். 0112 939 000 அல்லது 0777 939 158 இதேவேளை, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா நிறுவனமும் MITSUBISHI வாகன உரிமையாளர்களுக்கு Airbag தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், Stafford மோட்டார் நிறுவனமும் HONDA வாகன உரிமையாளர்களுக்கு ஒரு விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ளது
உள்ளூராட்சி மன்றத் தேர்தளுக்கான தபால்மூல வாக்களிப்பிற்கு தயாராகிவிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனிடையே தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விசேட அறிவுறுத்தல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் வாக்குகளை 22, 23, 24 ஆகிய திகதிகளில் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாமல் போனால், 28 ஆம் திகதி மாவட்ட தேர்தல் அத்தியட்சகர் முன்னிலையில் செலுத்தலாம் என தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாதம் நான்காவது ராணுவ நடவடிக்கையில், அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கனேடிய எல்லைக்கு அருகில் உள்ள ஹூரோன் ஏரிக்கு அருகில் அதை வீழ்த்துமாறு ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். இந்த பொருள் 20,000 அடி (6,100 மீ) உயரத்தில் பயணித்ததால் வணிக விமானப் போக்குவரத்தில் தலையிடக்கூடும் என்று பென்டகன் அறிக்கை தெரிவித்துள்ளது. இது சனிக்கிழமையன்று மொன்டானாவில் உள்ள இராணுவ தளங்களுக்கு மேலே கண்டறியப்பட்டது. இராணுவ அச்சுறுத்தலாக கருதப்படாத இந்த பொருள், பாதுகாப்பு அதிகாரிகளால் ஆளில்லா மற்றும் எண்கோண வடிவமாக விபரிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 14:42 மணிக்கு எஃப்-16 போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட ஏவுகணையால் இந்த பொருள் வீழ்த்தப்பட்டது. இச்சம்பவம் இந்த மாதம் வட அமெரிக்காவில் சுட்டு வீழ்த்தப்பட்ட உயரமான பொருட்களைப் பற்றி மேலும் கேள்விகளை எழுப்பியது. சந்தேகத்திற்கிடமான சீன உளவு பலூன், கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி தென் கரோலினா…
வெல்லவாய பிரதேசத்தில் பதிவான சிறு நில அதிர்வுகள் தொடர்பான கள ஆய்வுகள் நேற்று இரண்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன இந்த நிலையில், நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை இன்று (13) வெளியிடப்படும் என புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது.
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்த அறிவிப்பு இதுவரை வெளியிடப்படாமை உள்ளிட்ட பல காரணிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சகல கட்சிகளினதும் செயலாளர்களும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய இன்றைய தினம் அவர்களுடன் இந்த கலந்துரையாடலை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதேவேளை, தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் இணைந்து நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளன. உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான நிதியை விடுவிக்குமாறு கோரியே எழுத்து மூல கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.
சீனா இலங்கையின் நண்பன் என்றும், இரு நாடுகளும் தொடர்ந்து கைகோர்த்து செயல்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். எனினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்திய நலன்களுக்கு எதிராக செயற்பட இலங்கை அனுமதிக்காது என்பதால், இந்தியா கவலைப்படத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு சென்றுள்ள அமைச்சர் அலி சப்ரி, கேரள மாநிலம் கொச்சியில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இந்தியாவின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் இலங்கை தமது மண்ணில் நடக்க அனுமதிக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (11) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற பிரபல மோட்டார் சைக்கிள் சாரதியான கௌசல்யா சமரசிங்க பலத்த காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். ஹொரண அகலவத்தை வீதியின் கோவின்ன பகுதியில் உள்ள வளைவிலேயே அவர் செலுத்தி சென்ற மோட்டார் சைக்கிள் மற்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து ஏற்பட்டது.