இன்று (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO | XYZ | CC) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். 💠 *ABCDEFGHIJKL ▪️ PQRSTUVW* 📌 *மு.ப. 8.00 – பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள்* 📌 *பி.ப. 6.00 – இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்* 💠 *MNO | XYZ* 📌 மு.ப. 5.00 – மு.ப. 8.00 வரை 3 மணித்தியாலங்கள் 💠 *CC* 📌 *மு.ப. 6.00 – மு.ப. 9.00 வரை 3 மணித்தியாலங்கள்.* 💠 *ABCDEFGHIJKL* *முதலாம் கட்டம்* 📌08:00 AM -11:20 AM ➖ A, B, C, D 📌11:20 AM -…
Author: admin
மக்களின் இணக்கப்பாடின்றி அமைக்கப்படவுள்ள அமைச்சரவைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணக்கம் தெரிவிக்காது என அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நியமிக்கப்படவுள்ள அமைச்சரவையானது மக்களின் ஆணையின்றியே நியமிக்கப்படவுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மேலும் குறித்த அமைச்சரவை நியமிக்கப்பட்டால் மக்களை புறக்கணித்து நியமிக்கப்பட்ட அமைச்சரவையாகவே கருதப்படும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை தொடர்பில் குறித்து கலந்தாலோசித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பு- சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது, ரஞ்சன் ராமநாயக்கவை விட அதிகமான குற்றங்களைச் செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் நியாயமான ஒன்றாக இருக்கும் என்றும் அகில காரியவசம் தெரிவித்தார். இதேவேளை, தமது கட்சியைச் சேர்ந்த எவரும் அரசாங்கத்தில் எந்தப் பதவியையும் தேடமாட்டார்கள் எனத் தெரிவித்தார். ஆட்சியில் செயல்படாமல் ஆதரிப்போம்,என்றார்.
நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜயவர்தன, அகிலவிராச் காரியவசம், சாகல ரத்நாயக்க மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களின் தேவைப்பாடு, உரப்பற்றாக்குறை, ஒளடதங்கள் பற்றாக்குறை, எரிபொருள் பற்றாக்குறை தொடர்பில் ஆராய்வதற்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் புதிய பிரதம மந்திரி பிபிசியிடம் ஒரு பொருளாதார நெருக்கடி, துன்பத்தையும் அமைதியின்மையையும் கொண்டு வந்துள்ளது, “அது சரியாகிவிடும் முன் மோசமாகிவிடும்” என்று கூறியுள்ளார். குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு கிடைப்பதை உறுதி செய்வதாக பிரதமர் பிபிசியிடம் கூறியுள்ளார் மேலும் நிதி உதவிக்காக உலகிற்கு வேண்டுகோள் விடுத்த அவர், “பசி நெருக்கடி இருக்காது, நாங்கள் உணவைக் கண்டுபிடிப்போம்” என்றார். புதிய பிரதமர் இலங்கைப் பொருளாதாரம் “உடைந்துவிட்டது” என்று விவரித்தார், ஆனால் இலங்கையர்களுக்கு தனது செய்தி “பொறுமையாக இருங்கள், நான் விஷயங்களை மீண்டும் கொண்டு வருவேன்” என்று கூறினார்.
அஜித்தின் AK 61 எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் AK 61. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியார் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இப்படத்தில் சார்பாட்டா படத்தில் நடித்த நடிகர் ஜான், மற்றும் ராஜதந்திரம் படத்தின் ஹீரோ வீரா ஆகியோர் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அஜித்துடன் இணைந்த முன்னணி நட்சத்திரம் இந்நிலையில், இப்படத்தில் முதல் முறையாக அஜித்துடன் இணைந்து நடிக்க நடிகர் சமுத்திரக்கனி கமிட்டாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆம், தான் எச்.வினோத் இயக்கத்தில் அஜித்துடன் AK 61 படத்தில் நடிப்பதாகவும், படத்தின் கதை மிகவும் அற்புதமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசலை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இருப்புகள் தற்போது தீர்ந்து போவதே இதற்குக் காரணம் என கூறப்படுகின்றது. அதன்படி, மருத்துவமனை, மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் டீசல் வழங்க கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதையடுத்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் மக்கள் காத்து நிற்கும் நிலை காணப்பட்ட போதிலும், பெரும்பாலானவர்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. அதேசமயம் பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், போதுமான அளவு பெற்றோல் கையிருப்பில் இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வரும் திங்கட்கிழமை மற்றுமொரு டீசல் இருப்பு நாட்டிற்கு வரும் எனவும், தற்போதுள்ள இருப்புகளை நிர்வகிக்க முடியும் எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். எனினும், அத்தியாவசிய சேவைகளைத் தவிர சாதாரண விநியோகத்துக்கு கூட்டுத்தாபனம், டீசலை வழங்குவதில்லை என சிபெட்கோவுக்கு எரிபொருளை விநியோகிக்கும்…
பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத் தில் ஊடகங்களுக்கு உண்மையான அறிக்கை யை வெளியிடுவேன் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பை எதிர்வரும் நாட்களில் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் அனைத்து ஊடகவியலாளர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றார். ஊடகவியலாளர் சந்திப்பின் போது, நாட்டின் நிலைமை மற்றும் அதற்கான காரணங்கள் வெளிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும் லிட்றோ நிறுவனத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடர்புபட்ட நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த காலங்கள் தோறும் நிகழ்கால அரசாங்கத்தின் கீழ் குறித்த நிறுவனங்களின் பாரிய நட்டம் மற்றும் கடன் சுமை தொடர்பாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் கருத்து வெளியிட்டதை முதன்மையாகக் கொண்டு இந்த நிறுவனங்கள் விற்கப்படவுள்ளதாக பணியாளர்கள் அஞ்சுகின்றனர். அத்துடன், தட்டுபாடுகளின்றி எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்குவதென்றால் வெளிநாட்டு நிறுவனங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என மக்களின் பக்கமிருந்து பிரதானமான விவாதத்தை தோற்றுவிப்பதற்கு ஏதுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
விஜய் பீஸ்ட் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக தளபதி விஜய் நடித்து, கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் எதிர்பார்த்த அளவில் இல்லை என்ற காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் தோல்வி என்பது போல் விமர்சனங்களை பெற்று வந்தது. விமர்சன ரீதியாக தோல்வி என்று கூறினாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பு பீஸ்ட் படத்திற்கு கிடைத்தது. வெற்றியா? தோல்வியா? இந்நிலையில், பீஸ்ட் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், பீஸ்ட் வெற்றியா அல்லது தோல்வியா என்பது குறித்து கூறியுள்ளார். அவர் கூறியதில் ” பீஸ்ட் மாபெரும் ஒரு வெற்றி படம் ” என்று தெரிவித்துள்ளார். இதன்முலம் பீஸ்ட் வெற்றி படம் என்று உறுதியாகியுள்ளது. (cineulagam)