முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடையை அவரது சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய கோட்டை நீதவான் நீதிமன்றம் ஏப்ரல் 20 முதல் 30 வரை விலக்கிக் கொண்டது. தென்கொரியாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்த தடை நீக்கப்பட்டுள்ளது.V
Author: admin
இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் உருவாக்கிய மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று தெரிவித்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோடும் அனைத்து மகளிருக்கும் தன்னுடைய இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். பெண் என்பவர் இந்த தேசத்தைக் கட்டியமைக்கும் வலிமை கொண்டவள். ஒரு குடும்பத்தை முன்னேற்றவும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதிலும் பெண்களின் பங்கு என்பது அளப்பறியது என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர்,ஏனைய நாடுகளுடன் ஒப்பிடப்படுமிடத்து, பெண்களுக்கான வாய்ப்புகள் அதிகளவில் வழங்கப்படும் இடத்தில் இலங்கை காணப்படுகிறது என்றும் அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இலங்கையில் துணிச்சலுடன் பெண்கள் வேலைக்கு சென்ற முதல் சமுதாயம் மலையகமே. மலையக பெண்களின் கடினமான…
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை 2023ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட 16 பேருக்கு தடைவிதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ள நிலையில் கோட்டை நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி இன்று காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு மற்றும் காலிமுகத்திடல் ஆகிய பகுதிகளுக்குள் பிரவேசிப்பதற்கு தடைவிதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார் மேலும் போராட்டக்காரர்கள் கொழும்பு நகரின் பிரதான வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்க மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட 16 மாணவர் சங்கங்களின் செயற்பாட்டாளர்களுக்கு குறித்த உத்தரவு பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கொழும்பில் இன்று பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது 7 கோரிக்கைகளை…
பிரான்ஸில் ஓய்வூதியம் தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பாரிய போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. ஓய்வூதிய வயதெல்லையினை 62ல் இருந்து 64 ஆக அதிகரிக்கும் அரசாங்கத்தின் தீர்மானித்திற்கு தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளன. இந்த நடவடிக்கையானது பிரான்ஸ் போக்குவரத்து மற்றும் பொது சேவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பரீஸ் நகரில் இன்று பாரிய போராட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அத்துடன் இன்று பெரும்பாலான ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதுடன் பாடசாலைகள் ட மூடப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை – எலபெத்த கும்புர தகுன கெபிலேவெல பகுதியில் பெண் ஒருவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்திய முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார். பெண்ணின் காதலன் எனக் கூறப்படும் பண்டாரவளை பகுதியை சேர்ந்த இராணுவ பொறியியலாளர் பிரிவில் கடமை புரிந்து தற்போது இராணுவத்திற்கு செல்லாது தலைமறைவாகி இருந்த 23 வயதுடைய இளைஞனே காதலியின் தாய் மீது இந்த அசிட் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். அசிட் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணின் தாய் பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதோடு குறித்த பெண்ணுக்கு எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. இதையடுத்து 23 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த சந்தேக நபரை பண்டாரவளை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை – சேருநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு மதிய உணவில், நாய்களுக்கு கொடுக்கும் மருந்தை கலந்து கொடுத்ததாக கூறப்படும் 6 மாணவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம் என பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறானதொரு செயலைச் செய்த ஆறு மாணவர்களின் எதிர்காலத்தை கருதிற்கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் இந்த முடிவை எடுத்துள்ளதாக அப்பகுதிக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த மாணவன், தனது வகுப்பில் கல்வி கற்கும் ஆறு சக நண்பர்களையும் மன்னிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாய்களுக்கு கொடுக்கப்படும் மருந்தை உணவில் கலந்ததாக கூறப்படும் ஆறு மாணவர்களையும் அழைத்து எச்சரித்தால் போதும் என நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர் பொலிஸாரிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் நோய்வாய்ப்பட்ட மாணவனின் பெற்றோர்…
கொட்டாஞ்சேனை, இப்பஹங் சந்தியில் வைத்து ஓட்டோவொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை. என்றும் துப்பாக்கிதாரியின் இலக்கு தவறியுள்ளமை விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தேசிய டெங்கு தடுப்பு பிரிவின் தேசிய நுளம்பு ஒழிப்பு நிகழ்ச்சிக்கு அமைவாக டெங்கு பரிசோதனை நிகழ்ச்சியும், நுளம்பு ஒழிப்பு முறை பற்றிய பொதுமக்களுக்கு விழிப்பூட்டலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் இன்று (செவ்வாய்க்கிழமை) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரதேசத்தில் இடம்பெற்றது. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே. கே.எம். அர்சத் காரியப்பரின் தலைமையில் இடம்பெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு டெங்கு கட்டுப்பாடு தொடர்பில் விளக்கமளித்தார். மேலும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் டாக்டர் எம்.பி.எம். வாஜித், பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். பைஸால், மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல். லாபீர், உட்பட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை…