Author: admin

புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தையில் உள்ள 05 ஹோட்டல்களை மூடுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனியின் ஆலோசனையின் பிரகாரம், புறக்கோட்டை ஒல்கொட் மாவத்தையில் அமைந்துள்ள ஹோட்டல்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் விசேட பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, தூய்மையற்ற 05 ஹோட்டல்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read More

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் பயிற்சி பெறும் சுமார் 92 மாணவர்கள் திடீர் சுகவீனத்துக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற நோய் அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அங்கு பயிற்சி பெறும் மாணவர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றவர்களில் 10 பேர் அங்கு தங்கி இருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், ஏனையோர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக் பெற்றுக் கொண்டு வெளியேறியுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் ஏதேனும் வைரஸ் நோய் பரவுகின்றதா என்பது தொடர்பில் பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதார பரிசோதகர்களுக்கு வைத்தியர் ஆலோசனை வழங்கியுள்ளார். இதனையடுத்து இன்று வைத்தியசாலைக்கு சென்ற சுகாதார அதிகாரிகள் அங்கு பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அத்துடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் இரத்த மாதிரிகளும் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

Read More

வெளிநாட்டு கடவுச்சீட்டு மோசடிகளை தடுக்க உரிய நடவடிக்கைகள் திணைக்கள மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் மாதம் முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 50 பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். ஆகவே, கடவுச்சீட்டுக்காக இடைத்தரகர்கள், மோசடியாளர்களிடம் ஏமாற வேண்டாம் என குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய பொது மக்களிடம் வலியுறுத்தினார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்த பின்னணியில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கான கேள்வி அதிகமாக காணப்பட்டது. குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மனித மற்றும் பௌதீக வளங்களை கருத்திற்கொண்டு கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்கு நேரம் மற்றும் காலத்தை ஒதுக்கிக்கொள்ள இணையவழி முறைமை ஊடான வழிமுறை கடந்த ஆண்டு இறுதிப் பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. வெளிநாட்டு கடவுச்சீட்டு விநியோகத்துக்கான இணையவழி முறைமை ஊடான விண்ணப்பம் சமர்ப்பிப்பு கடந்த 17ஆம் திகதியுடன்…

Read More

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளன. துறைமுக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது. அங்கு உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டெர்மினல்களை நிர்மாணிப்பதால் மட்டும் துறைமுகம் உருவாகாது என குறிப்பிட்டார். கிழக்கு முனையத்தின் முதல் கட்டப் பணிகள் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஏனைய தனியார் டெர்மினல்களுடன் போட்டியிட்டு அதிக வருமானத்தை ஈட்ட முடியும் என நம்புவதாக நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

Read More

நுகர்வோரின் நலனுக்காக ஆதரவாக முன் நின்று செயற்பட்ட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கு அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும், சுயாதீன ஆணைக்குழுவில் செல்வாக்கு செலுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க முடியாது எனவும், மக்களின் எதிரான அரசாங்கத்தின் இந்த பிரேரணையை தோற்கடிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இதன் பிரகாரம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்ப்பைத் தெரிவிப்பதாகவும், பெரும் வாழ்க்கைச் செலவால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு ஆதரவாக முன்நின்ற தலைவரை பதவி நீக்கம் செய்வது மக்களுக்கு விடுக்கும் மரண அடியாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். மின்சார சபையின் நிர்வாக சீர்கேடு,ஊழல் மற்றும் மோசடியால் ஏற்படும் நஷ்டத்தை போக்க மின்சார நுகர்வோர் மீது சுமத்தும் விலையேற்றத்தை சுட்டிக்காட்டியமையே ஜனக ரத்நாயக்கவிற்கு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு பிரதான காரணம் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இத்தருணத்தில்…

Read More

*மன்னிப்பு கோருவதால் மாத்திரம் விசாரணைகளை கைவிட முடியாது* கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்ணான்டோவின் கருத்து தொடர்பில் மன்னிப்பு கோருவதால் மாத்திரம் விசாரணைகளை கைவிட முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். ஏனைய மதங்கள் தொடர்பில் அவதூறு பேசியதாக குற்றம் சாட்டப்பட்ட கிறிஸ்தவ மத போதகர் ஜெரோம் பெர்ணான்டோ தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எவரேனும் குற்றம் செய்துவிட்டு மன்னிப்பு கோரும் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகளை கைவிட முடியாது என அவர் தெரிவித்துள்ளார். தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக குற்றப்புலனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு அதிகாரிகள் அது தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு குற்றம் புரிந்த இலங்கை பிரஜையொரவர் நாட்டிற்கு வருகைத்தருமிடத்து விமான நிலையத்தில் வைத்து அவர்கள் குற்றப்புவனாய்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர். குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பின்னர் விசாரணைகளை முன்னெடுத்து அதற்கான தீர்வினை…

Read More

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் 33.6 சதவீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த சுட்டெண்ணின் படி, மார்ச் மாதத்தில் பணவீக்கம் 49.2 சதவீதமாக பதிவாகி இருந்தது. மார்ச் மாதத்தில் 42.3 சதவீதமாக இருந்த உணவு வகை பணவீக்கம், ஏப்ரலில் 27.1 சதவீதமாக குறைந்துள்ளது.

Read More

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, சேமிப்பு, விநியோகம் மற்றும் விற்பனை தொடர்பான இந்த நீண்ட கால ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. சினோபெக் ஃப்யூயல் ஒயில் லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் சீனா, சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் முடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளார்.

Read More

இரண்டு கடவுச்சீட்டுகளுடன் நாட்டிற்குள் பிரவேசித்ததாகக் கூறப்படும் சீனப் பிரஜை தற்போது குடிவரவு, குடியகழ்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவிற்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் எரித்து நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) வாபஸ் பெறப்பட்டது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பொது பாதுகாப்பு அமைச்சர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல், கடந்த ஆண்டு மே மாதம் 9ம் திகதி நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். . மனுதாரர் தரப்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, அதில் திருப்தியடைவதாகவும், அதனடிப்படையில் குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரினார். அந்த கோரிக்கை தொடர்பான மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த இராணுவ பிரதானி சவேந்திர சில்வா சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ்…

Read More