வளிமாசடைதல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் வளிமாசுபாடு அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நாட்டின் 10 மாவட்டங்களில் நேற்ற வளிமாசு பாடு அதிகரித்து காணப்பட்’டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன தரவுகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொழும் நகரில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்தன தெரிவித்துள்ளார். அமெரிக்க காற்றுத் தரக் குறியீட்டின் பிரகாரம் கொழும்பு நகரின் காற்றின் தரக் குறியீடு நேற்றைய நாளில் 154 அலகுகளாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இவை தவிர யாழ்ப்பாணம் நகரின் காற்றின் தரக் குறியீடு 106, புள்ளிகளாகவும் குருநாகல் மற்றும் வவுனியா நகரங்களில் தலா 111, புள்ளிகளாகவும் திருகோணமலையில் 123 புள்ளிகளாகவும் காலியில் 123 புள்ளிகளாகவும் , புத்தளம் நகரில் 117 புள்ளிகளாகவும் , பதுளை நகரில் 134, புள்ளிகளாகவும் முல்லைத்தீவு நகரில் 109, புள்ளிகளாகவும் பதிவு…
Author: admin
பெண் அரச அதிகாரி ஒருவரின் நிர்வாணப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அவரின் முன்னாள் காதலன் மிரட்டிய சம்பவம் பதாவி, ஸ்ரீபுர பகுதியில் இடம்பெற்றுள்ளது. தான் கேட்ட பணத் தொகையை தராவிட்டால் குறித்த பெண்ணின் நிர்வாணப் படங்களை அந்தப் பெண்ணின் கணவனுக்கு அனுப்புவதோடு இணையத்திலும் வெளியிடுவதாக சந்தேக நபர் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக குறித்த பெண் ஸ்ரீபுரா பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் 2019 ஆம் ஆண்டு முதல் சந்நேக நபரின் வங்கிக் கணக்கில் ரூபாய் 2.6 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை வைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். சில வருடங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேக நபரும் இந்தப் பெண்ணும் காதலித்து வந்துள்ளனர், அந்த சமயத்தில் குறித்த பெண்ணை நிர்வாணமாக அவர் படம் பிடித்துள்ளார். இருவரும் பிரிந்ததிலிருந்து, சந்தேக நபர் பணம் கேட்டு வருவதாகவும் பணம் தராத பட்சத்தில் அந்த நிர்வாணப்படங்களை…
சுமார் 6.5 மில்லியன் இந்திய ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் பெங்களூரு சுங்கத்துறை அதிகாரிகளால் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 1.2 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 33 வயதுடைய சந்தேக நபர் 8ஆம் திகதி இரவு பஹ்ரைனில் இருந்து வந்து இறங்கியுள்ளார்.. இவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர் தனது மலக்குடலில் ஒரு கிலோ தங்கப் பசையை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 4 காப்ஸ்யூல்களில் அடைக்கப்பட்ட தங்கத்தை அந்த நபர் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அவர் தமிழகத்தில் பிளம்பர் வேலை செய்து வருவதையும், இந்தியாவுக்கு தங்கம் கடத்துவதற்காக அடிக்கடி வளைகுடா நாடுகளுக்குச் சென்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மே மாதம் நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்படலாம் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை விடைத்தாள் பரீட்சை இரண்டு வாரங்கள் தாமதமாகியுள்ள நிலையில் சாதாரண பரீட்சையை ஒத்திவைக்க நேரிடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இரண்டு பரீட்சைகளுக்கு இடையில் மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் மன்னிப்பு கோரியுள்ளார். தனிப்பட்ட விஜயம் ஒன்றுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இரவு கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாட்டை விட்டு வெளியேற முயன்ற மஹிந்தானந்த எம்.பி, மத்துகம நீதிமன்றத்தால் வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டார். இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட கட்டுப்பாட்டாளர் நாயகம், எம்.பியின் கடவுச்சீட்டு தரவில் மற்றொருவரின் தகவலை ஊழியரொருவர் பதிவேற்றியமையே இதற்கு காரணம் என்றும் அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகியோர் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்துகம நீதிமன்றத்தில் தமக்கு எதிராக வழக்கு தொடரப்படவில்லை என்றும் பயணத்தடை விதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகளுக்கு அறிவித்த எம்.பி, தனது பயணத்தை இரத்துச்…
இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளிலும் தொடங்கியது. இந்நிலையில், அவை தொடங்கியதுடன் இந்திய நாடாளுமன்றம் தொடர்பாக பிரிட்டனில் ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டுமென மக்களவையில் ஆளும்தரப்பு கேட்டுக்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணிவரை அவைகள் ஒத்திவைக்கப்பட்டது.
இலங்கையில், மத்திய மலைநாட்டில், அக்குறணை நகரையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் ஊடறுத்துச் செல்லும் பிங்கா ஓய, மழை காலத்தில் பெருக்கெடுப்பது போன்ற இன்னோரன்ன காரணங்களால் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்ட யோசனைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சென்ற வாரம் பிரதேச செயலாளர் ஏ.எச்.எம். இந்திகா குமாரி அபேசிங்ஹவுடன் கலந்துரையாடினார். பிரஸ்தாப யோசனைகளை உள்ளடக்கிய திட்ட வரைவு நிறைவடைந்தவுடனேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது. கண்டி மாவட்டத்தில், ஹாரிஸ்பத்து தேர்தல் தொகுதியில் பெரும்பாலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மலைப் பாங்கான எழில் மிகு பிரதேசமாக அக்குறணை காணப்படுகிறது. கண்டி – யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் இவ்வூர் அமைந்துள்ளது. கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் ஆகியோர் அதிக மழை வீழ்ச்சியின் போது நீண்ட காலமாக…
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்கு பல காரணங்கள் இருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இந்த வருட இறுதிக்குள் டொலரின் பெறுமதி மீண்டும் உயரலாம் என ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்திருந்த கணிப்பு தொடர்பில் பேராசிரியர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையில் 1990ஆம் ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை எழுதிய நண்பர்கள் 33 வருடங்களுக்குப் பிறகு சாய்ந்தமருது சீ பிறிஸ் ரெஸ்ட்டூரண்டில் அன்மையில் ஒன்று கூடினார்கள். இதன் போது பரஸ்பர நற்பை ஆளுக்காள் பரிமாரிக்கொண்டதுடன் இன் நண்பர்களின் பிள்ளைகளுள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியர், O/L பரீட்சை எழுதி A/Lக்கு தகுதி பொற்றவர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திறமை. காடடியவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம் பெற்றது.
தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குமாறு நிதியமைச்சின் செயலாளருக்கு தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம் நிதி அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், நிதியமைச்சின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு இதனைத் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் தேர்தலுக்கான பணத்தை வெளியிடுவதற்கு தம்முடைய அனுமதி போதாது என நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக செயலாளர் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி தேர்தலுக்காக 2023 வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட எந்தவொரு நிதியையும் தடுத்து நிறுத்துவதைத் தடுக்கும் வகையில் உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இந்த உத்தரவு பிறப்பித்த நிலையிலேயே நிதி அமைச்சரின் ஒப்புதலுக்காக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.