அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சு பதவி ஏற்காவிடின், அரசுக்கு ஆலோசனை கூறும் பொருளாதார அபிவிருத்திக் குழுவில் இணைந்து ஒத்துழைப்பு வழங்குமாறு இன்று பிரதமர் ரிஷாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதேவேளை இன்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தற்போதைய அரசாங்கத்தை நாட்டின் நலனுக்காக தனது பதவிகளை நாடாமல் பாராளுமன்ற செயற்பாட்டின் ஊடாக ஆதரிக்க தீர்மானித்துள்ளது.
Author: admin
நாளை (17) முதல் வழமை போன்று ரயில் போக்குவரத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி அனைத்து அலுவலக ரயில்களையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அனைத்து தொலைதூர ரயில் சேவைகளும் நாளை முதல் இயக்கப்படும் எனவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்புக்கான இரவு நேர அஞ்சல் ரயில் மாத்திரம் இயக்கப்படாது என காமினி செனவிரத்ன தெரிவித்தார். அதன்படி நாளையதினம் 374 ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மற்றும் வன்முறையுடன் இடம்பெற்ற பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர் . கிழக்குமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரின் கட்டளையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடுப்பு விசாரணை பிரிவு பொறுப்பதிகாரி பி எஸ் .பி .பண்டார தலைமையிலான மூன்று பொலிஸ் குழுவினர் இணைந்து மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறை மற்றும் பொருட்கள் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அந்தவகையில் மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் நடாத்தப்பட்ட வன்முறையின் போது பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டமை மற்றும் பொருட்கள் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்யும் நடவடிக்கையின் கீழ் பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள…
கடந்த 9ஆம் திகதி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி சோசலிஸ்ட் யூத் யூனியன் (SYU) ஏற்பாட்டில் பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கனமழையால், நீர் மின் உற்பத்தி தற்போது தினசரி மின் உற்பத்தியில் 60 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீப காலமாக நாட்டில் நிலவி வறண்ட வானிலை காரணமாக நீர் மின் உற்பத்தி 18% ஆகக் குறைந்திருந்தது.. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், ஐந்து மாகாணங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நேற்றும் இன்றும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் பல நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை, காசல்ரீ, லக்சபான மற்றும் சமனலவெவ நீர்த்தேக்கங்களிலும் மத்திய மலையக விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் கொத்மலை நீர்த்தேக்கங்களிலும் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதேவேளை, இன்றும் மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை, கடும் மழை காரணமாக களுகங்கை,…
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் தங்கள் பாவனைக்காக துப்பாக்கிகளை வழங்குமாறு ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் இவர்கள் துப்பாக்கிக் கோரியதாகவும், தமது வீடுகள் மற்றும் உடமைகளைப் பாதுகாக்கத் தவறியதற்காக சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொலிஸ் மா அதிபரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நிதி அமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி புதிய அரசாங்கத்தில் நிதியமைச்சர் பதவியை ஏற்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதாகவும் ஆனால் நிதியமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக ஏப்ரல் மாதம், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, முன்னாள் நீதி அமைச்சர் அலி சப்ரி நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் எரிபொருள் நிலையங்களுக்கான எரிபொருள் விநியோகம் வழமைக்கு வரும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. வெசாக் விடுமுறை தினம் என்பதால் நேற்று எரிபொருள் விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில், இன்றைய தினம் எரிபொருள் நடவடிக்கைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு காலை வேளையில் எரிபொருள் கிடைக்கப்பெறும் என்பதுடன், ஏனைய மாகாணங்களுக்கு மதிய வேளையில் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபன தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இந்திய கடன் எல்லை வசதி திட்டத்தின் கீழ் மேலும் ஒரு டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பணப்பரிவர்த்தனை முறையின் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்புவதட்காக 50 000 யூரோக்களை வைத்திருந்த நபர் பெப்பிலியான பிரதேசத்தில் பொலிசாரால் கைது செய்யபட்டுள்ளர். 47000 அமெரிக்க டொளர்களுடன் இரண்டு சந்தேக நபர்களை பொலிசார் கைது செய்து இரு தினங்களில் இது இரண்டாவது கைதாகும்.