எதிர்காலத்தில் பால்மாவின் விலைகளை மேலும் குறைப்பதற்கு நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள், இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சகத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Author: admin
இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு பயணிகளுக்கான வருகை அட்டையினை ஒன்லைனில் நிரப்பும் முறையினை (Online Arrival Card System) அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் வெளிநட்டு பயணிகள் இலங்கைக்கு வருகை தருவதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த ஒன்லைன் செயல் முறையினை பூர்த்தி செய்ய முடியும். இந்த புதிய நடவடிக்கையானது பயணிகள் இலங்கைக்குள் நுழைவதற்கான செயல்முறையை இலகுவாகவும் வசதியாகவும் மாற்றும். இலங்கையில் ஒன்லைன் வருகை அட்டை முறையை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து, பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் இலங்கைக்கான பிரித்தானியப் பயணிகளுக்கான தனது ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது. அனைத்து பயணிகளும் இலங்கை அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளது.
அண்மையில் அஹுங்கல்ல, மித்தரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை முகாமில் இருந்து 36 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த 14ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அன்றைய தினம் இராணுவ முகாமில் இருந்து கடமைக்காக வழங்கப்பட்ட 36 துப்பாக்கிகளை அஹுங்கல்ல பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அஹுங்கல்ல மித்தரமுல்ல பிரதேசத்தில் கடந்த 14ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு சிறுவர்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகி இருந்தனர். துப்பாக்கிச் சூட்டிற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கரந்தெனிய இராணுவ புலனாய்வுப் படை முகாமுக்கு…
கல்முனை மாநகர சபைப் பிரதேசங்களில் கோழி இறைச்சியின் விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி, கோழி இறைச்சி வியாபாரிகளுடன் விஷேட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். கல்முனை மாநகர பிரதேசங்களில் 01 கிலோகிராம் கோழி இறைச்சியானது 1600 வரை அதிகரித்த விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்தே கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கோழி இறைச்சிக் கடைகளின் உரிமையாளர்கள் நேற்று (18) மாநகர சபைக்கு அழைக்கப்பட்டு, விலைக் கட்டுப்பாட்டுக்கான சாதக நிலைமை குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபையின் பிரதி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம், கணக்காளர் கே.எம்.றியாஸ், பொறியியலாளர் ஏ.ஜே.ஹலீம் ஜௌஸி, வருமான பரிசோதகர்களான ஏ.ஜே.சமீம், எம்.சலீம், எம்.எஸ்.எம்.உபைத், எம்.ரி.சப்னம் சாஜிதா ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். இதன்போது எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு கோழி இறையிச்சியின் விலையை முடியுமான வரை குறைத்து விற்பதற்கு வியாபாரிகள் முன்வர வேண்டுமென ஆணையாளர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.…
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (20) பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற வாரத்திற்கான நிகழ்ச்சி நிரலை தயாரித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் இங்கு கலந்துரையாடப்படவுள்ளன.
நாட்டில் உள்ள வைத்தியசாலைகளில் தட்டுப்பாடு நிலவும் 60 வகையான மருந்துகளை தனியாரிடம் இருந்து கொள்வனவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது மருந்து பற்றாக்குறை படிப்படியாகக் குறைவடைந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்காலத்தில் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்மூலம் சுங்கம் எதிர்பார்த்த வருமான இலக்கை அடைய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கைத்தொழில், வீட்டு பாவனை மின்சார உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கான இறக்குமதித் தடைகளைத் தளர்த்துமாறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்படி, இது தொடர்பான கட்டுப்பாடுகள் விரைவில் தளர்த்தப்படும் என்றும், மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வுத் திணைக்களம் வழங்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
க.பொ.த உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை தாமதப்படுத்தி, மாணவர்களின் விரக்தியை பயன்படுத்தி தீவிரவாத அரசியல் சித்தாந்தங்களை ஊக்குவிக்க சில அரசியல் குழுக்கள் முயற்சிப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். புலனாய்வு அறிக்கையொன்றினூடாக இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். உயர் தர விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை நிறைவுசெய்ய 19,000 ஆசிரியர்கள் தேவைப்படும் நிலையில், உயர்தர நடைமுறைப் பரீட்சைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களை மதிப்பீட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஆசிரியர் சங்கங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்க சம்மேளனம் (FUTA) விரைவில் இந்த வேலைத்திட்டத்தில் ஈடுபடும் என்று நம்புவதாகவும் அமைச்சர் கூறினார்.
கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அனுராதபுரம், குருணாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களும் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் தொழில் புரிவோர் வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் இருக்கவும், ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய வெளிப்புற தொழிலாளர்கள் கடினமான வேலைகளை குறைத்து, நிழல் உள்ள இடங்களில் வேலை செய்யவும், நீரை அதிகமாக பருகவும், திரவ உணவுகளை அதிகமாக எடுக்கவும் வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை, மாத்தளை, புத்தளம், கம்பஹா, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை, அம்பாறை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய இடங்களும் எச்சரிக்கை பிரதேசங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சூரியனின் கதிரியக்க வீச்சு (Radiation) காரணமாகவே இலங்கையில் வெப்ப அலையுடனான வானிலை நிலவுவதாக என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூரியனில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சும், வளிமண்டலத்தில் குறைந்த மேகங்கள் மற்றும் குறைந்தளவான காற்றும் இலங்கையின் தற்போதைய வானிலைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வானிலையானது மே மாத நடுப்பகுதி வரையில் தொடரும் எனவும் எதிர்வுகூரப்பட்டுள்ளது. இந்த வானிலையானது வருடத்தின் இந்த காலப்பகுதிக்கு பொதுவானது எனவும், ஆனால் இலங்கையின் நிலைமைக்கும், மும்பையில் 11 பேர் உயிரிழப்புக்கு காரணாக அமைந்த அனல் காற்றுக்கும் தொடர்பில்லை எனவும், திணைக்களத்தின் பேச்சாளர் தெளிவுபடுத்தியுள்ளார். எவ்வாறாயினும், இந்த வெயிலின் போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பாக இருப்பது அவசியம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.