நாட்டில் கடுமையான வெப்ப வானிலை நிலவுகின்றமையால், வாகனங்களில் உள்ள எரிபொருள் தாங்கிகளில் வெடிப்புகள் ஏற்படுவதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. ஆனால் இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. வாகனங்களில் எரிபொருள் தாங்கிகள் முழுமையாக நிரப்பப்படுவதால் இவ்வாறான வெடிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே பாதி அளவுக்கு மாத்திரமே அதனை நிரப்புமாறும் தெரிவிக்கும் பதிவு ஒன்று சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஆனால் இதில் உண்மையில்லை என்று தெரிவித்துள்ள லங்கா ஐ.ஓ.சி நிறுவனம், மக்கள் இதுகுறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது. வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், வாகனங்களது எரிபொருள் தாங்கிகளை பல்வேறு புறச்சூழல்களுக்கு ஏற்புடைய வகையிலேயே தயாரிப்பதாகத் தெரிவித்த அவர், அதிக வெய்யில் காரணமாக வெடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Author: admin
அழிந்து வரும் 100,000 செங்குரங்குகளை ஆய்வு நோக்கங்களுக்காக சீன தனியார் நிறுவனமொன்றுக்கு ஏற்றுமதி செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்து கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. சீனாவில் உள்ள அதிகாரிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ள சீன தூதரகம் சீனாவின் தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம் இதனை நிராகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சீனா அழிந்துவரும் வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள சீன தூதரகம் 1988 இல் சீனா தனது வனவிலங்கு சட்டத்தினை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்பிற்கான சீனாவின் அர்ப்பணிப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட அமலாக்கத்தின் அடிப்படையில் உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக அதன் அந்தஸ்தையும் தூதரகம் அந்த பதிவில் எடுத்துரைத்துள்ளது. இலங்கையின் விவசாய அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளரும் இந்த விடயத்தை தெளிவுபடுத்திய பின்னர் சீன தூதரகத்தின் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
நேற்றிரவு முதல் அக்குரணை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 118 அவசர இலக்கத்திற்கு நேற்று இரவு அக்குரணையில் சில நாசவேலைகள் இடம்பெறவுள்ளதாக தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அதன்படி, உடனடியாக செயற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி குறித்த பகுதிக்கு விசேட பொலிஸ் குழுக்களை அனுப்பி வைத்துள்ளனர். தேவைப்பட்டால் அப்பகுதிக்கு மேலதிக இராணுவக் குழுக்களை அனுப்புவதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அனுப்பப்பட்டுள்ள பொலிஸ் குழுக்கள் மறு அறிவித்தல் வரை அப்பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் தங்க விலையானது இன்றைய தினம் நிலையானதாக உள்ளது. கொழும்பு, செட்டியார் தெருவில் இன்றைய நாளுக்கான தங்க விலைகளின் படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் – 177,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. 22 கரட் தங்கம் ஒரு பவுண் – 162,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.
2023ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று (20) நிகழவுள்ளது. இந்த சூரிய கிரகணமானது காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 மணி வரை நிகழும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மே 5ஆம் தேதி நிகழும் என்பதுடன், இது சூரிய கிரகணம் நிகழ்ந்து 15 நாட்களுக்குப் பின்னர் ஏற்படவுள்ளது. மே 5ஆம் திகதி இரவு 8.45 மணிக்கு ஆரம்பமாகும் சந்திரகிரகணம் அதிகாலை 1 மணிக்கு முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இந்த ஆண்டின் 2ஆவது சூரிய கிரகணம் ஒக்டோபர் 14ஆம் திகதி நிகழும் அதேவேளை, மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் புலப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஆண்டின் 4ஆவதும் கடைசியுமான சந்திர கிரகணம் ஒக்டோபர் 29ஆம் அதிகாலை 1.06 மணிக்கு ஆரம்பமாகி 2.22 மணிக்கு முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ, மேல், மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். காற்று : காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடல் நிலை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன்…
அடுத்த வாரத்திற்குள் ஆசிரியர்கள் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட இணக்கப்பாட்டுக்கு வர மறுத்தால் அவசரச் சட்டத்தின் கீழ் கல்வி அத்தியாவசிய சேவையாக மாற்றப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பிள்ளைகளின் கல்வியை பணயமாக எடுத்துக்கொள்ளமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளனர். இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு ஏப்ரல் 11ஆம் திகதி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வாக்குப்பதிவுக்காக திறைசேரியில் இருந்து பணம் விடுவிக்கப்படாமைக்கு தீர்வு காணப்படாததால், மேற்கண்ட திகதியில் வாக்குப்பதிவை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மீண்டும் ஒருமுறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் திணைக்களத்தில் பன்னிரெண்டு வருடங்களை பூர்த்தி செய்த கான்ஸ்டபிள்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு இருபது வருடங்கள் கடந்த பின்னரும் சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை என பல்லேகல தும்பற சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது சிறை நிர்வாகம் கீழ்மட்ட அதிகாரிகளை பொருட்படுத்தாத நிலையை அடைந்துள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு உயர் அதிகாரிகள் தமது பிரச்சினைகளை அமைச்சரிடம் கூற முற்படுவதில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போதுள்ள கட்டுப்பாட்டு ஆணையரை உடனடியாக மாற்ற வேண்டும் என்பது அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தற்போதைய வெப்ப காலத்தில் நாட்டின் பல பகுதிகளில் தேங்காய் மற்றும் இளநீர் விலை சடுதியாக உயர்ந்துள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் இளநீர் ஒன்று 200 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, பெரிய தேங்காயொன்று 130 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகின்றது. மேலும் சிறிய அளவிலான தேங்காய் 100 முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.