நாவுல மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கிரலகொல்ல இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் எல்பிட்டிய பிரசேத்தைச் சேர்ந்த 39 வயதான ஒருவரென தெரிவந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 10 இராணுவ சிப்பாய்களில் ஒருவர் காணாமல் போயிருந்தமையினால் ஏனையோர் தேடுதல் பணிகளை முன்னெடுத்திருந்தனர். அதன்போது, நீர்த்தேக்கத்தின் அணைக்கு கீழே, 300 மீற்றர் ஆழத்தில் நீர் பாயும் பாலத்தின் அடியிலிருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Author: admin
கராச்சி மிருகக்காட்சிசாலையில் நூர் ஜெஹான் என்ற ஆப்பிரிக்க யானை இறந்ததைத் தொடர்ந்து, நல்லெண்ணத்தின் அடையாளமாக பாகிஸ்தானுக்கு இரண்டு யானைகளை வழங்குவதற்கு இலங்கை உறுதியளித்துள்ளதாக இரண்டு பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திடம் இரண்டு யானைகளுக்கு பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இலங்கை இரண்டு யானைகளை பாகிஸ்தானுக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது – ஒன்று கராச்சி மிருகக்காட்சிசாலைக்கும் மற்றைய யானை லாகூருக்கும் அனுப்படவுள்ளன.
புதுக்குடியிருப்பில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஆனந்தபுரம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக இராணுவத்தினர் வழங்கிய தகவலுக்கமைய புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்று, புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 7 பேரை கைது செய்துள்ளதுடன் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. கொக்குளாய் பகுதியினை சேர்ந்த 3 பேரும் ஜா எல, மேகமுவ, வெல்லம்பிட்டிய, களனி பகுதியினை சேர்ந்த நால்வர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்துள்ளதுடன், இவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்டதாக கருப்பபடும் இயந்திரம் ஒன்று, மண்வெட்டி, அலவாங்கு, இரண்டு மோட்டார் சைக்கிகள், கார் ஒன்று என்பன பொலிஸாரால் மீட்கப்பபட்டுள்ளதுடன், சான்று பொருட்களையும் சந்தேக நபர்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற வாசஸ் தலத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு 46,000 ரூபா தண்ணீர் கட்டணம் நிலுவையில் உள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி, அந்த சட்டமூலங்களுக்கு தீர்வு காண்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் ஊழியர்கள் ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனையை கோரியுள்ளனர். இதற்கு முன்பு இதே அதிகாரியைப் பயன்படுத்தியவர்கள் செலுத்தாத பில் கட்டணங்களால் இந்த பில் மிக அதிகமாகிவிட்டது. இதன் காரணமாகவே, கட்டணங்களைத் தீர்ப்பதற்கு அறிவுறுத்தல்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல் ஹேண்ட்லிங் கட்டணங்கள்) செலுத்த வேண்டும் என அத்தியாவசிய உணவுகள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் இந்த கட்டணங்கள் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளிடம் இருந்து வசூலிக்கப்படுவதாகவும், ஆனால் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் இந்த முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார். இந்த வரிகளை நீக்குவதால் இறக்குமதியாளர்களுக்கு மட்டுமின்றி ஏற்றுமதியும் பாதிக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சம்மேளன அதிகாரிகள் ஏப்ரல் 19 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், கடைசி நேரத்தில் அது இரத்துச் செய்யப்பட்டதாக நிஹால் செனவிரத்ன கூறினார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியை…
இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவகங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு பாரிய கேள்வி உள்ளதாக அதன் தலைவர் ஆசிர வலிசுந்தர தெரிவித்துள்ளார். தேவைக்கு ஏற்ற வகையில் விநியோகத்தை வழங்க முடியும் என்றாலும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமை பிரச்சினையாக உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
24CT : Rs 176,000 22CT : Rs 161,300 21CT : Rs 154,000 18CT : Rs 132,000
கப்பலுக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து ஒருவர் 250 மில்லியன் டொலர்களுக்கு மேல் இலஞ்சம் பெற்றதாலேயே இலங்கை அரசுக்கு வழங்க வேண்டிய நட்டஈட்டை பெற்றுக் கொள்ள விடாமல் தடுப்பதாக தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார். அதன்படி, அந்த பாரிய குற்றத்தை செய்தவரின் பெயரை மறைத்துக் கூறாமல் நேரடியாக நாட்டின் முன் சொல்லுங்கள் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு .விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார். தேசிய சுதந்திர முன்னணியின் புறக்கோட்டை தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு சவால் விடுத்துள்ளார். “.. முந்தைய நாள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பகிரங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார். கடல் மாசுபாட்டிற்கு எதிராக நட்டஈடு வழக்குத் தாக்கல் செய்யாத ஒப்பந்தத்துடன் ஒருவர் 250 மில்லியன் டாலர்களுக்கு மேல் லஞ்சம் வாங்கியதாகக் கூறப்பட்டது. “எக்ஸ்பிரஸ் பேர்ல்” என்ற கப்பலை அவர் விசாரித்து வருகிறார். அந்தத் தொகை டெபாசிட்…
தீவகத்தில் முறையற்ற வகையில் பரம்பரை காணியை மோசடியான முறையில் தனது பெயருக்கு உரிமம் மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மோசடிக்கு துணை நின்றனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 12 சகோதரங்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட்டவேண்டிய ஆதனத்தை ஒரு சகோதரர் மட்டும் முறையற்ற வகையில் தனது பெயருக்கு மாற்றிய குற்றச்சாட்டில் நெடுந்தீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நேற்று (23) கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் கூறினர். நெடுந்தீவு உள்ள ஆதனம் 12 சகோதரர்கள் இடையே பிரிவிடல் செய்யப்பட வேண்டும். எனினும் அந்த ஆதனத்தை சகோதரர் ஒருவர் சட்டத்துக்குப் புறம்பாக தனது பெயருக்கு மாற்றியுள்ளார். வெளிநாட்டில் வசிக்கும் மற்றைய சகோதரர் ஒருவர் பங்கு ஆதனம் சட்டத்துக்கு புறம்பாக மோசடியாக விற்பனை செய்துள்ளமையை அறிந்து யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் சிறப்பு குற்ற…