நவீன தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வினைத்திறனான சேவையை முன்னெடுப்பதற்காகப் பொலிஸ் திணைக்களத்தில் கொண்டுவர உத்தேசித்துள்ள வேலைத்திட்டத்தை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண பொலிஸ் திணைக்களத்துக்கு அறிவித்தார். 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராய்வதற்காக பொலிஸ் திணைக்களம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டிருந்தபோதே அக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்,பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலரும் இக்குழு முன்னிலையில் ஆஜராகியிருந்தனர். இலங்கை பொலிஸில் பணியாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. 2419 பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு வெற்றிடம் இருப்பதாகவும், 2023 ஆம் ஆண்டு இவ்வெற்றிடங்களை நிரப்புவதற்கு உத்தேசித்திருந்தபோதிலும் தற்போதைய பொருளாதார நிலைமை காரணமாக…
Author: admin
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை, அதன் தற்போதைய வடிவில் பாராளுமன்றில் முன்வைக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒரு தேசிய கலந்துரையாடல் முடிவடைந்து, தெளிவான திட்டத்துடன் அதன் பரிந்துரைகள் வெளியிடப்படும் வரை காத்திருக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பில் மேலும் ஆராய வேண்டியது அவசியமானது என மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது. இந்த சமாதானம் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் 30 வருடங்களுக்கும் மேலாக நீடித்த, பயங்கரமான உள்நாட்டுப் போரின் அழிவுகளின் கீழ் நேரடியாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு சமூகங்களுக்கு மாத்திரமல்ல என்றும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது. 70 மற்றும் 80 களில் தெற்கில் ஏற்பட்ட கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கும் இந்த செயல்முறை அவசியம். சமாதானம் மற்றும் நல்லிணக்க செயல்முறையை சமமாக எதிர்கொள்ளும்…
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை இன்று (28) வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். இதேவேளை, கிழக்கு மாகாணம் மற்றும் தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக் கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, இடியுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் 12 பாடங்களுக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்கான ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை மீண்டும் கோருவதற்கு பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பௌதீகவியல், இரசாயனவியல், கணிதம், விவசாயம், உயிரியல், இணைந்த கணிதம், தொடர்பாடல் மற்றும் ஊடகக் கற்கை, வணிகக் கற்கைகள், பொறியியல் தொழில்நுட்பம், உயிரியல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. அதன்படி, இதுவரை விடைத்தாள் மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்காத ஆசிரியர்களும், 2022 டிசம்பர் 31இற்கு பிறகு ஓய்வு பெற்ற ஆசிரியர்களும் இன்று முதல் இணையவழி முறையில் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் இலங்கைக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் தீர்வையற்ற வரி (Duty free) சலுகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார். சுற்றறிக்கையின்படி, வங்கி முறையின் ஊடாக சட்டப்பூர்வமாக இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அதிகரிக்கப்பட்ட தீர்வையற்ற வரி நிவாரணம் பெற தகுதியுடையவர்கள். இதற்காக கடந்த ஆண்டு மே மாதம் முதல் திகதியில் இருந்து வங்கி முறை மூலம் அனுப்பப்பட்ட பணத்தின் அளவு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஐந்து வகைகளின் கீழ் இந்த நிவாரணம் வழங்கப்படும். 2400 – 4799 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையை அனுப்பிய தொழிலாளர்கள் 600 டொலர் நிவாரணம் பெறலாம். 4800 – 7199 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்ட தொகையை அனுப்பிய தொழிலாளர்கள் 960 டொலர் நிவாரணம்…
இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் இன்று (27) நிதி அமைச்சில் வைத்து கையளிக்கப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் 73 ஆவது வருடாந்த அறிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ள இது 4 பிரதான பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன்படி, ஆண்டின் பொருளாதார விவகாரங்களின் நிலையை விளக்குகின்ற 8 அத்தியாயங்களையும், 30 புள்ளிவிபர அத்தியாயங்களையும் முதல் பகுதியில் உள்ளடங்குகின்றது. இரண்டாவது பகுதியானது, அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கொள்கை நடவடிக்கைகள் தொடர்பான வர்த்தமானி மற்றும் சுற்றறிக்கைகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த அறிக்கையின் மூன்றாம் பகுதி, இலங்கை மத்திய வங்கியின் திணைக்களங்கள் மற்றும் அவற்றுக்குரிய செயற்பாடுகளை விளக்குவதுடன், நான்காவது பகுதியில் அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி தொடர்பான வங்கிக் கட்டமைப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் கட்டளைகளின்…
கோழிப்பண்ணை மற்றும் முட்டை கைத்தொழில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலம் தொழில்துறையை ஒழுங்கான முறையில் பராமரித்து, நுகர்வோருக்கு நியாயமான விலையில் பொருட்களை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கோழிப்பண்ணை தொழில்துறை அதிகாரிகளுடனான சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். இந்த சந்திப்பில் சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவும் கலந்து கொண்டிருந்தாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஐக்கிய அரபு இராச்சியம் – இலங்கை வர்த்தக கண்காட்சி தொடர்பான ஆரம்ப கலந்துரையாடல் நேற்று (26) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இடம்பெற்றது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள RAK கண்காட்சி மையத்தில் 2023 ஒக்டோபர் 20 முதல் 29 வரை வர்த்தக கண்காட்சி நடைபெறவுள்ளது. “தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான பொருளாதார உறவுகளை வலுப்படுத்துதல்” எனும் தொனிப்பொருளில் இந்த வர்த்தக கண்காட்சியானது அரபு இராச்சியத்திற்கான இலங்கை வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனமும் இலங்கை சுற்றுலாத்துறையும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியம், வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு பொருளாதார சூழல்களில் இலங்கை வர்த்தக நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகளை ஆராயவும், பல்தரப்பு நிறுவனங்களுக்கு இடையிலான வணிக உறவுகளை வலுப்படுத்தவும் இந்த…
நீர்கொழும்பில் பேஸ்புக் வழியாக 42 வயது பெண் ஒருவரை போலியாக காதலித்து ரூ. 4.8 மில்லியன் மோசடி செய்த, 38 வயதான திருமணமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் நீர்கொழும்பு பிடிபன வீதியை வசிப்பிடமாகக் கொண்டவராவார். நீர்கொழும்பு பிரிவு மோசடி விசாரணைப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அமெரிக்காவில் வாழும் இலங்கை கோடீஸ்வரர் போல் நடித்து சந்தேகநபர் பெண்ணை ஏமாற்றியுள்ளமை தெரியவந்துள்ளது. சந்தேகநபர் போலியான முகநூல் பக்கத்தையும் உருவாக்கி அதனூடாக பெண்ணுடன் காதல் உறவை வளர்த்து வந்துள்ளார். சந்தேகநபர் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கை கோடீஸ்வரர் போல் தன்னை காட்டிக்கொண்டு பேஸ்புக் ஊடாக இந்த உறவை பேணி வந்துள்ளார். விரைவில் இலங்கைக்கு வந்து திருமணம் செய்து அமெரிக்கா அழைத்துச் செல்வதாக முகநூல் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் மூலம் சந்தேகநபர் தெரிவித்துள்ளார். பெண்ணுடன் சிறிது காலம் டேட்டிங் செய்த பிறகு, சந்தேக நபர் பெண்ணை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, தனது…
இந்தியாவில் இருந்து ஒரு மில்லியன் முட்டைகளை ஏற்றிய மற்றுமொரு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்த கப்பல் நேற்று இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ஆய்வக சோதனைகளுக்காக கையிருப்பில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் இன்று கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அனுப்பப்படும் என அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதவேளை தேவையான அனுமதியின்றி சுமார் இரண்டு மில்லியன் முட்டைகள் இன்னும் துறைமுகத்தில் உள்ளன. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களத்தினால் அனுமதி வழங்கப்பட்டால், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை பொதுமக்கள் கொள்வனவு செய்யக்கூடிய வகையில், அவற்றை வெளிச் சந்தைக்கு வெளியிடத் தயாராக இருப்பதாகவும் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் இதுவரை ஐந்து மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளை இறக்குமதி செய்துள்ளது.