அட்டர்னி ஜெனரல் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு இடையே நடந்த விவாதத்தில், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து இழப்பீடு பெறுவது தொடர்பாக சிங்கப்பூரில் வழக்கு தொடர உடன்பாடு இல்லை என சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பு குழுவில் அறிவிக்கப்பட்டது. மேற்பார்வைக் குழுவின் தலைவர் அஜித் மான்னப்பெரும தலைமையில் கூடிய போது இந்த உண்மைகள் வெளியாகியுள்ளன. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து போன்ற அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு செயற்படுவது என்பதைக் காட்டும் தெளிவான மற்றும் குறிப்பிட்ட பொறிமுறையை விரைவாக தயாரிக்குமாறு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு தலைவர் தெரிவித்தார். இவ்வாறான அனர்த்தத்தை எதிர்கொள்வதற்கான பிரதான பொறுப்பானது கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையாக இருப்பதால், உடனடியாகப் பதிலளிப்பதற்குத் தேவையான சட்டப் பலத்தைப் பெறுவதற்கு கடல் மாசு தடுப்புச் சட்டத்தில் திருத்தம் விரைவில் மேற்கொள்ளப்பட வேண்டுமென தலைவர் அறிவுறுத்தினார். இழப்பீடு பெற்று, ஒரு மாதத்தில் அதன் முன்னேற்றம் குறித்து குழுவிடம் தெரிவிக்க வேண்டும். மேலும், இவ்வாறான அனர்த்தம்…
Author: admin
கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக் சுட்டுக் கொன்றது குற்றம் என வெலிசறை நீதிவான் துசித தம்மிக்க உடவவிதான தீர்மானித்தார். குற்றத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும் இரகசிய பொலிஸாருக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்கள் சுடப்பட்ட விதத்தைப் பார்க்கும்போது, கலவரத்தை அடக்குவதற்காகவோ, மனிதாபிமான நடவடிக்கைக்காகவோ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் இறந்தவர்கள் சுடப்பட்ட விதத்தின் அடிப்படையில், சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படுவதாகவும் நீதிபதி தீர்ப்பளித்தார். மஹர சிறைச்சாலையில் கிளர்ச்சியை அடக்குவதற்காக முழங்காலுக்குக் கீழே துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்த போதிலும் இறந்த கைதிகள் எவரும் முழங்காலுக்குக் கீழே சுடப்பட்டதற்கான அடையாளங்கள் இல்லை என நீதிவான் தீர்ப்பளித்தார்.
நாட்டில் நேற்றையதினம் (26 ) 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளை நீண்ட நாட்களின் பின்னர் கடந்தவாரம் யாழில் நபர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
24CT : Rs 177,000 22CT : Rs 162,300 21CT : Rs 154,900 18CT : Rs 132,800
கடந்த வருடத்தை விட இந்த வருடம் கடந்த சில மாதங்களில் காட்டு யானைகளின் மரணம் அதிகரித்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் மனித செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 143 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த யானைகளின் மரணங்களில் 37 மரணங்கள் துப்பாக்கிச் சூடு காரணமாகவும், 27 மரணங்கள் மின்சாரம் தாக்கியதாலும், 06 மரணங்கள் விலங்கு வேட்டைக்காக வைக்கபபட்டிருந்த வெடிபொருட்களாலும் ஏற்பட்டுள்ளன. காட்டு யானைகளின் தாக்குதலினால் இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் 36 பேர் உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
641101117-2329-17-T அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான திருத்தப்பட்ட கட்டணங்கள் போக்குவரத்து அமைச்சினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணத்தை 25 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான வர்த்தமானி அறிவிப்பினை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன வெளியிட்டுள்ளார். புதிய கட்டணங்கள் உடனடியாக அமலுக்கு வரும் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் அனைத்து வாகன சாரதிகளுக்கும் இது பொருந்தும். இந்த கட்டண உயர்வு, அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டவும், அதிவேக நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. # புதிய கட்டணங்கள் சில • கொட்டவை – கட்டுநாயக்க : 400 ரூபா • கட்டுநாயக்க – ஹம்பாந்தோட்டை : 1300 ரூபா • கொட்டாவ – காலி : 500 ரூபா
நாட்டில் கொவிட்-19 பரவலானது அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த சில நாட்களில் கொவிட்-19 தொற்றினால் பலர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்டை நாடான இந்தியாவில் அண்மைய நாட்களில் கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் எழுந்துள்ளது. எனவே கொவிட்-19 தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது மக்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். இல்லையெனில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து சமூகத்தை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு விசேட மே தின கூட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய தொழிற்சங்க பிரதிநிதிகள், வரி விதிப்பு உள்ளிட்ட தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் இன்னும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகளை வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அரச ஊழியர்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கம் இதுவரை நேரடியாக தலையிடவில்லை எனவும் இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் நிஹால் வீரரத்ன மேலும் தெரிவித்தார். இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ரஞ்சன் சேனாநாயக்கவும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 16 அதிர்வுகள் பதிவாகின. எனினும் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் எம்.எம்.ஜே.பி அஜித் பிரேம தெரிவித்தார். அத்துடன், 2021இல் 18 நில அதிர்வுகளும், 2022ம் ஆண்டில் ஐந்து அதிர்வுகளும் பதிவாகியுள்ளன. ‘இந்தோ-அவுஸ்திரேலிய தட்டுக்கு நடுவில் இலங்கை உள்ளது. எனவே நில அதிர்வுகள் ஏற்பட்டு தட்டின் இரு மூலைகளிலும் உள்ள நாடுகளை பாதிக்கிறது. எனவே இலங்கையில் அதிக அளவிலான நில அதிர்வுகள் பதிவாக வாய்ப்பில்லை என்றும் அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையில் மிகத் தெளிவான பதிவுகள் 2012 இற்கு பின்னரே உணரப்பட்டதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் பதில் பணிப்பாளர் எம்.எம்.ஜே.பி அஜித் பிரேம குறிப்பிட்டுள்ளார்.
மே மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பிப்பதனால், அதன் பின்னர் இந் நாட்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை படிப்படியாக குறைந்துவிடும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பூகோள காலநிலை மாற்றங்களினால் இந்த நிலைமைகள் ஏற்படுகின்றன. தற்போது வளிமண்டலத்தில் நீராவியின் அளவு அதிகமாக இருப்பதால் வளிமண்டலத்தில் வெப்ப வெளியீடு தடைப்பட்டுள்ளது. இதனால் வெப்பமான சூழ்நிலை நிலவுகிறது. மேலும், மழை பொழிவதைத் தொடர்ந்து, நீராவி படிப்படியாக குறைவடையும். அதனூடாக வெப்ப நிலையும் படிப்படியாக குறைந்துவிடும். இந்நிலைமை குறைவடையும் வரை இளநிற ஆடைகளை அணியுமாறும், கடினமான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்றும், அதிகளவு தண்ணீர் அருந்துமாறும் அவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அத்துடன், காலை…