5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் எடை குறைந்த குழந்தைகளின் சதவீதத்தைக் கருத்தில் கொண்டு தெற்காசிய பிராந்தியத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 2022ஆம் ஆண்டு தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரியவந்துள்ளதாக அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களின் போசாக்கு நிலையை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் சீர்குலைந்துள்ளதாக பாராளுமன்றத்தில் தெரியவந்துள்ளதாக கலாநிதி சமல் சஞ்சீவ மேலும் தெரிவித்துள்ளார்.
Author: admin
2015ஆம் ஆண்டு முதல் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் தெரியவந்துள்ளது. ஆணைக்குழுவின் அதிகாரிகள் சமீபத்தில் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டபோது இது தெரியவந்தது. கடந்த 2015ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட வருடாந்த அறிக்கையின் பின்னர் கோப் குழுவானது வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த போதிலும், இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என குழுவின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார விசனம் தெரிவித்துள்ளார். காணி ஒதுக்கீட்டில் முறையான வரிசையை ஆணைக்குழு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கடந்த கூட்டத்தில் குழு பரிந்துரைத்த போதிலும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்பது இங்கு அவதானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டை எரித்த சம்பவத்தில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்காவை குற்றப்புலனாய்வு பிரிவினர் சந்தேகநபராக பெயரிட்டுள்ளனர். இதற்கமைய, ஜெ. ஸ்ரீரங்காவை எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதேவேளை, கடந்த 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் பேரில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ. ஸ்ரீ ரங்கா தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தோலில் பயன்படுத்தப்படும் அனைத்து முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் பொடி லோஷன்களில் அதிகபட்ச வரம்பைத் தாண்டி கன உலோகங்கள் இருப்பதும் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, எந்தவொரு பொறுப்பான தகவலும் மற்றும் தேவையான சட்டப் பணிகளும் குறிப்பிடப்படாமல், சந்தைகளில் பொடி லோஷன் பொதிகளில் (பேக்கேஜிங்கில்) முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கை இது தொடர்பாக செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறாக சட்டவிரோத முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் திரவங்களை விற்பனை செய்த மேலும் பல கடைகளுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், எத்தனை சோதனைகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டாலும், வெள்ளையாக்கும் முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் திரவங்களுக்கு அதிக தேவை இருப்பதால், அத்தகைய தயாரிப்புகளை கட்டுப்படுத்துவதில் தடையாக இருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரி்க்கை எனவே,…
வெசாக் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் அன்னதானங்களுக்கான பதிவுகள் ஏற்கனவே அந்தந்த பகுதியில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. அந்த வகையான அன்னதானம் (தன்செல்) எத்தனை நாட்கள் நடத்தப்படும், நடைபெறும் இடங்கள், சுற்றுச்சூழலின் தன்மை போன்றவற்றைக் குறிப்பிடும் கடிதத்தை வழங்கினால் அப்பகுதியில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் பதிவினை பெற்றுக்கொள்ள முடியும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்களில் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் சமைத்த உணவுகள் என்பனவற்றை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் அன்னதானம் (தன்செல்) நடைபெறுவதற்கு முன்னர் இடம்பெறும் என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
கொத்தடுவ பகுதியில் உள்ள களஞ்சியசாலையொன்றில் பாவனைக்கு பொருத்தமற்ற அரிசி தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்து இலட்சத்து 8000 கிலோ அரிசி கண்டெடுக்கப்பட்டதாக கொத்தடுவ நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் அஜித் விதானகே தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் களஞ்சியசாலையில் உள்ள அரிசி மாதிரிகள் இன்று (29) எடுக்கப்பட உள்ளதாக நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் திரு.அஜித் விதானகே தெரிவித்தார். அரிசி களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அஜித் விதானகே தெரிவித்தார்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்கள் சுதந்திரமாக பயணிப்பதற்கு தேவையான சூழலை தயார்படுத்துமாறு, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முச்சக்கரவண்டி சாரதிகளின் பல்வேறு கெடுபிடிகளினால் பாதிக்கப்படுவதாகவும், அவர்களது சொத்துக்களை சிலர் அபகரித்து வருவதாகவும் சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் வழங்கிய அறிவித்தலின் அடிப்படையில் சாகல ரத்நாயக்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். கடந்த வாரம், பாரிய மற்றும் சிறு சுற்றுலா ஹோட்டல் உரிமையாளர்கள் குழுவொன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்கவை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து முறையிட்டனர். நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்றாலும் அவதானமாக இருப்பதே பொருத்தமானது என சாகல ரத்நாயக்க இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்கும் கேகாலை மாவட்டத்தில் கேகாலை பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான இலவச அரிசி வழங்கும் இரண்டாம் கட்ட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்ட வேலைத்திட்டத்துடன் இணைந்து இது செயல்படுத்தப்பட்டதுடன், யாழ்ப்பாணத்தின் தெல்லிப்பளை மற்றும் வேலணை பிரதேசங்களை மையமாக வைத்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கான அரிசி விநியோகம் சாகல ரத்நாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,ஜனாதிபதி ரணில்…
குருநாகல் ஹெட்டிபொல – கிராதலாவ பிரதேசத்தில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 50,000 முட்டைகளை நுகர்வோர் அதிகாரசபை கண்டுபிடித்துள்ளது. இன்று (29) முட்டை கொள்வனவு செய்யும் முகவர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் இந்தச் சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக அதிகார சபையின் அவசரச் சோதனைப் பிரிவின் சிரேஷ்ட விசாரணை அதிகாரி தெரிவித்தார். கடையின் உரிமையாளரான பெண்ணுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அவர் எதிர்வரும் திங்கட்கிழமை ஹெட்டிபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.