கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சாத்திகள் வினாத்தாள்களுக்கு விடையளிக்கும் நேரத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது அத்துடன் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு பிரவேசிக்கும் போதும் மற்றும் வெளியேறும் போதும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை பாடசாலை பரீட்சார்த்தி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பின் அதிபரூடாக பரீட்சை மத்திய நிலையத்துக்கு அறிவிக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தனி அறையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Author: admin
அஜித் தமிழ் சினிமாவில் பலராலும் கொண்டாடப்படும் ஹீரோ. இவர் நடிப்பில் கடைசியாக வலிமை படம் திரைக்கு வந்தது. இப்படம் விமர்சன ரீதியாக சரியில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றியை பெற்றது. இந்நிலையில் அஜித் அடுத்து மீண்டும் வினோத் இயக்கத்தில் தான் நடித்து வருகிறார். இப்படம் வங்கி கொள்ளையை மையமாக கொண்டதாம். இதில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்காக அஜித் புதிய ஷேர் ஸ்டைலுக்கு மாறியுள்ளார், அந்த புகைப்படம் தான் தற்போது செம்ம வைரல்..இதோ.. (Cine Ulagam)
எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. தேசிய சுகாதார சேவைகளை (NHS) தனியார்மயமாக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளது. தமது கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் சாதகமான பதிலை வழங்கத் தவறினால், மே 25 ஆம் திகதி சுகாதாரத் துறையின் ஏனைய ஊழியர்களுடன் இணைந்து தமது தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள போதிலும் மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை எவ்வித இடையூறும் இன்றி வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடத்துவது தொடர்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று (18) அரசாங்கத் தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆணையாளர் இதனைத் தெரிவித்தார். இதற்காக மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது. மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் சாதாரண புகையிரதங்கள் சேவைகள் ஈடுபடும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, மஹரகம வைத்தியசாலை, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் ஏனைய பிரதான வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படும் அனைத்து அவசர சத்திர சிகிச்சைகளும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
விஜய் தொலைக்காட்சியில் முன்பு எல்லாம் விளையாட்டு, பாடல், நடன நிகழ்ச்சிகள் தான் அதிகம் ஒளிபரப்பாகும். இப்போது அப்படிபட்ட நிகழ்ச்சிக்கு நடுவில் நிறைய சீரியல்களும் ஒளிபரப்பாகின்றன. மதியம் தொடங்கப்படும் சீரியல்கள் இரவு வரை தொடர்ந்து ஒளிபரப்பாகிறது. ஒவ்வொரு தொடருக்கு ரசிகர்கள் பெரிய ஆதரவு கொடுத்து வருகிறார்கள். தற்போது விஜய்யில் ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது. முடிவுக்கு வரும் தொடர் தற்போது என்ன தகவல் என்றால் விஜய்யில் 2வது பாகமாக ஓடிக் கொண்டிருந்த நாம் இருவர் நமக்கு இருவர் 2ம் பாகம் முடிவுக்கு வர இருக்கிறதாம். சரண்யாவின் திருமணம் முடிந்ததும் தொடர் முடிவை எடடிவிடும் என்கின்றனர். (Cineulagam)
செவ்வாய்க்கிழமை (17) உலக வங்கியிடமிருந்து இலங்கைக்கு 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதன்கிழமை (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். “இந்த 160 மில்லியன் அமெரிக்க டாலர்களை எரிபொருள் இறக்குமதிக்காகப் பயன்படுத்த முடியாது, ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவர்களுடன் விவாதிப்போம்” என்று கூறிய பிரதமர், ஆசிய வளர்ச்சி வங்கியும் இதேபோன்ற தொகையை வழங்க உள்ளது என்றார். புதன் கிழமை (18) இலங்கை கடுமையான இயல்புநிலைக்கு செல்லும் என்று சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார், அதாவது இலங்கை வரலாற்றில் முதன்முறையாக 30 ஆம் திகதி கடன்களை செலுத்த முடியாது. தீர்வுக்கான நாள் அவகாசம் காலாவதியாகிவிட்டது. இதற்குப் பதிலளித்த பிரதமர், கடன் தொடர்பான சில விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை அல்லது தவறாகவும் இல்லை என்றும், அடுத்த வாரத்திற்குள் கடன் தீர்வு குறித்த அறிக்கையை வழங்குவதாகக் கூறினார். “அது 1 பில்லியன் அமெரிக்க டாலர்…
இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் முதல் வாரத்தில் 65,000 மெட்ரிக் தொன் யூரியாவை இறக்குமதி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேதனைப் பசளைக்கு மேலதிகமாக நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனைத்தவிர, 80,000 மெட்ரிக் தொன் சேதனைப் பசளையும் செய்கை நிலங்களுக்காக விநியோகிக்கப்படவுள்ளது. 4 மில்லியன் லீட்டர் உயிரியல் திரவ உரம் மற்றும் 3 மில்லியன் லீட்டர் திரவ உரம் என்பன விவசாயிகளுக்கு விநியோகிக்கபட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் செலவினங்களை 50 சதவீதமாக குறைக்க பிரதமர் அலுவலகம் தீர்மானித்துள்ளது. இதன்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் அலுவலகத்தின் சேவைக்காக வேறு அரச நிறுவனங்களில் இணைக்கப்பட்டிருந்த 26 பணியாளர்கள் அவர்களது நிறுவனங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. இத்துடன் , ஏனைய அரச நிறுவனங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட 16 வாகனங்களும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் பிரதமர் அலுவலகத்தின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும், செலவுகளைக் குறைப்பதற்கும் மிகக்குறைந்தளவிலான பணியாளர்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட வளங்களை வழங்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பணிப்புரை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பது மட்டுப்படுத்தப்பட்டால் அதற்கேற்றவாறு சம்பளமும் குறைக்கப்படுமென பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி சிங்கள இணையத்தளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார். தற்போது அரச உத்தியோகத்தர்களை கடமைக்கு அழைப்பதை கட்டுப்படுத்துமாறு முன்மொழிபவர்கள் அவ்வாறான சம்பளக் குறைப்புக்கு இணங்கினால் சுற்றறிக்கை ஒன்றை வெளியிடத் தயார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட செலவில் வேலைக்கு வருபவர்களுக்கும், வீட்டில் இருந்தே செலவு இல்லாமல் வேலை செய்பவர்களுக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்குவது அநியாயம் என்றும் செயலாளர் கூறிப்பிட்டார். அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கான அதிகாரம் மற்றும் அருகில் உள்ள சேவை நிலையமொன்றிற்கு கடமைக்குச் செல்வதற்கு அனுமதிப்பதற்கான அதிகாரம் என்பவற்றை நிறுவனத் தலைவருக்கு வழங்குமாறு அத்தியவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலாகவே செயலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.