களனி பல்கலைக்கழகத்தின் கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம் 12 மாதங்களாகப் பரீட்சைக்கான பெறுபேறுகளை வழங்கவில்லையென்றும், இதனால் மாணவர்கள் கடுமையான சிரமங்களுக்கு முகங்கொடுத்திருப்பதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார். இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு அமைச்சர் (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். உயர்கல்வி தொடர்பில் காணப்படும் அக்கறைகள் மற்றும் இதனை விஸ்தரிப்பதற்கான சாத்தியமான முன்மொழிவுகளை ஆராயும் நோக்கில் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் பொருத்தமான பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைக்கப்பட்டிருந்தது. கல்வி என்பது உரிமையாக இருக்க வேண்டுமே தவிர சலுகை அல்ல என்பதை வலியுறுத்திய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர், உயர்கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழும் அழுத்தங்களை தாங்க முடியாமல் பல மாணவர்கள் பல்கலைக்கழகத்தை…
Author: admin
இலங்கை மத்திய வங்கிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இன்று (28) பிற்பகல் இடம்பெற்ற பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணையில் ஜனாதிபதி அலுவலகம் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் செலவுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன. அதற்கமைய, செய்தி நிறுவனம் இந்த தகவல் கோரிக்கையை ஜனாதிபதி செயலகத்தின் தகவல் அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் அதிகாரி, ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியிருந்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை வெளியிட்ட தகவல் அதிகாரி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9,91,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதென குறிப்பிட்டுள்ளார். மின்சாரம், தண்ணீர் மற்றும் ஏனைய செலவுகளுக்கு 3,38,387.60 ரூபாய் செலவிட்டுள்ளதென…
2023 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வீடுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கைகளை கிராம உத்தியோகத்தர்கள் தற்போது முன்னெடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. படிவத்தை பூரணப்படுத்தி விரைவாக ஒப்படைக்குமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
திக்வெல்ல – வலஸ்கல-தெமடபிட்டிய சந்தியில், மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காயமடைந்த நபர் திக்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் மாத்தறை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் தெமட்டபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒருவரே காயமடைந்துள்ளார். தெமட்டபிட்டிய சந்தியில் வெற்றிலைக் கடை நடத்தி வந்த இவர், நேற்று (27) இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
சீரற்ற வானிலை காரணமாக பயணிகள் விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 143 பயணிகளுடன் இந்தியாவிலிருந்து வந்த பயணிகள் விமானம் மத்தல சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி பயனைப் பெறும் குடும்பங்களில் ஏறத்தாழ 33 வீதமான குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறுதற்குத் தகுதியற்ற குடும்பங்கள் என்றும், இதேயளவு குடும்பங்கள் சமுர்த்தியைப் பெறவேண்டியிருக்கின்றபோதும் அவற்றுக்கு சமுர்த்தி கிடைப்பதில்லையென்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) புலப்பட்டது. 2015 ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் நாடு முழுவதையும் உள்ளடக்கும் விதத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுடுப்பின் ஊடாக இது தெரியவந்திருப்பதாகவும், 449,979 குடும்பங்கள் சமுர்த்தி பயனாளிகளிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், இந்த சமுர்த்தி பயனாளிகளைத் தேர்வுசெய்யும்போது முறைகேடு இடம்பெற்றிருப்பது தெரியவந்திருப்பதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். சமுர்த்தி திணைக்களத்தின் 2019, 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) அதன் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகிவண்ண தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயங்கள்…
வெசாக் கூடுகள் உள்ளிட்ட வெசாக் அலங்காரங்களின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக வெசாக் அலங்காரப் பொருட்களின் விற்பனை பெருமளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக வெசாக் அலங்கார வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடந்த ஆண்டு 75 ரூபாய் முதல் 80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கடதாசி சுற்றாத சிறிய அளவிலான வெசாக் கூடு இந்த ஆண்டு 180 ரூபாவாகவும் கடதாசி சுற்றப்பட்ட வெசாக் கூடு 300 ரூபாயை விட அதிகமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 5 முதல் 10 ரூபாய் வரை விற்கப்பட்ட மெழுகுவர்த்தி 25 ரூபாவாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். வெசாக் அலங்காரங்கள் மற்றும் பொருட்களுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை கடந்த வருடங்களை விட இந்த வருடம் அதிகரித்துள்ளதாகவும், மூலப்பொருட்களின் பற்றாக்குறை பிரதானமாக அவற்றின் விலையை பாதித்துள்ளதாகவும் வெசாக் அலங்கார சந்தைப்படுத்தல் வர்த்தகர்களுக்கு பற்றாக்குறை இருப்பதாகவும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்த வருடத்தில் 52 அரச நிறுவனங்களின் மொத்த இழப்பு 1,100 பில்லியன் ரூபாவாக உயரும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் மற்றும் இலக்குகளை விரைவாக பூர்த்தி செய்ய வேண்டிய தேவை இருப்பதாக குறிப்பிட்டார். இவ்வருடத்தின் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டுப் பணம் பெறுவது 80 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இறக்குமதிச் செலவும் 37 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என்றார். இதேவேளை, வெளிநாட்டில் இருந்து தொழில் நிமித்தம் நாடு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேலதிக கட்டணச் சலுகைகளை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 600 அமெரிக்க டாலர்கள் முதல் 4,800 அமெரிக்க டாலர்கள் வரையிலான கூடுதல் பணிக்கொடைக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பு தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என பிரதமரும் பொது நிர்வாக அமைச்சருமான தினேஷ் குணவர்தன இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தொலைதூர பிரதேசங்களில் இருந்து அரச நிறுவனங்களுக்கு வருபவர்களுக்கு மீண்டும் அந்த இடங்களிலேயே கடமைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான விவாதத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார். தேர்தல் பிற்போடப்பட்டாலும் இரத்துச் செய்யப்படவில்லை என்ற நிபந்தனையின் கீழ் தேர்தல் சட்டத்தை மீறாத வகையில் செயற்படுவது முக்கியம் எனத் தெரிவித்த தினேஷ் குணவர்தன, அந்த உண்மையை தேர்தல்கள் ஆணைக்குழுவும் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்திருந்தார்.