கண்டி வைத்தியசாலைக்கு அருகாமையில் இளைஞன் ஒருவர் கடத்தப்பட்டு வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்கப்பட்டுள்ளார். ஹந்தானை பகுதியிலுள்ள பாழடைந்த இடமொன்றில் வைத்து இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். திறமையான குத்துச்சண்டை வீரர் என்ற விருதை பெற்ற இந்த இளைஞனை, கண்டி- வைத்தியசாலை லேனில் உள்ள அவரது வீட்டில் இருந்து, சிலரால் ஓட்டோவொன்றில் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் ஆபத்தான நிலையில் கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன்,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Author: admin
முதலில் உணவு பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகளைக் கண்டறிந்து, ஆலோசனைகளுக்கேற்ப இதற்கான தீர்வகளைக் கண்டு, படிப்படியாக முன்னேறுவோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தொடர்பான கூட்டு பொறிமுறைக் குழுவின் பிரதிநிதிகளை தெளிவுபடுத்துவதற்காக அலரி மாளிகையில் செவ்வாய்க்கிழமை (13) நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, விவசாயமும் பின்னடைவைக் கண்டுள்ளது. அதேபோன்று 2023இல் உலகளாவிய ரீதியில் உணவுப் பற்றாக்குறை ஏற்படவிருப்பதாகவும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு விலை அதிகரிக்கும் என்பதால் அனைத்து மக்களாலும் உணவைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும். இது எமது நாட்டுக்கு மட்டும் உரித்தான விடயமல்ல. ஐரோப்பாவிலும் இந்நிலைமையைக் காணக்கூடியதாக உள்ளது.இதற்கு முகம் கொடுப்பதற்கு ஏதுவாகவே உணவு பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்தது. உணவைப் பாதுகாப்பதே இந்நிகழ்ச்சித் திட்டத்திலுள்ள எமது முதலாவது இலக்கு ஆகும். உணவைப் பாதுகாப்பதன் மூலம் எமது…
ஈகுவடோரின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டம் நோக்கி சென்ற பயணிகள் விமானத்தில் தமாரா என்ற கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என கூறப்படுகிறது. இந்த நிலையில் விமானம் ஆம்ஸ்டர்டம் நகரை நெருங்கி கொண்டிருந்தபோது தமாராவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியில் அவர் அலறி துடித்தார். இதையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியானோ என்கிற பெண் தமாராவை விமான கழிவறைக்கு அழைத்து சென்றார். அதேபோல் விமானத்தில் பயணம் செய்த ஒஸ்திரியா நாட்டை சேர்ந்த 2 வைத்தியர்கள் மற்றும் ஒரு தாதியும் உதவிக்கு சென்றனர். தனக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் வலியுடன் தமாரா பரிதவித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் கர்ப்பமானதையே அறியாமல் குழந்தை பெற்றெடுத்ததை எண்ணி தமாரா ஆச்சரியத்தில் உறைந்து போனார். தமாரா குழந்தை பெற்றெடுத்த விடயம் அறிந்ததும் விமானத்தில் இருந்த…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான 650 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளை கைப்பற்றியதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது செய்துள்ளனர். மெக்சிகோவில் இருந்து மாத்தறை பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு அனுப்பப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்று தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, 650 கிராம் போதைப்பொருள் ஒரு பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, குறித்த பொதியை எடுத்துச் செல்ல வந்த சந்தேகநபரை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 13 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அண்மைக்கால வரலாற்றில் மெக்சிகோவில் இருந்து கைப்பற்றப்பட்ட முதல் ஐஸ் போதைப்பொருள் ஏற்றுமதி இதுவென சுங்கத் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளும் இந்த சோதனைக்கு உதவியுள்ளனர்.
சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். மழை நிலைமை : மட்டக்களப்பில் இருந்து பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்துவீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தவிர, பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து அடுத்த வருடத்தில், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்க்கிறது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இன்று (14) தெரிவித்தார். அரச சொத்துக்களை மறுசீரமைப்பதன் மூலம் அரசாங்கம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட முடியும் என்றும் ரொய்ட்டர்ஸுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (14) இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய இரு நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, ஜனவரி 25ஆம் திகதிவரை இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்து உத்தரவிட்டது. 176 விசேட வைத்திய ஆலோசகர்களால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் இன்று (14) வைத்தியசாலை கட்டடத்தின் நான்காவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 65 வயதுடைய கொனவல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுபோவில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வடமாகாண ஆளுநர் செயலகம் முன்பாக பல்வேறுபட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இலங்கை ஆசிரியர் சங்கம் இன்றைய தினம் (புதன்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தது. “வடமாகாண கல்வி அமைச்சில் காணப்படும் சீர்கேடுகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பாகவும் நிர்வாக ஆளுமையற்ற தன்மை காரணமாகவும் குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக ஆசியர்கள் தெரிவித்தனர். அதேவேளை, வடமாகாண கல்வித்துறையில் உள்ள சீர்கேடுகள் தொடர்பில் 2021 டிசம்பர் மாதம் வடமாகாண ஆளுநர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க 100 பக்க முறைப்பாடு ஒன்றை வழங்கியிருந்தோம். அதற்கு ஒரு விசாரணைக் குழுவை நியமித்தனர். குறித்த விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை கேட்டபோதும் அது இதுவரை எமக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. முறைப்பாட்டை வழங்கி அண்ணளவாக ஒரு வருடமாகிய போதும் கூட விசாரணை இன்னும் முடிவுறாத நிலைமையில் எமக்கு இதனுடைய பின்னணி தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் தவணை ஆரம்பித்த போதும் இரண்டாம் தவணைப் பரீட்சையை வைக்கமுடியாத அளவுக்கு வடமாகாண கல்வியமைச்சு…
உலக்கிண்ண உதைபந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது. இதனையடுத்து 7 ஆவது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அர்ஜெண்டினா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அந்த வகையில், மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது. உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை லியோனல் மெஸ்ஸி முந்தியுள்ளார். இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், எதிர்வரும், 18 ஆம் திகதி…