காத்தான்குடி புராதன நூதனசாலையிணை பார்வையிடும் நேரங்களில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகர சபை அறிவித்துள்ளது. திங்கள் முதல் வியாழன் வரை காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணிவரையும். வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையும் பொதுமக்கள் பார்வையிட முடியும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
# இன்று பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள். பிரதான நகரங்களுக்கான வானிலை முன்னறிவித்தல் • அனுராதபுரம் – பி.ப.…
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் தாம் ஈடுபட தயார் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. MAY (04) பிற்பகல் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து, குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. *உயர்தரப் பரீட்சை தமிழ் மொழி விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்.* உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் (முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம், இந்து நாகரிகம், பரதநாட்டியம், கீழைத்தேய சங்கீதம், கர்நாடக சங்கீதம், மேற்கத்திய சங்கீதம், சித்திரம், நாடகமும் அரங்கியலும் மற்றும் ஹிந்தி ஆகிய பாடங்களுக்கான பணிகளே தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய நகரங்களை அண்மித்து காணப்படும் விடைத்தால் திருத்தும் நிலையங்களில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாவும் பரீட்சைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் சிங்களம் மற்றும் ஆங்கில…
அனைத்து மாகாணங்களுக்கும் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை ஒன்லைனில் விரைவாக பெற்றுக்கொள்ளும் வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் (ICTA) மற்றும் மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இ-வாகன வருமான உரிமம் (eRL) திட்டத்தின் கீழ் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனம், புதிய வாகன வருமான உரிமத்தைப் பெறுவதுடன், தற்போதுள்ள வருமான உரிமத்தை (ஈஆர்எல்) புதுப்பிக்கும் வசதியும் கொண்டு உள்ளது. திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மற்றும் ஒன்லைன் முறையின் மூலம் உரிமத்தைப் பெறுவதற்கான நிதிக் கொடுப்பனவுகளை கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தலாம். மின்னஞ்சல் முகவரி மூலம் மக்கள் தொடர்புடைய தற்காலிக உரிமத்தைப் பெறுவார்கள் மற்றும் நிரந்தர உரிமம் சில நாட்களில் பதிவு அஞ்சல் மூலம் கிடைக்க பெறும். மக்கள் இந்த வசதியை நாட்டின் அனைத்து பிரதேச செயலாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் மேலும்…
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ட்ருப் (Troup) தோட்டத்தில் இன்று மாலை 4 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தரம் 8 இல் கல்வி கற்ற 13 வயது சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தற்கொலையா அல்லது விபத்தா, கொலையா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். மரணம் தொடர்பான விசாரனைக்கு மாவட்ட நீதவான் வரும் வரை சடலம் சிறுமியின் வீட்டிலேயே வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்ற போது வீட்டில் ஒருவரும் இருக்கவில்லை என தெரிய வந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் கொழும்பில் வேலைக்காக சென்றுள்ளதாகவும் தனது தாத்தா பாட்டியின் பாதுகாப்பிலேயே சிறுமியும் அவளது சகோதரனும் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார். இதேவேளை பலாங்கொடை வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் நேற்று பதற்றமான சூழல் காணப்பட்டது. ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையினால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை மருத்துவமனையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என மருத்துவமனையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்றும் நாளையும் நள்ளிரவு வரை கொழும்பு தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்க அதன் முகாமைத்துவம் தீர்மானித்துள்ளது. வெசாக்கை கொண்டாடும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கோபுரம் முழுவதுமாக ஒளிரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடாந்த சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் நிறைவடைகிறது. சிவனொளிபாதமலை யாத்திரை நள்ளிரவு வரை தொடரும் என்றும் அதனைத் தொடர்ந்து நாளை பிற்பகல் சிவனொளிபாதமலை முற்றத்தில் விசேட சமய வழிபாடுகள் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு கல்பொத்தாவெல ரஜமஹா விகாரையிலுள்ள விகாரை அறையில் புனிதப்பெட்டி மற்றும் சிலை அடுத்த வருடம் சிவனொளிபாத மலை யாத்திரை காலம் வரை வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகள் சிலவற்றை அமெரிக்காவை சேர்ந்த worldpackers.com இணைய தளம் வரிசைப் படுத்தி உள்ளது. இதில் உலகில் பயணம் செய்ய பாதுகாப்பான நாடுகளில் இலங்கை 12 ஆம் இடத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பயணம் சுவாரஸ்யமாகவும், நிதானமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும், பயமாக இருக்கக்கூடாது. அதனால்தான் உலகம் முழுவதும் பயணம் செய்ய பாதுகாப்பான சில நாடுகளைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன் என Lauren என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையில் மொத்தம் 13 நாடுகள் வரிசைப்படுத்தபட்டுள்ளன.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கம்பஹா மாவட்டத்தின் மஹர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த இரண்டு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி இந்திக்க வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.